நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 03, 2025

கடலை உருண்டை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 19
திங்கட்கிழமை


வழக்கத்தில் இருந்து மறைந்து. கொண்டிருக்கின்ற அருமையான தின்பண்டம் - கடலை உருண்டை...

இன்று நாம் -  நமது கைகளாலேயே
நமது வீட்டில்
எளிமையான வேர்க்கடலை மாவு உருண்டை செய்வது எப்படி என்று இந்தப் பதிவின் வழி பார்க்கலாம்..

வறுத்த வேர்க்கடலை அரை கிலோ (தோலை நீக்கி விடவும்)
 உருண்டை வெல்லம் கால் கிலோ  
ஏலக்காய் பொடி சிறிது

பளிச் என்றிருக்கும் வெல்லத்தை விட பழுப்பு நிற உருண்டை வெல்லம் நல்லது..

உருண்டை வெல்லத்தை உடைத்து சமச்சீராக தூளாக்கிக் கொள்ளவும்..

வறுத்த வேர்க்கடலையை 
சிற்றரவையில் இட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்தெடுத்த மாவை சுத்தமான தாம்பாளத்தில் கொட்டி வெல்லத் தூளையும் சேர்த்து -
இத்துடன்  நாலு தேக்கரண்டி பசு நெய் விட்டுக் கிளறி உருண்டைகளாக உருட்டி சுத்தமான பாத்திரத்தில் வைத்திருந்து  பிள்ளைகளுக்குக்  கொடுக்கவும்..

அதெல்லாம் முடியாது. இப்போதே தின்றாக வேண்டும் என்று ஆவல் பிறந்தால் அரை மூடி தேங்காயைத் துருவி மாவில் போட்டுக் கிளறி தின்று விடலாம்..

அமிர்தத்திற்கு அமிர்தம்!..
ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம்!..

அரைக் கிலோ வேர்க் கடலைக்கு இருபது  உருண்டைகள் கிடைக்கும்..

வேர்க் கடலைக்குப் பதிலாக வரகரிசியை மிதமான சூட்டில் சிவக்க வறுத்து அரைத்து மாவாக்கியும் இதேபோல
செய்யலாம்..

தினை மாவிலும் செய்யலாம்..

நமது நலம் 
நமது கையில்..
ஃஃ

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. வெல்லப்பாகு பிடிக்க வேண்டாமா?  அப்படியேவா உருட்டுவது?  ஒட்டுமா?

    பதிலளிநீக்கு
  2. எதற்கு வம்பு என்று எந்தக் கிழமையும் குறிப்பிடாமல் வெறும் 'கிழமை' என்று மட்டும் விட்டு விட்டீர்களோ!

    பதிலளிநீக்கு
  3. சூப்பர் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  4. இப்போதும் கடைகளுக்குச் செல்லும்போது அடிக்கடி கடலை உருண்டை, கடலை மிட்டாய் வாங்குவது வழக்கம்.  குறிப்பாக கோவில்பட்டி கடலைமிட்டாய்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..