நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 07, 2025

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 23
வெள்ளிக்கிழமை


 ஸ்ரீ பெருவுடையார்
ஸ்ரீ பிரஹந்நாயகி

சிவராத்திரி தரிசனம்

தஞ்சை திருப்புகழ்


தந்தன தானன ... தனதான

அஞ்சன வேல்விழி ... மடமாதர்
அங்கவர் மாயையி ... லலைவேனோ

விஞ்சுறு மாவுன ... தடிசேர
விம்பம தாயரு ... ளருளாயோ

நஞ்சமு தாவுணு ... மரனார்தம்
நன்கும ராவுமை ... யருள்பாலா

தஞ்சென வாமடி ... யவர்வாழத்
தஞ்சையில் மேவிய ... பெருமாளே.
-: அருணகிரிநாதர் :-

பதிவில் 
தஞ்சை முருகப்பெருமானின்
திருக்கோலங்கள்


மை பூசிய வேலைப் போல விளங்குகின்ற கண்களை உடைய அழகிய
பெண்களிடத்தில்  மயக்கம் கொண்டு அவர் பின்னே அலைவேனோ?

அதனின்று நான்
 விடுபட்டு மிகுந்த புகழுடன்  
விளங்குகின்ற உனது திருவடிகளைப்
போற்றுவதற்கு -

  உனது திருவருளை எனக்கு வழங்கக் கூடாதோ?.

நஞ்சினை அமுதாக உட்கொண்ட சிவபெருமானுடைய
திருமகனே உமாதேவி பெற்றருளிய பாலனே..

நீயே சரணம் - எனக் கொண்ட அடியார்கள் வாழ்வதற்கென
தஞ்சையில் வீற்றிருக்கும் பெருமாளே...


 முருகா முருகா
முருகா முருகா

ஓம் சிவாய நம ஓம்
**

6 கருத்துகள்:

  1. சிவனும், சிவபாலனும் நம்மைக் காக்கட்டும்.  ஓம் முருகா...  ஓம் நமச்சிவாய... 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு நன்றி.
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. பெருவுடையார் தரிசனம் பெற்று மகிழ்ந்தோம். அனைவரையும் அவனருள் காக்கட்டும்.

    தஞ்சை முருகா உன்பாதம் சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு நன்றி.
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி

      நீக்கு
  3. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..