நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 17, 2025

தை வெள்ளி 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 4
முதல் வெள்ளிக்கிழமை


கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி 
அருள்வாமி அபிராமியே.. 


தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே 
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே..
-: அபிராமி பட்டர் :-

என்றென்றும் இதுவே
பிரார்த்தனை

ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. செங்கையில் வண்டு
    களின் களின் என்று ஜெயம்
    ஜெயம் என்றாட இடை சங்கதம்
    என்று சிலம்பு புலம்போடு தண்டை
    கலந்தாட இரு கொங்கை கொடும்
    பகை என்றென்ன மென்று குலைந்து
    குலைந்தாட
    மலர் பங்கயமே
    உன்னை பாடிய பிள்ளை
    நிலாவும் எழுந்தாட விரைந்து
    வாராயோ எழுந்து வாராயோ
    கனிந்து வாராயோ
    அபிராமியே நின் பத்மபாதம் பணிகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. 9, 10 தேதிகளில் அபிராமி அம்மன் தரிசனம் கிடைத்தது.
    இப்போது முதல் வெள்ளியில் மீண்டும் அம்மன் தரிசனம்.
    அபிராமி பட்டர் அருளிய பாடல்களை பாடி அம்மனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. ஓம் நமோ நாராயணாய...

    ஓம் நமோ நமசிவாய...

    பதிலளிநீக்கு
  4. வெள்ளிநாளில் அபிராமி அந்தாதிபாடல்கள் பகிர்வு சிறப்பு.
    பாடல்கள் பாடி அகிலாண்ட அன்னையை வணங்கிக் கொண்டோம்.
    ஓம் சக்தி ஓம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..