நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 19
செவ்வாய்க்கிழமை
கந்த சஷ்டி
நான்காம் நாள்
ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிச்செய்த
திருப்பாடல்கள்
தலம் தஞ்சை
தந்தன தானன ...
தனதான
அஞ்சன வேல்விழி ... மடமாதர்
அங்கவர் மாயையி ... லலைவேனோ
விஞ்சுறு மாவுன .. தடிசேர
விம்பம தாயரு ... ளருளாதோ
நஞ்சமு தாவுணு .. மரனார்தம்
நல்கும ராவுமை ... யருள்பாலா
தஞ்சென வாமடி ... யவர்வாழத்
தஞ்சையில் மேவிய ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
பால் என்பது மொழி பஞ்சென்பது பதம் பாவையற்கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித் தண்டைக்
கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே... 30
-: கந்தரலங்காரம் :-
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல புரந்தர பூபதியே.. 24
-: கந்தரநுபூதி :-
நன்றி கௌமாரம்
முருகா முருகா
முருகா முருகா
ஓம் சிவாய நம ஓம்
***
அஞ்சன வேல்விழி மடமாதர் / அங்கு அவர் மாயையில் அலைவேனோ... விஞ்சுறுமா உனதடி சேர விம்பமு தாயருள் அருளாதோ...நஞ்சை அமுதாக உண்ணும் அரனார்தம் நல்குமரா... உமையருள் பாலா.. தஞ்சமென அடியவர் வாழ தஞ்சையில் மேவிய பெருமாளே...
பதிலளிநீக்குமுருகா.. முருகா... முருகா...