நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 17
வெள்ளிக்கிழமை
இன்று
புள்ளிருக்கு வேளூர்
திருப்புகழ்
ஸ்ரீ கற்பக விநாயகர்
ஸ்ரீ செல்வமுத்துக் குமரன்
ஸ்ரீ தையல் நாயகி
ஸ்ரீ வைத்தீஸ்வரன்
சித்தாமிர்த தீர்த்தம்
வேப்பமரம்
ஸ்ரீ செல்வ முத்துக்குமரன் |
தனத்தன தானத் ... தனதான
தனத்தன தானத் ... தனதான
உரத்துறை போதத் ... தனியான
உனைச்சிறி தோதத் ... தெரியாது
மரத்துறை போலுற் ... றடியேனும்
மலத்திருள் மூடிக் ... கெடலாமோ
பரத்துறை சீலத் ... தவர்வாழ்வே
பணித்தடி வாழ்வுற் ... றருள்வோனே
வரத்துறை நீதர்க் ... கொருசேயே
வயித்திய நாதப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
உறுதியான ஞானத்தின்
தனிப் பொருளான
உன்னைப் போற்றி வணங்குதற்கு சிறிதும் அறியாமல்
(புழுதி அடைந்த)
மரக்கட்டை போல் அடியேனும்
மும்மலம் எனும் இருளால் மூடப்பட்டு கெட்டுப் போகலாமோ?..
மேல் நிலையில் நற்குணம் உடையவர்களின் வாழ்வாகியவனே..
உனது திருவடியில் பணிந்து வாழ்வு பெறுவதற்கு அருள்பவனே..
(தருகின்ற) வரங்களில் உறைகின்ற
சிவபெருமானின் திருமகனே..
வைத்திய நாதனாகிய பெருமாளே...
**
முருகா முருகா
முருகா முருகா..
ஓம் சிவாய
திருச்சிற்றம்பலம்
***
மும்மலம் அகற்றும் முத்தமிழ் வித்தகனைப் போற்றுவோம். ஓம் முருகா...
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
முருகா சரணம்..
முருகா... முருகா...
பதிலளிநீக்குமுருகா..
நீக்குமுருகா..
மகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
வைத்தியநாதப் பெருமாள் அனைவரையும் நலமாக வைக்கட்டும்.
பதிலளிநீக்குபாடலை பாடி முருகனையும், வைத்திய நாதரையும் வணங்கி கொண்டேன்.
தங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ..
முருகா.. முருகா.
செல்வமுத்துக் குமரனை வணங்கிப் போற்றுவோம்.
பதிலளிநீக்குகுமரனை வணங்கிப் போற்றுவோம்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ..
பல வருடங்கள் கழிச்சு பெண், மாப்பிள்ளை ஆகியோரால் ஆகஸ்டில் போனோம். நான் அம்மன் சந்நிதியோடு நின்றுவிட மத்தவங்க போய்ப் பார்த்துட்டு வந்தாங்க. அருமையான தரிசனம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றி அக்கா
திருப்புகழும், பொருளும், படங்களும் சிறப்பு, துரை அண்ணா
பதிலளிநீக்குகீதா
அன்பின் வருகையும்
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றி சகோ .
பதிவை ரசித்தேன். அதிலும் உங்கள் கவிதை
பதிலளிநீக்கு
நீக்குஇதில் நான் கவிதை ஏதும் எழுத வில்லையே..
தங்கள் அன்பின் வருகையும்
கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி நெல்லை..
முருகா சரணம்