நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 11
இரண்டாம்
வெள்ளிக்கிழமை
சந்திர சடாதரி முகுந்த சோதரி! துங்க சலச
லோசன மாதவி சம்ப்ரம பயோதரி சுமங்கலி
சுலட்சணி சாற்றரும் கருணாகரி
அந்தரி வராகி சாம்பவி அமர தோத்ரி! அமலை
ஜெக சால சூத்ரி அகில ஆத்ம காரணி வினோத சய நாரணி
அகண்ட சின்மய பூரணி
சுந்தரி நிரந்தரி துரந்தரி வரை ராச சுகுமாரி
கௌமாரி உத்துங்க கல்யாணி புஷ்பாஸ்தி ராம்புய
பாணி தொண்டர்கட்கு அருள் சர்வாணி
வந்து அரி மலர்ப் பிரமராதி துதி வேத ஒலி வளர்
திருக் கடவூரில் வாழ் வாமி சுப நேமி புகழ் நாமி
சிவ சாமிமகிழ் வாமி அபிராமி உமையே!..
- : அபிராமி திருப்பதிகம் :-
![]() |
ஸ்ரீ வடபத்ரகாளியம்மன் தஞ்சை |
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.. 50
-: அபிராமி அந்தாதி :-
ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
நல்லதும் தீயதுஞ் செய்திடும் சக்தி
பதிலளிநீக்குநலத்தை நமக்கிழைப்பாள்;
அல்லது நீங்கும்" என்றேயுல கேழும்
அறைந்திடு வாய்முரசே
சொல்லத்தகுந்த பொருளன்று காண் இங்குச்
சொல்லு மவர்தமையே
அல்லல் கெடுத்தம ரர்க்கினை யாக்கிடும்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை.அம்மன் படங்கள் அருமை. வெள்ளியன்று பகிர்ந்த ஸ்லோகங்களை பாடி அம்மனை தரிசித்துக் கொண்டேன். 🙏. அம்மன் அனைவருக்கும் நல்ல வாழ்வினை தருமாறு பிரார்த்தித்தும் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வெள்ளி நாளில் அபிராமி அந்தாதி பாடல்கள் பாடி வராகி அம்மன், காளி அம்மனை வணங்கினோம்.
பதிலளிநீக்குநன்றி. படங்கள் அழகு.
அபிராமி அந்தாதி பாடி வடபத்திரகாளி, வாராஹி அம்மனை தரிசனம் செய்து கொண்டேன்.
பதிலளிநீக்குஓம் சக்தி ஓம்...
பதிலளிநீக்கு