நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 17, 2023

சஷ்டி 5


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று காரிருள் தீர்க்கும்
கார்த்திகை மாதத்தின் முதல் நாள் 
வெள்ளிக்கிழமை
சஷ்டி ஐந்தாம் நாள்

திருச்செங்கோட்டுத் திருப்புகழ்


தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த ... தனதான

அன்பாக வந்து உன்றாள் பணிந்து
ஐம்பூத மொன்ற ... நினையாமல்

அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க 
ளம்போரு கங்கள் ... முலைதானும்

கொந்தே மிகுந்து வண்டாடி நின்று 
கொண்டாடு கின்ற ... குழலாரைக்

கொண்டே நினைந்து மன்பேது மண்டி 
குன்றா மலைந்து ... அலைவேனோ..

மன்றாடி தந்த மைந்தா மிகுந்த 
வம்பார் கடம்பை ... அணிவோனே

வந்தே பணிந்து நின்றார் பவங்கள் 
வம்பே தொலைத்த ... வடிவேலா

சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ 
செஞ்சேவல் கொண்டு .... வரவேணும்

செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த 
செங்கோ டமர்ந்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


அன்புடன் வந்து 
உனது திருப்பதங்களைப் பணிந்து, 
ஐம்புலன்களும் ஒரு நிலைப்பட்டு 
உன்னை நினைத்து வழிபடாமல்,

அன்பு மிகுந்து 
நஞ்சுடன் கூடிய  கண்களும்,
தாமரை மொட்டு போன்ற
மார்பகங்களும்,

பூங்கொத்துகள் நிறைந்து
வண்டுகள் விளையாடுகின்ற
கூந்தலும் கொண்ட மகளிரை 

மனதில் நினைத்து அறியாமை 
பெருகி மனம் கலங்கி 
அலைந்து திரிவேனோ?..

பொற்சபையில் நடனம் 
புரிகின்ற சிவபெருமான் தந்தருளிய
திருக்குமரனே..

நறுமணம் நிறைந்த கடம்ப மலர் 
மாலையை அணிந்திருப்பவனே..

வந்து தரிசித்து பணிந்து நிற்கின்ற 
அடியார்களின் பிறவிகளைத் தொலைக்கின்ற 
வடிவேலினை உடையவனே..

பற்பல இடங்களுக்கும்
செல்கின்ற பொழுதில் -  
கந்தா - என, நான் வேண்டி 
அழைக்கும்போது
செஞ்சேவலுடன் என் முன்பாக 
வந்தருள வேண்டும்..

செந்நெல்லும் தாமரையும் 
ஒன்றாக வளர்கின்ற
திருச்செங்கோடு தலத்தில்
வீற்றிருக்கும் பெருமாளே..
**

திருச்செந்தூரில் நான்காவது நாளாக கந்தசஷ்டி விரதம் 
நோற்றிருப்பவர்க்கு 
சீர் வளர் சீர் தருமபுர மடாதிபதி அவர்களால்
பால் வழங்கப்பெற்றது..








 நன்றி
தருமபுர ஆதீனம்

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகெலாம்..

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வீரவேல் முருகனுக்கு அரோகரா
 

கார்த்திகை முதல் நாள்

நாடியே வந்தோம் சிவஜோதி
நல்லது எல்லாம் நிறைவாக..
தேடியே வந்தோம் சிவஜோதி
திருவருள் புரிவாய் ஒளியாக..

ஆனந்த ஜோதி ஐயப்பா..
அருள் தருவாயே ஐயப்பா..
கானக வாசா ஐயப்பா
காரிருள் தீர்ப்பாய் ஐயப்பா..

ஊர்நலம் காக்கும் ஐயப்பா
பேரருள் தருவாய்  ஐயப்பா..
ஹரிஹர புத்திர ஐயப்பா
அருளிட வேணும் ஐயப்பா..

புலி வாகனனே ஐயப்பா
பக்தி கொடுப்பாய் ஐயப்பா..
பூத நாயகனே ஐயப்பா
புத்தி கொடுப்பாய் ஐயப்பா..

பரிமேல் அழகா ஐயப்பா
மீட்சி அளிப்பாய் ஐயப்பா..
கஜ வாகனனே ஐயப்பா
காட்சி அளிப்பாய் ஐயப்பா..

அச்சன் கோயிலில் ஐயப்பா
அன்பின் தலைவா ஐயப்பா..
ஆரியங்காவில் ஐயப்பா
ஆண்டருள் புரிவாய் ஐயப்பா..

குளத்துப் புழையில் ஐயப்பா
குளிர் முகங்காட்டு ஐயப்பா..
எரிமேலி யிலே ஐயப்பா
இலங்கிடும் சுடரே ஐயப்பா..

சபரிமலை யிலே ஐயப்பா
சத்திய வடிவன் ஐயப்பா..
காந்த மலையிலே ஐயப்பா
கருணையின் ஜோதி ஐயப்பா..


சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
**
ஸ்வாமியே 
சரணம் ஐயப்பா

ஓம் நம சிவாய 
சிவாய திருச்சிற்றம்பலம்
***

11 கருத்துகள்:

  1. முருகனைக் கும்பிட்டு முறையிடுவோம்.  முற்றிய வினை தீர்கிறதா என்று பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் மலரும்
      நலம் எட்டும்..
      நல்மனம் வாழ்ந்திட்
      அருள் கிட்டும்..

      தங்களது அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      கந்தா போற்றி
      குமரா போற்றி..

      நீக்கு
  2. திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
    இன்று கார்த்திகை முதல் நாள் ஐயப்பன் பாமாலை அற்புதம்நீங்கள் எழுதிய வரிகள் எல்லாம் அருமை. பாமாலையை படித்து அய்யனை வேண்டிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      கந்தா போற்றி..
      கடம்பா போற்றி..

      நீக்கு
  3. கந்தசஷ்டி ஐந்தாம் நாள் முருகனை வேண்டிக் துதிப்போம்.

    கார்த்திகை முதல் ஐயப்பன் துதி அருமை.
    இங்கு நேற்று ஆஞ்சநேயர் கோவிலில் ஐயப்பன் வாலஸ்தாபனம் இடம்பெற்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      கந்தா போற்றி
      கடம்பா போற்றி..

      நீக்கு
  4. இன்றைய திருப்புகழும், ஐயப்பனுக்கான உங்கள் பாமாலையும் மிக நன்று, துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      கந்தா போற்றி
      கடம்பா போற்றி..

      நீக்கு
  5. திருப்புகழோடு உங்கள் ஐயப்பன் பாமாலையும் சேர்ந்து அற்புதம். நாளை சூர சம்ஹாரம். இன்று வேல் வாங்குகிறார் என நினைக்கிறேன். முருகன் கோயில் கொண்டுள்ள இடங்களில் எல்லாம் கோலாகலம். முருகன் தன் வேலால் அனைத்துத் துன்பங்களையும் துயர்களையும் களையட்டும் எனப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..