நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், நவம்பர் 09, 2023

நோயற்ற வாழ்வு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 23
வியாழக்கிழமை

இன்று
வள்ளல் பெருமான்
அருளிச்செய்த
திரு அருட்பா


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே...


மனம் ஒன்றி உனது திருவடிகளை நினைக்கின்ற 
உத்தமருடைய உறவு வேண்டும் முருகா..

உள்ளொன்றும்  புறம் ஒன்றுமாக இருப்பவருடைய 
உறவு என்னுடன் கலந்து விடாதிருக்க வேண்டும் முருகா..

பெருமையுடைய நினது திருப்புகழை பேசிட வேண்டும்.
பொய் பேசாது இருக்க வேண்டும் முருகா..

பெரியோர் வகுத்தளித்த உயர் நெறியில் நடந்திட வேண்டும் முருகா..

காமம் (ஆசை)
குரோதம் (கோபம்)
லோபம் (சுயநலம்)
மோகம் (மயக்கம்)
மதம் (ஆணவம்)
மாச்சர்யம் (பொறாமை)
எனும் பேய்கள் எனைப் பிடியாதிருக்க வேண்டும் முருகா..

மங்கையைக் கலந்திருக்கும் ஆசையை மறக்க வேண்டும் முருகா..

உனை மறவாது
என்றென்றும் நினைத்திருக்க வேண்டும் முருகா..

கல்வியினால்
உயர்ந்த மதி விளைந்திட 
வேண்டும் முருகா..

நினது கருணையே செல்வமாக  நிறைந்திருக்க வேண்டும் முருகா..

நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும் முருகா..

தருமம் மிகுந்திருக்கும் சென்னை கந்த கோட்டத்தில்  ஓங்கி வளர்கின்ற முருகனே கந்தவேளே..

களங்கமற்ற நெஞ்சகத்தில்  குளிர்ந்த முகத்துடன் 
தூய மணியாகத் துலங்கும் சைவ மணியே.. 

சண்முகமாய் விளங்கும் தெய்வ மணியே..


முருகா.. முருகா!..
**
ஓம் நம சிவாய 
சிவாய திருச்சிற்றம்பலம்
***

14 கருத்துகள்:

  1. அதென்ன, பாடல் வரிகளை படிக்கும்போதே சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குரலில் மனதில் ராகத்துடன் வரிகள் வந்து விழுகிறது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ!! ஸ்ரீராம் மீக்கும்!!! கந்தா சரணம் குருகுஹா சரணம் கந்தபுராணம் பாடும் ராகம் குரல் ஒலித்திட அப்படியே வாசித்தேன்.

      கீதா

      நீக்கு

    2. @ ஸ்ரீராம்..
      அது தான் ஜீவராகம்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி ஸ்ரீராம்..

      முருகா முருகா..

      நீக்கு
    3. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி சகோ..

      முருகா முருகா..

      நீக்கு
  2. திருஅருட்பா பாடல் மிகவும் பிடிக்கும் . பாடலை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி ..

      முருகா முருகா..

      நீக்கு
  3. திருஅருட்பா ரொம்பப் பிடிக்கும். இங்கும் வாசித்துச் சுவைத்தேன் துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி சகோ..

      முருகா முருகா..

      நீக்கு
  4. முருகனை துதித்து வணங்கினோம். அவனருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி ..

      முருகா முருகா..

      நீக்கு
  5. ஒன்பதாம் வகுப்புப் படிக்கையில் இது தான் முதலில் மனப்பாடப் பகுதியில் வந்த பாடல். ரொம்பப் பிடிச்சது. இப்போவும் பள்ளியில் சொல்லிக் கொடுத்த ராகத்திலேயே காதில் வரிகள் விழுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் படிக்கும் போது எட்டாம் வகுப்பில் மனப்பாடப் பகுதியில் இந்தப் பாடல்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி அக்கா..

      முருகா முருகா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..