நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 04, 2025

மார்கழி 20

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 20
சனிக்கிழமை

குறளமுதம்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 
குத்தொக்க சீர்த்த இடத்து.. 490


அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த
திருப்பாவை

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.. 20
 நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்

ஸ்ரீ மாணிக்கவாசகர்
அருளிச்செய்த
 திருவெம்பாவை

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய். . 10
**

ஸ்ரீ ஞானசம்பந்தர்
அருளிச்செய்த
கோளிலி திருப்பதிகம்

தடுக்கமருஞ் சமணரொடு 
  தர்க்கசாத் திரத்தவர்சொல்
இடுக்கண்வரும் மொழிகேளா 
  தீசனையே ஏத்துமின்கள்
நடுக்கமிலா அமருலகந் 
  நண்ணலுமாம் அண்ணல்கழல்
கொடுக்ககிலா வரங்கொடுக்குங் 
  கோளிலி எம்பெருமானே.. 10

நம்பனைநல் அடியார்கள் 
  நாமுடைமா டென்றிருக்கும்
கொம்பனையாள் ராக் 
  கோளிலி எம்பெருமானை
வம்பமருந் தண்காழிச் 
  சம்பந்தன் வண்தமிழ்கொண் 
டின்பமர வல்லார்க 
  ளெய்துவர்கள் ஈசனையே.. 11
திருப்பதிகம்
நிறைவுற்றது.


ஸ்ரீ சுந்தரர்
அருளிச்செய்த
ஏகம்பத்திருப்பதிகம்

எள்க லின்றி இமையவர் கோனை
  ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளத் துள்கி உகந்து உமை நங்கை
  வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
  வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
  காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.  10  

பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
  பெரிய எம்பெருமான் என்றெப் போதும்
கற்ற வர்பர வப்படு வானைக்
  காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தன் எம்மானைக்
  குளிர்பொ ழில்திரு நாவல் ஆரூரன் 
நற்றமிழ் இவைஈ ரைந்தும் வல்லார்
  நன்னெறி உலகு எய்துவர் தாமே.. 11
திருப்பதிகம்
நிறைவுற்றது
**
 நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
**
ஓம் ஹரி ஓம் 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***



8 கருத்துகள்:

  1. பாசுரங்கள் படித்துத் துதித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின்
      வருகையும்
      கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      ஓம் ஹரி ஓம்
      நலம் வாழ்க

      நீக்கு
  2. பாடல்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின்
      வருகையும்
      கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      ஓம் ஹரி ஓம்
      நலம் வாழ்க

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. குறளமுதம் இப்போதுதான் வாசிக்கிறேன். இன்றைய அருளமுதங்களாக வநதவை அனைத்தும் அருமை. இறைவனை துதித்து போற்றுவோம். இறைவன் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின்
      வருகையும்
      கருத்தும்
      பிரார்த்தனையும்
      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      ஓம் ஹரி ஓம்
      நலம் வாழ்க

      நீக்கு
  4. ஓம் ஹரி ஓம்.
    சிவாய நமக.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..