நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 7
திங்கட்கிழமை
தை முதல் தேதியன்று சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளது நூற்று எழுபத்தெட்டாவது ஆராதனை விழா திரு ஐயாற்றில் தொடங்கியது..
சனிக்கிழமையன்று (தை 6 - 19/1) நிறைவுபெற்றது...
நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஸ்வாமிகளுக்கு மனமுருகி - இன்னிசையால் அஞ்சலி செலுத்தினர்..
உடல் நிலையை அனுசரித்து மகாதீப ஆராதனைக்குப் பிறகு சென்ற நான் ஸ்வாமிகளுக்கு மலரஞ்சலி செலுத்தி வணங்கினேன்..
மக்கள் நெரிசலின் காரணமாக ஆராதனை நிறைவுற்ற பிறகு அங்கு எடுக்கப்பட்ட காட்சிகள்..
விலை சற்று அதிகம் தான் என்றாலும் 80 களின் காஃபி கிடைத்ததில் மகிழ்ச்சி.. 70 களின் சுவையுடன் காஃபி எப்போது கிடைக்குமோ!..
மழைக்கெடு சொல்லப்பட்டிருந்த நிலையில் மதியம் 1:30 மணியளவில் தூறலாகத் தொடங்கி பெருமழையாகப் பிடித்துக் கொண்டது..
கான மழையில் நனைந்திருந்த மனங்கள் வான மழையால் மேலும் நனைந்து குளிர்ந்தன..
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாக் காட்சிகள் நன்றாக உள்ளன.
பதிலளிநீக்குஇன்னிசையில் மேகமும் கரைந்ததுவே.
நிகழ்வு சிறப்பு...
பதிலளிநீக்குநாங்கள் ஒரு முறை தியாகராஜ ஆராதனை விழாவில் கலந்து கொண்டோம்.
பதிலளிநீக்குநீங்கள் இப்போது கலந்து கொண்டது படித்து மகிழ்ச்சி.
படங்கள் அருமை.
இசை மழை பொழிந்து இருக்கிறது.
அருமையான இடம்.
பதிலளிநீக்குகொடுத்து வைத்திருக்கிறீர்கள், நினைத்தபோது சென்றுவருவதற்கு.
நான் கூட இந்நாளை ஒட்டியாவது தஞ்சை வரமுடியுமா என்று யோசித்ததுண்டு. என் அண்ணனும் நானும் யோசித்துக் கொண்டே இருக்கிறோம், திட்டமிட்டுக் கொண்டே இருக்கிறோம்!
பதிலளிநீக்குகாவிரியில் அவ்வளவு தண்ணீர் ஓடுகிறதா? சூப்பர்.
பதிலளிநீக்குகாபியை சிலாகித்திருப்பது மகிழ்ச்சி. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களிடமிருந்து ஒரு பாஸிட்டிவ் கருத்து!!