நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 17, 2025

முத்துச் சோள சாலட்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 3 
திங்கட்கிழமை


முத்துச் சோள சாலட்
(Corn Salad)

தேவையானவை :
பிஞ்சு சோளக் கதிர்கள்  2
தக்காளி 2
சின்ன வெங்காயம் 7
வீட்டுத் தயிர் 100 ml
வெண்ணெய் 50 gr
1 மிளகு 
2 சீரகத் தூள்
3 கல் உப்பு 
இவை மூன்றும் தேவைக்குத் தக்கபடி.. 


செய்முறை ;
பால் முத்துகள் என்று சொல்லப்படும் பிஞ்சு 
சோள முத்துக்களை கொதி நீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து  வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்..


தக்காளியைக் கழுவி விட்டு சன்னமாக அரிந்து 
கொள்ளவும்..


தயிரை - நீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொண்டு அதனுடன் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளவும்..

இப்போது கொதிநீரில் போட்டு எடுத்த சோள முத்துக்களையும்
தக்காளி, வெண்ணெய், உப்புத் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள் அனைத்தையும் தயிருடன் சேர்த்துக் கிளறி சில்லரில் சற்று நேரம்  வைத்திருந்து பயன்படுத்தவும்..

சத்து நிறைந்த உணவு..

வெங்காயத்திற்கு மாற்றாக வெங்காயக் குருத்துகளைக் கூட  - நறுக்கிச் சேர்த்துக் கொள்ளலாம்..

நான் குவைத்தில் இருந்த போது அவ்வப்போது செய்து கொள்வேன்.. 

இதில் தயிருக்குப் பதிலாக Milk Cream சேர்ப்பதும் உண்டு.. 

இதனுடன் எலுமிச்சம் பழச் சாறு, பச்ச மொளகா என்று சேர்த்துக் கொள்வது அவரவர் சொந்த விருப்பம்..

நமது நலம் நமது கையில்..
**
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

5 கருத்துகள்:

  1. அடடே...  நன்றாய் இருக்கிறதே...   செய்து விடலாம்.

    பதிலளிநீக்கு
  2. நேற்றுதான் முதல் முறையாக இப்படி சோளம் வாங்கி வேகவைத்து உப்பு மிளகுத்தூள் தூவிக் கொடுத்தாள் மருமகள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சோள முத்துக்களை உதிர்த்து வேகவைத்து, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டுள்ளோம். இப்படியும் அத்தனைப் பொருட்களையும் சேர்த்து செய்து சாப்பிட்டால் சுவையாகத்தான் இருக்கும். ஒரு முறை செய்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. நம் வீட்டில் சாலட் செய்யும் போது சோளமுத்துக்கள் சேர்த்தும் செய்வதுண்டு. இல்லை என்றால் நிலக்கடலை வெந்து அதோடும் சேர்த்துச் செய்வதுண்டு. இல்லை என்றால் சும்மா வேக வைத்து அதில் உப்பு மிளகுத்தூள் கொஞ்சம் வெண்ணை வேண்டுமென்றால் சேர்த்துச் சாப்பிடுவதுண்டு.

    நல்லாருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. தயிர் சேர்த்த சோள சலட் நன்றாக இருக்கிறது.

    சலாட்களில் சோளம் கலப்பதுண்டு தயிர் சேர்த்தது இல்லை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..