நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 03, 2024

தமிழ் மாலை 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 17
ஞாயிற்றுக்கிழமை

கந்த சஷ்டி இரண்டாம் நாள்

அருணகிரிநாதர
 அருளிச்செய்த
திருப்பாடல்கள்


தலம் எட்டிக்குடி
(திருத்துறைப்பூண்டிக்கு அருகில் )

தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
     தனதத்த தனதத்த .. தனதானா

கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த 
கயலொத்த மலரொத்த .... விழிமானார்

கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்பு 
கதிர்முத்து முலைதைக்க ... அகலாதே

மிடலுற்ற கலவிக்கு ளுளநச்சி வளமற்று
மிடிபட்டு மடிபட்டு ... மனமாழ்கி

மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை
மிகநட்பொ டருள்தற்கு ... வருவாயே..

தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
தலைபத்து டையதுட்ட .... னுயிர்போகச்

சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி 
தருசக்ர தரனுக்கு ... மருகோனே

திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த
சிவனுக்கு விழியொத்த ... புதல்வோனே

செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற
திகழெட்டி குடியுற்ற ... பெருமாளே..
-: திருப்புகழ் :-

தேரணி இட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேற் கூரணி இட்டு அணு வாகிக் கிரெளஞ்சங் குலைந்து அரக்கர் 
நேரணி இட்டு வளைந்த கடக நெளிந்தது சூர்ப் பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.. 3
-: கந்தரலங்காரம் :-

 
கெடுவாய் மனனே கதி கேள் கரவாது
இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.. 7
-: கந்தரநுபூதி :-
நன்றி கௌமாரம்

முருகா முருகா
முருகா முருகா

ஓம்  சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  2. மிடலுற்ற கலவிக்குள் உளநச்சி... மெலிவுற்ற தமியற்கு உன் இரு பத்ம. என்று வரவேண்டும். திருப்புகழ் போன்றவற்றிர்க்குக் கண்டிப்பாக அர்த்தத்துடன் பதிவிட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு..

      வாரந் தோறும் வெள்ளிக் கிழமைகளில் திருப்புகழ் பாடல்கள் அர்த்தத்துடன் தானே வருகின்றன..

      இப்போது பதம் பிரிக்கப்பட வில்லை.. அவ்வளவே..

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி
      நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  4. முருகன் அனைவருக்கும் நல்லதையே அளிக்க எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் பிரார்த்தனை க்கு மகிழ்ச்சி
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  5. எட்டிக்குடி முருகா சரணம் .

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..