நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 27, 2025

ஆனந்தம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 13 
 வியாழக்கிழமை


 நீர்...

அனைத்திற்கும் ஆதாரமான ஒன்று..

சுத்தமான நீர்..  

உடலுக்கு இன்றியமையாத ஒன்று..

ஒவ்வொரு நாளும் விழித்ததில் இருந்து
உறங்கச் செல்வது வரை சீரான இடைவெளியில் சுத்தமான நீர் அருந்துவது தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..

பலருக்கும் உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுவதற்கு  ஒரு நாளில் போதிய அளவு சுத்தமான நீர் அருந்தாததே முக்கிய காரணம்..

உடலுக்கு ஏற்ற -  தேவையான சமச் சீர் உணவை மருத்துவர் ஆலோசனையின் பேரில் உண்பதும் அவசியம்..

காலையில் ஒரு முறையும்  மாலையில் ஒரு முறையும் பால் கலக்காமல் தேநீர் அருந்தலாம்.. வெள்ளை சீனிக்குப் பதிலாக கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்வது நல்லது..

கருப்பட்டி தற்போது விலை அதிகம்.. எளிய குடும்பங்கள் யோசித்துக் கொள்ள வேண்டும்..
நாட்டுச் சர்க்கரையில் கலப்பு அதிகம் என்றொரு தகவலும் தற்பொழுது கிடைக்கின்றது.. எனவே ஆய்ந்து அறிந்து தேர்ந்து கொள்வது அவரவர் கடமை..

ஓரளவிற்காவது பாரம்பரிய உணவு வகைகளின் பக்கம் திரும்ப வேண்டியது 
காலம் இடுகின்ற கட்டளை.. தற்கால 
சூழ்நிலையில் மிகவும் அவசியம்.. 

உலர்ந்த மிளகாயில் புற்று நோய்க்கான காரணிகள் கண்டறியப்பட்டுள்ளதால் உலர்ந்த மிளகாயைத்
 தவிர்ப்பது நல்லது ..

உலர்ந்த மிளகாயைக் குறைத்துக் கொண்டு தக்க அளவில் மிளகைப் பயன்படுத்த வேண்டும்..

இதேபோல புளியையும் குறைத்துக் கொள்வது அவசியம்...

வாரத்தில் ஒரு நாள் கசப்புடைய பாகற்காய் இரண்டு நாட்கள் துவர்ப்புடைய வாழைப் பூ, வாழைத் தண்டு எனச் சேர்த்துக் கொள்வது சிறப்பு..

செரிப்பதற்குக் கடினமான இறைச்சி வகைகளை விட்டொழிப்பது சாலச் சிறந்தது..

எனினும், இது அவரவர் விருப்பம்..

அன்றாட உணவில் 
கொழுப்பு மிகுந்து விடாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்..


நாற்பது வயதுக்கு மேல் - கொழுப்பு மிக்க உணவுகளையும் எண்ணெய் வகைகளையும் மருத்துவர் ஆலோசனையின்படி
குறைத்துக் கொண்டால் 
ஆனந்தம் ஆனந்தமே..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

6 கருத்துகள்:

  1. ஆனந்தமாய் வாழ ஆயிரம் யோசனைகள். 

    நாட்டுச் சர்க்கரையிலும் கலப்படமா?...  அய்யகோ...   எதுதான் சுத்தம்? 

    தண்ணீரைக் கூட சுத்தம் என்று சொல்ல முடிவதில்லை இப்போது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்ணீரைக் கூட சுத்தம் என்று சொல்ல முடிவதில்லை இப்போது

      உண்மை தான்..

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    விழிப்புணர்வு பதிவு அருமை.

    /அனைத்திற்கும் ஆதாரமான ஒன்று..
    சுத்தமான நீர்..
    உடலுக்கு இன்றியமையாத ஒன்று/

    உண்மை. சுத்தமான நீரே கிடைப்பது அரிதாகி விட்டது. அந்த காலத்தில், ஓடும் நீர் நிலைகளிலிருந்து நீர் கொண்டு வந்து சமைத்தோம். பருகினோம். கிணற்று நீரும் சுத்தமானது என அனைத்திற்கும் கிணற்று நீரை பயன்படுத்தினோம் . பிறகு அந்த நீரின் தன்மைகளை நாமே பராமரிக்காமல், அது சுத்தமில்லை என ஒதுக்கினோம். அப்படி ஒதுக்கியதில் அவைகளும் , நம்மிடமிருந்து ஒதுங்கி போக கற்று கொண்டன

    நாம் செய்த தவறுகளின் விளைவாக இப்போது பாட்டில்களில் பணம் கொடுத்து நீர் வாங்கி அருந்துகிறோம். எல்லாம் காலத்தை நாம் (ஏ)மாற்றும் முயற்சிகளின் விளைவு.

    தங்கள் கூற்று அனைத்தும் உண்மையானது. கலப்பிடங்கள் பெருகி வரும் காலகட்டத்தில் நம் நலனை நாம்தான் கவனித்துக் கொள்ள வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்ணீரைக் கூட சுத்தம் என்று சொல்ல முடிவதில்லை இப்போது.. அந்த நிலைக்கு ஆளாகி விட்டோம்...

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு
  3. நீரின் முக்கியத்துவமும் , உண்ணும் உணவில் விழிப்பும் தரும் நல்ல பகிர்வு .

    நல்லனவற்றை உண்டு நலமே வாழ்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லனவற்றை உண்டு நலமே வாழ்வோம்.

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..