நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 04, 2023

அழகின் தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 18 
சனிக்கிழமை

குடந்தையில் மதிய உணவிற்குப் பின் - 
நெல்லை அவர்கள் நாச்சியார் கோயிலுக்குப் புறப்பட்டார்..

அங்கு நடை திறப்புக்குப் பின் 
பத்து நிமிட இடைவெளியில் 
எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்.. 

கிரஹணத்தை முன்னிட்டு கோயில் திறக்கப்படவில்லை..

அங்கிருந்து திருச்சேறை சென்று 
ஸ்ரீ சாரநாதப் பெருமாளைத்  தரிசனம் செய்தபின் 
குடந்தைக்குத் திரும்பி அங்கிருந்து பெங்களூருக்குப் புறப்பட்டார்..

நான் அவரது அன்பிற்கு மிகவும் 
கடமைப் பட்டிருக்கின்றேன்..

என்றாலும் -
அன்பின் நெல்லை அவர்களை உபசரிப்பதற்கு நல்ல நேரமாக அமையாததால் -  குற்ற உணர்வு.. 

அது விரைவில் நீங்குதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்பதே எனக்குள் பிரார்த்தனை..

இனியதொரு நாளை வகுத்துத் தந்த 
இறைவனுக்கு மீண்டும் நன்றி..
 

கபிஸ்தலம் 
ஸ்ரீ கஜேந்திர வரதர் 
திருக்கோயில்



திருவிண்ணகர்
ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோயில்


























திருநறையூர்
(நாச்சியார் கோயில்)
கோபுர தரிசனம்



திருச்சேறை
ஸ்ரீ சாரநாதப் பெருமாள் கோயில்









நட்பும் நலனும் நன்றென வாழ்க..
நாளும் நாயகன் நல்லருள் சூழ்க..
*
போதார் தாமரையாள் புலவி குல வானவர்தம் 
கோதா கோதில் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த
தூதாதூ மொழியாய் சுடர்போல் என் மனத்து இருந்த 
வேதா நின் அடைந்தேன்  திருவிண்ணகர் மேயவனே.. 1466
-: திருமங்கையாழ்வார் :-
**
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய 
***

16 கருத்துகள்:

  1. ஒவ்வொருமுறை அந்தப் பக்கம் வரும்போதும் திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோவில் பார்க்க முடியாமல் தட்டிக் கொண்டே போவதை முகநூலில் குறிப்பிட்டிருந்தேன்.  அடுத்த முறையாவது பார்க்கவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்வது போல இந்த முறையும் நினைத்துக் கொண்டேன்.  அப்படி பார்க்க முடியாமல் ஆனால் பார்க்க மிக ஆவல் இருக்கும் இன்னொரு கோவில் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில்.  இந்த முறையும் தாண்டிச் செல்லும்போது பார்த்ததுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மேல் விவரங்களும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. சென்ற மாதம் அக்டோபர் 25 ஆம் தேதி அதிகாலை ஒப்பிலியப்பன் கோவில் தரிசனம்.  அது முடிந்து திருநாகேஸ்வரம் தரிசனம்.  அது முடித்து சித்தப்பாவின் 80 க்காக சேங்காலிபுரம் சென்று விட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. சித்தப்பாவின் 80 க்கு நாச்சியார் கோவில் பட்டர் ஒருவர் வந்து விட்டு 'ஒரு வாரத்தில் கும்பாபிஷேகம், அதில் மும்முரம்' என்று அவசரமாக புறப்பட்டு சென்றார்.   சித்தப்ப்பாவின் மீதிருந்த மரியாதை காரணமாக வந்து சென்றார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  4. படங்கள் மிக அழகு. நம் பயணம் மனதில் வந்துபோனது.

    கிடைத்த நேரத்தில் உங்களுடன் பயணித்து கோவில்களுக்குச் செல்லலாம் எனத் தோன்றியதை எண்ணி சந்தோஷமடைகிறேன். தஞ்சையில் கொண்டுபோய் விடாமல், கும்பகோணத்தில் பிரிய நேர்ந்ததற்குக் காரணம் நேரமின்மையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் குடந்தையில் இறங்கிக் கொண்டது மகிழ்ச்சியே..

      ஓட்டுநரிடம் காசி விஸ்வநாதர் கோயிலில் இறக்கி விடச் சொல்லி அங்கு அன்னாபிஷேகத் தரிசனம் செய்து விட்டு தஞ்சை திரும்புவதற்கு ஏதுவாயிற்று..

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி. நன்றி நன்றி..

      நீக்கு
  5. கபிஸ்தலம் தவிர்த்து மற்றக் கோயில்கள் பார்த்திருக்கோம். படங்கள் அனைத்தும் மிக நன்றாக வந்திருக்கின்றன. நெல்லையுடனான சந்திப்பும் நன்றாக நடந்திருக்கிறது. இருவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கபிஸ்தலம், திருச்சேறை இப்போது தான் சென்றிருக்கின்றேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.
      நன்றி அக்கா..

      நீக்கு
  6. கோவில் படங்கள் எல்லாம் அருமை. தரிசனம் செய்து கொண்டேன்.
    இருவரும் சேர்ந்து கோவில்கள் தரிசனம் செய்தது மகிழ்ச்சியான தருணம். முன்பு நீங்கள் பகிர்ந்த கோவில்களை தரிசனம் செய்தது நினைவில் வந்து போனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில மாதங்களுக்கு முன்பு ஒப்பிலியப்பன் கோயில் தரிசனம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.
      நன்றி..

      நீக்கு
  7. கோவில் தரிசனங்கள் கண்டு கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  8. கோவில் தரிசனங்கள் கண்டு கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  9. படங்கள் எல்லாம் மிக மிக அருமை, துரை அண்ணா. ரசித்துப் பார்த்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..