நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 17, 2024

முத்தான முத்து

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 2
ஞாயிற்றுக்கிழமை


நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் 
P. சுசீலா அவர்களின் குரலில் இடம்பெற்ற பாடல்..


 பாடலுக்கான சூழலைக் கேட்டதும்
கவியரசர்
உடனடியாக சொல்லிய பாடலுக்கு அப்போதே இசை அமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்கள்..


இனிய பாடல்
இன்றைய பதிவுக்கு அழகூட்டுகின்றது..


முத்தான முத்தல்லவோ
முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ
கடவுள் தந்த பொருளல்லவோ



சின்னஞ்சிறு சிறகுகொண்ட 
சிங்காரச் சிட்டல்லவோ
செம்மாதுளை பிளந்து 
சிரித்து வரும் சிரிப்பல்லவோ..



மாவடுக் கண்ணல்லவோ 
மைனாவின் மொழியல்லவோ
பூவின் மனமல்லவோ 
பொன் போன்ற குணமல்லவோ..



வாழாத மனிதரையும் 
வாழவைக்கும் சேயல்லவோ
பேசாத தெய்வத்தையும் 
பேச வைக்கும் தாயல்லவோ..



தாழங்குடை அல்லவோ 
தள்ளாடும் நடையல்லவோ
மாலைப் பொழுதல்லவோ 
வந்தாடும் செண்டல்லவோ..


படங்களுக்கு நன்றி
-: பாரதீய சித்ரகலா :-

1965 - 70 களில் நாட்டில் 
அப்போதைய சூழ்நிலையில்
பரப்பப்பட்டதே சிறு குடும்பம் சீரான வாழ்வு, திட்டமிட்ட குடும்பம் தெவிட்டாத இன்பம் என்ற கொள்கைகள்..

அன்றைக்கு குடும்பங்களில்
வறுமை இருந்தது உன்மை தான்... ஆனாலும் வாய்மை இருந்தது. ஒரு சில குறைகள் இருந்தாலும் உறவு முறை என்னும் பலம் இருந்தது.. உற்றார்  என்ற உணர்வு இருந்தது..

இன்றைக்கு ஒன்றும் இல்லை.. 
அநாதரவுகள் தான் மிச்சம்..

அடுத்தடுத்துப் பிள்ளைகள் என்றோ அடுக்கடுக்காகப் பிள்ளைகள் என்றோ இல்லாமல் அன்பிற்கும் ஆதரவிற்குமாக நமக்கு நல் வாரிசுகள் வேண்டும்..

நம் கிளைகள் தழைக்க வேண்டும்..
உறவுமுறைகள் துளிர்க்க வேண்டும்..

இறைவன் நல்லருள் புரிவானாக..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அழகான படங்களும், அருமையான பாடலும் மனதை நெகிழ்த்துகிறது. இப்படிபட்ட அருமையான பாடலை உடனடியாக வடிக்கும் திறமை கண்ணதாசன் அவர்களுக்கு கை வந்த கலைதானே..! அவர் பாடல்களின் அர்த்தங்கள் வியக்க வைக்கும் திறனுடையவை.

    /அன்றைக்கு குடும்பங்களில்
    வறுமை இருந்தது உன்மை தான்... ஆனாலும் வாய்மை இருந்தது. ஒரு சில குறைகள் இருந்தாலும் உறவு முறை என்னும் பலம் இருந்தது.. உற்றார் என்ற உணர்வு இருந்தது/

    உண்மை. நல்ல ஆழமான கருத்துள்ள வரிகள். பதிவை ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. 65-70 களில் அன்றைய நிலையை எல்லி நகையாடி அதற்கு முந்தைய காலகட்டத்தை நினைவு கூர்ந்திருப்பார்கள்!!

    பதிலளிநீக்கு
  3. இனிமையான பாடல். பொருத்தமான படங்களுடன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..