நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 18
வியாழக்கிழமை
குறளமுதம்
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.. 416
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த
திருப்பாவை
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.. 18
நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.. 8
ஸ்ரீ ஞானசம்பந்தர்
அருளிச்செய்த
கோளிலி திருப்பதிகம்
அந்தரத்தில் தேரூரும்
அரக்கன்மலை அன்றெடுப்பச்
சுந்தரத்தன் திருவிரலால்
ஊன்றஅவன் உடல்நெரிந்து
மந்திரத்த மறைபாட
வாளவனுக் கீந்தானும்
கொந்தரத்த மதிச்சென்னிக்
கோளிலி எம்பெருமானே. 8
ஸ்ரீ சுந்தரர்
அருளிச்செய்த
ஏகம்பத்திருப்பதிகம்
சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
பாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை
அந்தமில் புகழாள் உமை நங்கை
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 8
நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
**
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
ஓம் நமச்சிவாய, நாராயணாய நம!
பதிலளிநீக்குமகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்
ஓம் ஹரி ஓம்
நலம் வாழ்க
ஓம் நம சிவாய ...
பதிலளிநீக்குமகிழ்ச்சி
நீக்குநன்றி தனபாலன்
ஓம் ஹரி ஓம்
நலம் வாழ்க
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய குறளமுதம் அருமை. ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை, மற்றும், மூவர் அருளிய திருப்பதிகங்களை பாடி மகிழ்ந்தேன். பரம்பொருளான நாராயணரையும், எந்தை சிவனாரையும், கைக்கூப்பி தொழுது அவரருள் என்றும் கிடைத்திட வேண்டி பிரார்த்திப்போமாக...! 🙏. ஓம் நமசிவாய. ஓம் ஹரி ஓம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
பிரார்த்தனையும்
மகிழ்ச்சி..
நன்றியம்மா
ஓம் ஹரி ஓம்
நலம் வாழ்க
பகிர்ந்த பாடல்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குபடங்கள் அருமை.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றியம்மா
ஓம் ஹரி ஓம்
நலம் வாழ்க
சிறப்பு நலம் தானே புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குதாங்களும் நலம் தானே
நீக்குபுத்தாண்டு வாழ்த்துகள்..
மகிழ்ச்சி..
நன்றி
ஓம் ஹரி ஓம்
நலம் வாழ்க
ஹரி ஓம்.
பதிலளிநீக்குசிவாய நமக.
மகிழ்ச்சி..
நீக்குநன்றி
ஓம் ஹரி ஓம்
நலம் வாழ்க