நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 04, 2024

தமிழ் மாலை 3

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 18
திங்கட்கிழமை

கந்த சஷ்டி
மூன்றாம் நாள் 

ஸ்ரீ அருணகிரிநாதர
 அருளிச்செய்த
திருப்பாடல்கள்


தலம் எண்கண்
 (திருவாரூருக்கு அருகில்)

 தந்த தந்த தந்த தந்த, தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த ... தனதான

சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு
சண்ப கஞ்செ றிந்தி லங்கு ... திரடோளுந்

தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று
சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச ... மயிலேறித்

திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று
சென்ற சைந்து கந்து வந்து ... க்ருபையோடே

சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து செம்ப தம்ப ணிந்தி ரென்று ... மொழிவாயே

அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன் அங்க முங்கு லைந்த ரங்கொள் ... பொடியாக

அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று
அம்பு கொண்டு வென்ற கொண்டல் ... மருகோனே

இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி டும்ப ரன்ற னன்பில் வந்த ... குமரேசா

இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்பு எண்க ணங்க மர்ந்தி ருந்த ... பெருமாளே..
-: திருப்புகழ் :-

தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலும் என்
பாவடி ஏட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூடஅ முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே..15
-: கந்தரலங்காரம் :-

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண் குண பஞ்சரனே.. 15
-: கந்தரநுபூதி :-
நன்றி கௌமாரம்

முருகா முருகா
முருகா முருகா

ஓம்  சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. சந்தத்தோடே கூடிய திருப்புகழ் மனத்தைக் கவர்கிறது. மிகுந்த புலமைத் திறன்.

    பதிலளிநீக்கு
  2. கந்தசஷ்டி முதல் நாளன்று சுவாமிமலையில் முருகனின் காலடி மிக அருகே நின்று திவ்ய தரிசனம்.  வாழ்க சீனுவாசன்.

    பதிலளிநீக்கு
  3. எண்கண் - ஊர் பெயரே சிறப்பாக இருக்கிறது. பெயருக்கான காரணமும் தெரிந்து கொள்ள ஆசை. இணையத்தில் பார்க்கிறேன்.

    அனைவருக்கும் முருகப்பெருமான் நல்லதையே அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  4. திருப்புகழ் முருகன் பாடல்கள் படித்தோம். அவனருள் அனைவரையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  5. கந்தசஷ்டி காலத்துக்கேற்ற பதிவு நன்றாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..