நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 14
வெள்ளிக்கிழமை
தானா தானா தானா தானா
தானா தானத் ... தனதானா
ஊனே தானா யோயா நோயா
லூசா டூசற் ... குடில்பேணா
ஓதா மோதா வாதா காதே
லோகா சாரத் ... துளம்வேறாய்
நானே நீயாய் நீயே நானாய்
நானா வேதப் ... பொருளாலும்
நாடா வீடா யீடே றாதே
நாயேன் மாயக் ... கடவேனோ
வானே காலே தீயே நீரே
பாரே பாருக் ... குரியோனே
மாயா மானே கோனே மானார்
வாழ்வே கோழிக் ...
கொடியோனே
தேனே தேனீள் கானா றாய்வீழ்
தேசார் சாரற் ... கிரியோனே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...
பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
ஊன் பொருந்திய இவ்வுடலே நான்தான் என்று நினைத்து,
முடிவில்லாத நோயாளனாய், அழிவுள்ளதும், ஊஞ்சலைப் போல் மாறி மாறி வருகின்றதுமான இத்தேகத்தை விரும்பி,
நூல்களைப் படித்தும் வம்பு செய்கின்ற சமய வாதச் செயல்களில் ஈடுபடாமலும், உலக ஆசாரங்களில் கட்டுப்படாமல் உள்ளம் வேறுபட்டு
நானே நீயாக நீயே நானாக உன்னிடம் ஒன்றுபட்டு
பலவகையான வேதப் பொருள் கொண்டு
உன்னை விரும்பி வீடுபேற்றை
அடையாதவனாக நாயேன் முடியக் கடவேனோ?..
விண், காற்று, தீ, நீர், பூமி எனும் ஐந்து பூதங்களாக விளங்கி,
இவ்வுலகுக்கு உரியவனாகத் திகழ்பவனே..
என்றும் நிலைத்திருக்கின்ற பெரியவனே எமையாளுகின்ற அரசனே
மான் போலும் அழகிய வள்ளிக்கும்
தேவயானைக்கும் கணவனே
கோழிக் கொடியை உடையவனே..
தேனாக இனிப்பவனே தேனாறு எனும் நீண்ட காட்டாறு பாய்கின்ற
ஒளி நிறைந்த குன்றக்குடி மலையில் அமர்ந்தவனே..
ஈசன் மகனே செவ்வேள் முருகனே அழகனே தலைவனே..
தேவனே தேவர்களின் பெருமாளே...
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
ஓம் முருகா... ஓம் நமச்சிவாய...
பதிலளிநீக்குதங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅருணகிரிநாதரின் இன்றைய திருப்புகழ் பாடலும், அதன் விளக்கமும் நன்றாக உள்ளது. முருகா சரணம். 🙏
முத்துக் குமரா சரணம். 🙏
கந்தா சரணம். 🙏
கார்த்திகேயா சரணம். 🙏. பகிர்வுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி
திருப்புகழ் பாடலை பாடி விளக்கத்தை படித்து கொண்டேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றியம்மா
குன்றக்குடியில் அமர்ந்த குமரா உன்பாதம் பணிகின்றோம் காப்பாய் எம்மை.
பதிலளிநீக்குதங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி மாதேவி