நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 06, 2025

விரதங்கள்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 22
வியாழக்கிழமை


கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.. 269

என்கின்றார் ஐயன் திருவள்ளுவர்..

நோற்றல் என்பது குறிக்கோளில் உறுதியாக நிற்றல்.. விரதம் எனினும் இதுவே..

நோற்பது நோன்பு (அதனால், நம்மைக்) காப்பது விரதம்...

என்பது தமிழ் மூதாட்டி ஔவையார் தம் திருவாக்கு.. 


ஔவையார் மேலும் சில செய்திகளை 
அறிவுறுத்துகின்றார்..

மீதூண் விரும்பேல்..
வளவன் ஆயினும் அளவறிந்து உண்.. 

பஞ்சமில்லாத சோழ நாட்டுக்காரன் எனினும். தேவைக்கு மேல் உண்ண வேண்டாம் .. - என்று!..

அதையெல்லாம் உய்த்து உணராமல் போனதனாலேயே  இங்கு நோய்கள் மலிந்து விட்டன.

சரி.. அதற்கென்ன டா இப்போது?...

அவற்றை ஓரளவுக்காவது சரி செய்து கொள்ள வேண்டாமா?..

என்ன செய்வது!?..

விரதங்களை ஏற்பதும் அவற்றை நோற்பதும் தான்..

ஏத்துக்கலாம் தான்..
சாப்பாட்டு கடைக் காரங்க கஷ்டப்பட்டுடுவாங்களே...

அட!?..

விரதம் இருப்பதன் பயன்களை அறிவியல் ஆய்வுகளின் மூலம் கண்டுணர்ந்து உலகிற்கு சொல்லியதற்காக ஜப்பானை சேர்ந்த  உயிரியலார் நோபல் பரிசு பெற்றார்..


யோஷினோரி ஓசுமி Yoshinori Ohsumi..
 தன்னியக்க இயலில் இவர்  முக்கிய பங்காற்றினார்..

இவருக்கு 2016 ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது..

(Japanese cell biologist Yoshinori Ohsumi won the Nobel Prize in Medicine for his research on how cells recycle and renew their content..)

இதன்படி -
விரதம் இருக்கும் நேரத்தில் நமது செல்களே நமது உடலை சுத்தம் செய்து கொள்கின்றன.. பலவீனமான,  செல்களும்
புற்றுநோய் செல்களும்
 அழிக்கப்படுகின்றன.. நோய்கள் பலவற்றை உருவாக்குகின்ற காரணிகள் அழிகின்றன..

தொடர்ச்சியாக பன்னிரண்டு மணி நேரத்திற்கு எதுவும் உண்ணாமல்  விரதம்  இருக்கின்ற போது  இந்த நல்ல விஷயங்கள் நிகழ்கின்றன..

நமது விரத நேரம் படிப்படியாக அதிகரிக்கும் போது நன்மைகள் பலவும் நடக்கின்றன..


நாம் எப்போதும் எதையாவது,    தின்று கொண்டே இருந்தால் அந்த உணவை  செரிப்பதிலேயே அதிக சக்தி செலவாகி விடும் என்பதே மையப்புள்ளி.

சாப்பிடாமல் விரதம் இருக்கும் போது, நமது வயிற்றுக்கு ஓய்வு கிடைக்கின்றது.. அப்போது  நமது உடல் அதன் சக்தியைப் பயன்படுத்தி தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்கின்றது.. 

லைசோசோம்  - இது, ரத்தத்திலுள்ள கழிவுப் பொருட்களையும், தீங்கு விளைவிக்கும் நோய்க் கிருமிகளையும் செரித்து விடுகின்றது.. 

( Lysosome is an organelle in animal cells that digests waste products and harmful pathogens..)
 நன்றி விக்கி

நோய் வாய்ப்பட்டாலும்  எதையாவது தின்று தீர்க்கின்ற மனிதன் -  உண்ணாமல் இருந்து தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்வதற்கும்  வழியையும் வாய்ப்பையும் இயற்கையே  கொடுத்துள்ளது..

மாதந்தோறும்
அமாவாசை, ஏகாதசி, பிரதோஷம், நிறை நிலா, கார்த்திகை, விசாகம், உத்திரம் - இவை தவிர்த்து வருடாந்திர விரதங்கள்  என, எத்தனை எத்தனை விரத நாட்கள் நமக்கு!..

