நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 25
செவ்வாய்க்கிழமை
சமையலுக்குத் தனியான தேங்காய் எண்ணெய் என்ற நகைச்சுவையைக் கேட்டு விட்டு தென்னையைப் பற்றி தேவாரம் என்ன சொல்கின்றது எனத் தேடினேன்...
நமக்குப் பக்கத்தில் திரு ஐயாறை அடுத்து ஆடுதுறை என்ற திருத்தலம்..
வாலி வழிபட்ட திருக்கோயில்.
இவ்வழியே சென்ற தாய்க்கும் மகளான கர்ப்பிணிக்கும் இரக்கம் கொண்டு தென்னை வளைந்து, குலை - இளநீர் - கொடுத்ததாக தல புராணம்..
திருத்தலம்
வட குரங்காடுதுறை
இறைவன்
ஸ்ரீ குலைவணங்கு நாதர்
அம்பிகை
ஸ்ரீஜடாமுடியம்மை
தீர்த்தம் காவிரி
தலவிருட்சம் தென்னை
முந்தைய பதிவுகள் :
பற்பல திருப்பாடல்களில் தென்னையைப் பற்றி சொல்லப்பட்டு இருந்தாலும்
நவரத்தினம் போல ஒன்பது திருப்பாடல்கள் இன்று.
-: திருஞானசம்பந்தப் பெருமான் அருளியவை :-
குடந்தைக் காரோணம்
மலையார்மங்கை பங்கரங்கை யனலர் மடலாரும்
குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார் குடமூக்கில்
முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவா மதியினார்
கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோ ணத்தாரே. 1/72/3
திருஐயாறு
வேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவே
வானை யூடறுக் கும்மதி சூடிய மைந்தனார்
தேன் நெர் தெங்கிளநீர் கரும்பின் தெளி
ஆனஞ்சாடு முடியான் உமை ஐயாறுடை ஐயனே. 2/6/5
திருவீழிமிழலை
தாங்கருங் காலந் தவிரவந்திருவர்
தம்மொடுங் கூடினா ரங்கம்
பாங்கினாற் தரித்துப் பண்டுபோ லெல்லாம்
பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடி மாச்
செண்பகம் வண்பலா இலுப்பை
வேங்கைபூ மகிழ் ஆல் வெயிற்புகா வீழி
மிழலையான் என வினை கெடுமே. 3/119/4
-: திருநாவுக்கரசு ஸ்வாமிகள் அருளியவை :-
கடம்பூர்
திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர்
மங்கை தங்கும் மணாள னிருப்பிடம்
பொங்கு சேர்மணற் புன்னையும் ஞாழலும்
தெங்கு சேர் கடம்பூர் கரக்கோயிலே. 5/20/5
ஆமாத்தூர்
வானஞ் சாடு மதியர வத்தொடு
தானஞ் சாதுடன் வைத்த சடையிடைத்
தேனஞ் சாடிய தெங்கிள நீரொடும்
ஆனஞ் சாடிய ஆமாத்தூர் ஐயனே. 5/44/10
திருவலஞ்சுழி
கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்
கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்
அலைக்கங்கை செஞ்சடைமேல் ஏற்றான் கண்டாய்
அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய்
மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
குலைத்தெங்கஞ் சோலை சூழ் கொட்டையூரிற்
கோடீச்ச ரத்துறையுங் கோமான் தானே.. 6/73/2
-::-
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளியவை :-
கானாட்டுமுள்ளூர்
பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப்
புனலாகி அனலாகிப் பூதங்கள் ஐந்தாய்
நாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகி
ஞாயிறாய் மதியமாய் நின்றஎம் பரனைப்
பாளைபடு பைங்கமுகின் சூழல் இளந் தெங்கின்
படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்
காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக்
கானாட்டு முள்ளூரிற் கண்டு தொழுதேனே. 7/40/4
வாழ்கொளிபுத்தூர்
காளை யாகி வரையெடுத்தான் தன்
கைகளிற்று அவன் மொய்த்தலை யெல்லாம்
மூளை போத ஒருவிரல் வைத்த
மூர்த்தியை முதல் காண்பரி யானைப்
பாளை தெங்கின் பழம்விழ மண்டிச்
செங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும்
வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.. 7/57/9
திருக்கேதீச்சரம்
அங்கத்துறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகரில்
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல்
தெங்கம் பொழில் சூழ்ந்த திருக் கேதீச்சரத்தானே 7/80/5
-::-
வாழ்ந்த தடங் காட்டும்
வளர் தெங்கின் வழி நின்று
வாழ்வாங்கு வாழ்வோம்
வையகத்தில்!..
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
நவரத்தின தெங்கு பாடல்கள் சிறப்பு.
பதிலளிநீக்குதங்களுக்கு நல்வரவு..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
பதிலளிநீக்குதென்னையை பற்றிய தேவார பாடல்கள் பகிர்வு அருமை.
நவரத்தினம் போன்ற 9 திருப்பாடல்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
இறைவன் அருளால் அனைவரும் வாழ்வாங்கு வாழ வேண்டும்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
நலம் வாழ்க..
தென்னை பற்றிய பாடல்கள் அனைத்தும் சிறப்பு.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்..
தெங்கு தேவாரப் பாடல் பதிகங்கள் பலவும் அறிந்தோம்.
பதிலளிநீக்குஇதில் நம்நாட்டு திருக்கேதீச்சரப்பாடலும் அடங்கி இருப்பது மகிழ்ச்சி.
"தெங்கின் வழி நின்று வாழ்வோம்"
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி மாதேவி..
தெங்கு பற்றிய பாடல்கள் அனைத்தும் சிறப்பு.
பதிலளிநீக்குதுரை அண்ணா எபி ல கதைல கல்யாணம் வரப் போகுது இங்க தெங்கு பற்றிய பதிவு...கூடவே தெங்கு வைத்துச் செய்யப்படும் இனிப்பு பரிமாறி இருக்கலாமோ!!!!
கீதா
/// கூடவே தெங்கு வைத்துச் செய்யப்படும் இனிப்பு பரிமாறி இருக்கலாமோ!.. ///
நீக்குஅது தனியாக பதிவு ஒன்று வர இருக்கின்றது...
மகிழ்ச்சி..
நன்றி சகோ..