நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 27, 2025

ஐயாறு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 14
திங்கட்கிழமை

திரு ஐயாறு


ஸ்ரீ பஞ்சநதீஸ்வரம்..


அன்னை அறம் வளர்த்த நாயகியுடன் ஐயன் ஐயாறப்பர் அருளாட்சி புரிகின்ற திருத்தலம்..

நிகழும் ஸ்ரீ குரோதி வருடத்தின் மங்களகரமான தை மாதம் இருபத்தோராம் நாள் திங்கட்கிழமை ஆகிய சுபயோக சுப தினத்தில் காலை 9:30 மணியளவில் 
 (3 - 2 - 2025) திருக்கோயிலில்
திருக்குடமுழுக்கு வைபவம்.. 
























காவிரியின் பூசப் படித்துறையில் ஸ்வாமி அம்பாள் எழுந்தருளும் மண்டபத்திலும் திருப்பணி..







காவிரி மண்டபத்தில் குடமுழுக்கு வைபவம் முன்னதாக தை 18 வெள்ளிக்கிழமை ( 31/1) காலைப் பொழுதில் நிகழ்கின்றது....

அனைவரும் வருக..
அம்மையப்பன் அருள் பெறுக..

கங்கையைச் சடையுள் வைத்தார் 
  கதிர்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் 
  திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் 
  மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் 
  ஐயன்  ஐயாறனாரே.. 4/38/1
-: திருநாவுக்கரசர் :- 

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

5 கருத்துகள்:

  1. அருமையான படங்கள். பெரிதாக்கிப் பார்த்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. எத்தனை வருடங்களுக்குப் பிறகு நடக்கும் திருமுழுக்கு?  சிறப்பாக நடக்கும் என்பதில் ஐயமில்லை.  அருமையான கோவில். எப்போது வரும் வாய்ப்பு கிடைக்கப் போகிறதோ, தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் கூட்டத்தில் சென்று சிக்கிக் கொள்ள வேண்டாம்.  திருமுழுக்கு முடிந்தபிறகு 48 நாட்கள் சென்று தரிசித்தால் அதே புண்ணியம்தான் என்பதால் பிற்பாடு கூட்டமில்லாத நாளில் சென்று வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. திரைக்கு முழுக்கு காண்பதற்காக திருப்பணிகள் முடித்து , வர்ணம் பூசப்பட்டு அழகுக் காட்சி தருகிறது கோவில்.

    நிறைந்த படங்களை கண்டு ஐயாறப்பரை வணங்கினோம்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..