நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 02, 2024

தமிழ் மாலை 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 16
சனிக்கிழமை

கந்த சஷ்டி
முதல் நாள்


இன்று முதல் அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்பாடல்களுடன்
கந்தசஷ்டி சிறப்புப் பதிவுகள்

அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி


தலம் அவிநாசி

இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
 
பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப்ர பஞ்சமென்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா செஞ் சடா அடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே... 1
-: கந்தரலங்காரம் :-
 
ஆடும் பரி வேல்  அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.. 1
-: கந்தரநுபூதி :-
நன்றி கௌமாரம்

முருகா முருகா
முருகா முருகா

ஓம்  சிவாய நம ஓம்
***

3 கருத்துகள்:

  1. மூன்று பாசுரங்களையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி..

      நெல்லை அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்களில் கந்தனை கண்டுகந்தேன். கந்த சஷ்டி பெருவிழாவின் துவக்க நாளாகிய இன்று "அவன்" அருள் பெற்ற அருணகிரி நாதரின் பாடல்களை பாடி மகிழ்ந்தேன். முருகன் அனைவருக்கும் அனேக நலன்களை தருமாறு பிரார்த்தித்துக் கொள்கிறேன். முருகா சரணம்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..