நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 09, 2018

மார்கழிக் கோலம் 25

தமிழமுதம்

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே 
நாவினால் சுட்ட வடு.. (129) 
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 25


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த 

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை 
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி 
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்...

தித்திக்கும் திருப்பாசுரம் 


கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான்வளர்ந்து
உண்டது உலகேழும் உள்ளொடுங்க - கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவிஎன் நெஞ்சம்
இடமாகக் கொண்ட இறை..(2279)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

நல்லதோர் வீணை


சிவ தரிசனம் 

திருத்தலம்
திருக்காளத்தி


இறைவன்
ஸ்ரீ காளத்தி நாதர்


அம்பிகை
ஸ்ரீ ஞானப்பூங்கோதையாள் 

தல விருட்சம் - மகிழம்
தீர்த்தம் - ஸ்வர்ணமுகி ஆறு

பஞ்ச பூதத் தலங்களுள்
வாயுவின் பகுப்பு..


யானையும் நாகமும் சிலந்தியும்
வழிபாடு செய்த திருத்தலம்


இங்குதான்
வேடுவராகிய திண்ணப்பர்
நாளாறில் கண்ணிடந்து அப்பி
கண்ணப்ப நாயனாராகினார்..
*
ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி என்மனத்து உள்ளவே..(3/36)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


நாரணன் காண் நான்முகன்காண் நால்வேதன் காண்
ஞானப் பெருங் கடற்கோர் நாவாயன்ன
பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்காண்
புரிசடை மேற்புனலேற்ற புனிதன் தான்காண்
சாரணன் காண்சந்திரன்காண் கதிரோன் தான்காண்
தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க்கெல்லாங்
காரணன்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன் காணவன் என்கண்ணு ளானே..(6/8)

ஸ்ரீ சுந்தரர் அருளிய 
திருப்பாட்டு

இமையோர் நாயகனே இறைவாஎன் இடர்த்துணையே
கமையார் கருணையினாய் கருமாமுகில் போல்மிடற்றாய்
உமையோர் கூறுடையாய் உருவேதிருக் காளத்தியுள்
அமைவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே..(7/26)  
*
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருஅம்மானை 
13 - 14

  
கையார் வளைசிலம்பக் காதர் குழையாட
மையார் குழல்புரளத் தேன்பாய் வண்டொலிப்பச்
செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக்
கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை
ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்...

ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய்
ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த் தேனை
ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஒட்டுகந்து
தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய
கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும்
வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய்...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

9 கருத்துகள்:

  1. பாசுரமும் தமிழமுதமும் பருகி காளத்திநாதரையும் அம்பிகையையும் தரிசனம் செய்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் சகோ! காளஹத்தி நாதரையும், ஸ்ரீ ஞானப்பூங்கோதையாள் அம்மையின் தரிசனம் கண்டோம். யானையும், நாகமும், சிலந்தியும் பூசை செய்யும் அந்தப் படங்கள் வெகு அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இன்றைய பாசுரம் நன்று தரிசித்தேன்

    பதிலளிநீக்கு
  4. பாடல்களைப் படித்தேன். இன்பமுற்றேன். காளத்தியப்பனை தரிசித்துள்ளேன்.இன்று உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் கண்டேன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஐயா!

    தரிசனம் கண்டேன் தரும்பாடல் எல்லாம்
    அரிதெனக் கொண்டேன் அகம்!

    நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  6. அழகிய இனிய தரிசனம்....கண்டேன்

    பதிலளிநீக்கு
  7. பாசுரமும் தமிழமுதமும் அதற்கேற்ற அழகு ஓவியங்களும் மிக அருமை!

    பதிலளிநீக்கு
  8. உங்கள் பதிவுக்கு வருவதன் மூலம் திருப்பாவை திருவெம்பாவை ஒரு முறையாகிலும்ரிஃப்ரெஷ் செய்ய முடிகிறது நன்றி

    பதிலளிநீக்கு
  9. அம்பிகையின் படம் ரொம்பவே அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..