நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 11, 2023

தீப ஆவளி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 25
சனிக்கிழமை


நாளை தீபாவளி

தீப ஒளி திருநாள் என்று 
சொல்லிக் கொண்டு
சிலர் வருகின்றார்கள்..

ஆரியத்தை அடித்து 
விரட்டுகின்றார்களாம்..

எனில்,
விளக்கு ஒளி திருநாள் 
என்று வரட்டும்..
வந்து விரட்டட்டும்.. 

அப்படியே  விரட்டிக் கொண்டு
தனிவழியில் செல்லட்டும்..

தீபாவளி என்றால் தீப ஆவளி -
தீபங்களின் வரிசை

எதற்கு இந்த வரிசை?..

வரிசை என்றால் 
ஒழுங்கு என்று 
பொருள்.. 

உறவு முறைகளுக்குள் ஒருவருக்கொருவர் 
மங்கலப் பொருட்களை எடுத்துச் செல்வதை  - 
சீர் வரிசை என்று அழைத்து தமிழ் மகிழும்..

பாரம்பரிய தமிழ்க் குடும்பங்களுக்கு 
சீர்வரிசையின் பெருமை தெரியும்..

அது சரி.. 
எதற்கு இந்த தீபங்களின் வரிசை?..

இருள் தொலைந்ததற்கு..
நீதியும் நியாயமும் நிலை பெற்றதற்கு..

அநீதியும் அநியாயமும் ஆடலாம்.. 
தலைவிரி கோலமாக ஆடலாம்.. 

எத்தனை நாட்களுக்கு என்பது 
நல்லவர்களுக்குத் தெரியும்..





 நன்றி



மங்கல மரபுகள் வழுவாமல்
அறத்தின் வழி நின்று
திருவிளக்கு ஏற்றி வைத்து 
வணங்கிடுவோம்..

தீபாவளியைக்
கொண்டாடிடுவோம்..

(நாளைய பதிவு வெளியாகும் நேரம் 
விடியற்காலை 4:30)


Fb ல் கிடைத்த
காணொளிக்கு நன்றி..
 

ஓம் ஹரி ஓம் 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தீபாவளி நல்வாழ்த்துகள்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. பாரம்பரியத்தையும், நற்காரியங்களையும் சொல்லும் பழைய விகடன், கலைமகள் அட்டைப் படங்கள்.. பார்க்க பழைய நினைவுகள் வந்து அலையென மோதிக் செல்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் இனி கிடைக்காத பொற்காலம்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. ஐந்துக்கும் நான்கு முபபதுக்கும் பெரிய வித்தியாசமில்லை எனினும் முந்தும் பதிவு முத்தான பதிவிவாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனினும் நாளை பார்த்து விட்டுச் சொல்லுங்க..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  4. தீபாவளி பண்டிகை சிறப்பு பதிவு அருமை.
    படங்கள், காணொளி எல்லாம் அருமை.
    கிருஷ்ணருக்கும் ரதம் ஓட்டிய சத்தியபாமா ஸ்கூட்டர் ஓட்டுகிறார்.

    நரகாசுரனை வதம் செய்ய விரைந்து போகலாம்.


    காணொளியில் பெரியவா சொன்னது போல தினம் கோவிலுக்கு போவேன் முன்பு. இப்போது வளாக பிள்ளையார் தரிசனம். இரவு படுக்கும் போது பகவான் நாமங்களை சொல்லி வணங்கி விட்டு தான் தூங்க போகிறேன். அப்புறம் இறைவன் விட்ட வழி.



    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. கிருஷ்ணருக்கு ரதம் ஓட்டிய சத்தியபாமா ஸ்கூட்டர் ஓட்டுகிறார்..

      வித்தியாசமான கருத்தோவியம்..

      அனைவருக்கும்
      தீபாவளி நல்வாழ்த்துகள்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி..

      நீக்கு
  5. சிறப்பான தீப ஒளி பகிர்வு. படங்களும் சூப்பர்.
    வீடியோ நன்றாக இருந்தது நல்ல செயல்களை சொல்கிறது.

    தினமும் கோவிலுக்கு போவது தவிர்த்து மற்றையன செய்வேன்.எல்லாம் இறையருளே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடியோ நன்றாக இருந்தது நல்ல செயல்களை சொல்கிறது...

      தீபாவளி நல்வாழ்த்துகள்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி..

      நீக்கு
  6. நல்ல விளக்கங்கள். பதிவு நன்று துரை அண்ணா. காணொளியும் கண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபாவளி நல்வாழ்த்துகள்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி சகோ..

      நீக்கு
  7. தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      வாழ்த்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஐயா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..