எடுத்த எடுப்பில் பன்னிரண்டு மணி நேரத்திற்கு விரதம் என்பது சிரமம் -  என்று உணர்ந்தால் மிக மிக எளிய உணவினை ஒரு பொழுதாக உட்கொண்டு நாளடைவில் பழக்கப் படுத்திக் கொள்ளலாம்.. பன்னிரண்டு வயதிற்கு மேல் என்றும் பதினெட்டு வயதிற்கு மேல் என்றும் இப்படியான  விரதங்களுக்கு  சொல்கின்றனர்.. 

உடல் நலம் உடையவர்கள் எதிர் காலத்தை உத்தேசித்து ஒரு வேளை உணவைக் குறைத்துக் கொள்வதால் பாதகம் இல்லை.. 

செரிப்பதற்கு எளிதான உணவுகள் என்றாலும் மிதமான அளவு தான் ஏற்றது..


ஒரு வேளை உண்பவன் யோகி 
இரண்டு வேளை உண்பவன் போகி - அனுபவிப்பவன்.
மூன்று வேளை உண்பவன் ரோகி - நோயாளன்.
நான்கு வேளை உண்பவன் துரோகி!..

என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..

பல தரப்பட்ட பணிகளில் இருப்போர், மாதச் சுழற்சிக்குள் இருக்கின்ற பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பயணம் செய்வோர்,
நோய் வாய்ப்பட்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள், முதியவர்கள் ஆகியோர் விரதம் அனுசரிக்க வேண்டும் என்பதில் கட்டாயம் இல்லை.. எனவே விரதம் அனுசரிப்பது  அவரவர் சூழ்நிலைகளைப் பொறுத்தது.. 

சூழ்நிலைகளைப் பொறுத்து - 
வாரத்தில் ஒருநாள் அல்லது பட்சத்தில் ஒருநாள் அல்லது
மாதத்தில் ஒரு நாள் விரதம் இருக்கலாம்.

மிதமாக உணவருந்தி விரதம் இருந்து  நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்..

நமது நலம் 
நமது கையில்..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

7 கருத்துகள்:

  1. முன்பு விரதம் இருந்திருக்கிறேன்.  ஆனால் அதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன.   மறுபடியும் தொடங்கலாமா என்று பார்க்கிறேன்.  உங்கள் பதிவு அந்த எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.  

    வாரத்தில் ஒருநாள், குறிப்பாக சனிக்கிழமை என்று வைத்துக் கொள்ளலாம்....   காலை எழுந்ததிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருந்து இரவு மட்டும் இரண்டு தோசையோ, இட்லியோ, சப்பாத்தியோ சாப்பிட்டு படுக்கலாம் என்பது எண்ணம்.முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை.. அருமை..

      தங்களன்பின்
      வருகையும்
      மேல் விவரக் கருத்தும்
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. இந்த விரதம் மட்டும் இல்லை. திருமணத்துக்கு முன்னரே நான் சில வாரங்கள் வாரத்தில் ஒரு நாள் மௌன விரதமும் முயன்றிருக்கிறேன். என் பணிப்பாடு அதைத் தொடர விடவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரதத்தைத் தொடருங்கள்...

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. விரதம் பற்றிய தொகுப்பு அருமை. உடலின் நன்மைக்காக உண்ணாநோன்பு இருந்தால் நல்லது எனக்கூறி நோபல் பரிசு பெற்றவரைப் பற்றி அறிந்து கொண்டேன். நல்லதொரு தகவல்கள்.

    ஆமாம். விரதத்தின் பயன்கள் என கூறி விட்டு, இத்தனை சுவையான படங்களை தேர்ந்தெடுத்து பதிவில் போட்டு விட்டீர்களே..! அது சரி..! இந்த ஆசை என்ற ஒன்றை அடக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும் இல்லையா? அதற்காகத்தான் இந்த படங்களோ..?:)) பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. சரியாகச் சொல்லி விட்டீர்கள்..

      தங்களன்பின்
      வருகையும்
      மேல் விவரக் கருத்தும்
      நன்றியம்மா

      நீக்கு
  4. விரதம் இருப்பதன் நன்மைகள் , உணவுக்கட்டுப்பாடு, பற்றி நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..