நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 15
வெள்ளிக்கிழமை
நாளை
கந்த சஷ்டி விரதம்
ஆரம்பமாகின்றது
கத்தும் தரங்கம் எடுத்தெறியக்
கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
கரையில் தவழ்ந்து வாலுகத்தில்
கான்ற மணிக்கு விலையுண்டு
தத்துங் கரட விகடதட தந்திப்
பிறைக் கூன் மருப்பில் விளை
தரளந் தனக்கு விலையுண்டு
தழைத்து கழுத்து வளைந்த மணிக்
கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக்
குளிர்முத் தினுக்கு விலையுண்டு
கொண்டல் தரும் நித்திலம் தனக்குக்
கூறுந்தரமுண்டு உன் கனிவாய்
முத்தம் தனக்கு விலை உண்டோ
முருகா முத்தம் தருகவே
முத்தம் சொரியும் கடல் அலைவாய்
முதல்வா முத்தம் தருகவே..
-: பகழிக்கூத்தர் :-
மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன் வெய்ய வாரணம் போல்
கைதான் இருப துடையான் தலைப்பத்துங் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. . 22
-: கந்தரலங்காரம் :-
பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலும்
சிந்தா குலந்தனைத் தீர்த்தருள்வாய் செய்ய வேல்முருகா
கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றில் நிற்குங் கந்தா இளங்குமரா அமராவதி காவலனே.. 79
-: கந்தரலங்காரம் :-
முருகா முருகா
முருகா முருகா
ஓம் சிவாய நம ஓம்
***