நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 24
புதன் கிழமை
குறளமுதம்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.. 511
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த
திருப்பாவை
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.. 24
நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்... 14
ஸ்ரீ திருநாவுக்கரசர்
அருளிச்செய்த
போற்றித் திருத்தாண்டகம்
திரு ஆரூர்
பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப் படையுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி
உலகுக் கொருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி... 4
**
நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
**
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
பொன்னார் மேனியன் திருவடி நிழல் போற்றி. நாராயணனின் மலரடி அருள் போற்றி.
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குதிருப்பாவை,திருவெம்பாவை, திருத்தாண்டகம் பாடல்கள் பாடி வணங்கினோம்.
பதிலளிநீக்குஹரி ஓம்.
சிவாய நமக.
ஓம் நம சிவாய
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தேர்ந்தெடுத்த குறளமுதம் அருமை. ஆண்டாள் நாச்சியார் அருளிய பாசுர பாடலும், சிவனடியார்கள் அருளிய திருவெம்பாவை, திருத்தாண்டகம் பாடலும் படித்து மகிழ்ச்சியடைந்தேன்.
அனைவரும் நலமுடன் வாழ இறைவனை மனதாற பிரார்த்தித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.