நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 17
சனிக்கிழமை
சமையலும் உணவும்
இனிதாவதற்கு சில குறிப்புகள்...
அரிசியைக் கழுவி சற்று நேரம் ஊற வைத்த பின்னர் சமைப்பது நல்லது
புட்டு, இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை முதலிய பாரம்பரிய உணவுகளுக்கு முதலிடம் கொடுப்பது நல்லது.
ஒரு நாளின் சமையலுக்கு இரண்டு வகைக் காய்கள் மட்டும் போதும்..
கீரைகளுக்கு அரை வேக்காடு தான்.. செரிமான பிரச்னை உடையவர்களும் முதியவர்களும் கீரைகளிடம் கவனமாக இருப்பது நல்லது..
காய்களை எண்ணெயில் வதக்கி உண்பதை விட அளவான நீரில் குறைவான உப்பு காரத்துடன் வேக வைத்து உண்பது சாலச் சிறந்தது..
சித்த மருத்துவர்களின் பரிந்துரை - உப்பு புளி காரம் இவற்றைக் குறைத்துக் கொள்வது ஆரோக்கியம்..
உணவில் அதிக அளவிலான காரம், புளி, உப்பு இவை மிகக் கெடுதல்.. குறைத்து கொள்வது நல்லது..
நமது வீட்டிலேயே தயிர் மோர் தயாரிக்கப்பட வேண்டும்.. வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிரும் மோரும் தான் இன்றைய காலகட்டத்தில் உகந்தவை.. நம்பகமானவை..
தினமும் சிறிதளவாவது
தேங்காய்த் துருவலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்..
இரவு உணவாக
வாரத்தில் ஒருநாள் குழைய வடித்த பச்சரிசிச் சோற்றில் பால் விட்டுச் சாப்பிடுவது நல்லது.. பால் பசும்பாலாக இருக்க வேண்டும்..
தவிர,
வாரத்தில் இரண்டு நாட்கள் தேங்காய்ப் பால் சோறு இருப்பது அவசியம்..
எண்ணெயில் பொரிக்கப்பட்டு உப்பு மிளகாய்த் தூள் தூவி விற்கப்படும் பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது..
மேலும், உணவக உணவுகளில் மிகக் கவனமாக இருத்தல் அவசியம்..
வெளி உணவுகளில் விலகி இருப்பதே உத்தமம்..
சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுப்பதில் மிக மிகக் கவனம் தேவை..
பண்டைய செக்கில் பிழியப்படுகின்ற எண்ணெய் சூடாவதில்லை..
இன்றைய காலகட்டத்தில்
இயந்திரச் செக்கு என்றாலும் குறைவில்லை.. வித்துகளை ஆட்டிப் பிழிந்தெடுக்கப்பட்டஎண்ணெய் வகைகளே சிறந்தவை..
வெள்ளைச் சீனி கெடுதலைத் தரும். இயற்கையான வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
அரிசியுடன் - வரகு, தினை, சோளம், கேழ்வரகு எனப் பழகுவது நல்லது..
இயன்றவரை கீரைகள்
காய் கனிகள் இவற்றை சற்று கூடுதலாக எடுத்துக் கொள்வதும் நல்லதே..
ஆடல் பாடல் கேளிக்கை கும்மாளங்களுடன் விற்பனைக்கு வருகின்ற பொருட்களை விலக்கி வைப்பதில் தவறே இல்லை..
இந்த விஷயத்தில்
எப்போதும் முனைப்பாக இருத்தல் வேண்டும்..
இன்றைக்கு
ஒரு பொருள் இரண்டு தரம் விளம்பரத்தில் வந்து - மூன்றாம் தடவை வருவதற்குள் அது வீட்டுக்குள் வந்து விடுகின்றது.. அந்த அளவுக்குப் பணப்புழக்கம்..
வீட்டிலும் கோயிலிலும் தீப வழிபாட்டிற்கு - இயற்கையாகப் பெறப்பட்ட விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், நெய் இவைகளே தலை சிறந்தவை... தலைமுறைகளை வாழ வைப்பவை..
வீட்டில் சிறிய அளவிலான அம்மி வாங்கி வைத்து இயன்றவரை அதில் மசாலா அரைத்தெடுத்தால் எதிர்வரும் தலைமுறை என்றென்றும வாழ்த்தும்..
வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிரும் மோரும் மசாலாப் பொடிகளும் தான் இன்றைய கால கட்டத்தில் நம்பகமானவை.. உடலுக்கு உகந்தவை..
மிதமான உணவுடன் வாரந்தோறும் ஒரு நாள் விரதம் இருப்பது நல்லது.
இறைச்சி உணவுகள் அவரவர் விருப்பம்.. அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஆரோக்கிய சமையல்
ஆனந்த சமையல்..
நோய்க்கு இடம் கொடேல்..
-: ஔவையார் :-
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
நீங்கள் சொல்லி இருப்பது யாவும் நல்ல யோசனைகள். சில பின்பற்றப்பட்டுக் கொண்டிருப்பவை. சில முயற்சிக்கலாம். சில கஷ்டம்தான்!
பதிலளிநீக்குகீரைகளை அரைவேக்காட்டில் எடுக்க வீட்டில் சம்மதிப்பதில்லை! நான் வெண்டைக்காய், முட்டைகோஸ் எல்லாம் கூட அப்படிதான் சொல்வேன். ஆனால் மகன்கள் அப்படி செய்தால் சாப்பிடுவதில்லை என்று - முன்னர் அப்படி சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள்தான் - நன்றாக அடுப்பில் வைத்து எடுத்து விடுகிறார்கள்.
பதிலளிநீக்கு