நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 29, 2024

கிருத்திகை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆடி 13
கிருத்திகை
திங்கட்கிழமை


ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயன புண்ணிய காலத்தில் நிகழ்கின்ற முதல் கிருத்திகை..


தான் தோன்றிய  நட்சத்திரம் 
விசாகம் என்றாலும் , தன்னைப் பாலூட்டி சீராட்டி வளர்த்த கார்த்திகைக் கன்னியர்  அறுவரும் விண்ணில் “கார்த்திகை” நட்சத்திரங்களாகத் திகழும்படிக்கு ஈசனிடம் வரம் பெற்றுத் தந்தவர் முருகப் பெருமான்..


இதன்படி  கார்த்திகை அன்று நோன்பிருந்து கந்தனை
வழிபடுகின்ற அடியார்கள் எல்லா நலங்களையும் எய்துவர் என்பது ஈசன் எம்பெருமான் அளித்த வரமாகும்..

கிழமைகளில் வெள்ளியும்
திதிகளில் சஷ்டியும், , நட்சத்திரங்களில் கார்த்திகையும் முருகனுக்கு சிறப்பு என்பது நாமறிந்ததே..


தனதனன தாத்த ... தனதான
தனதனன தாத்த ... தனதான

தலம்
பழனியம்பதி

வசனமிக வேற்றி ... மறவாதே
     மனதுதுய ராற்றி ... லுழலாதே

இசைபயில்ஷ டாக்ஷ ... ரமதாலே
     இகபரசெள பாக்ய ... மருள்வாயே

பசுபதிசி வாக்ய ... முணர்வோனே
     பழநிமலை வீற்ற ... ருளும்வேலா

அசுரர்கிளை வாட்டி ... மிகவாழ
     அமரர்சிறை மீட்ட .. பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


உள்ளத்தில் மிகவும் உருவேற்றி அதனால்  
உன்னை மறவாமல் இருந்து 
 
துயரம் தருகின்ற வழிகளில் என் மனம்
அலைந்து திரியாமல் இருக்கவும் 

புகழுடன் சொல்லிப் பயில்கின்ற 
ஆறெழுத்து மந்திரத்தினால் 
இம்மைக்கும் மறுமைக்கும் 
நல்வாழ்வை அருள்வாயாக..

 சிவபெருமானது வேத ஆகமங்களை  
உணர்ந்தவனே..
 
பழனிமலையில் வீற்றிருந்து
அருள் புரிகின்ற வேலனே..

அசுரர் கூட்டத்தினை அழித்து
தேவர்கள் வாழும்படிக்கு
 சிறையினின்று விடுவித்த 
பெருமாளே..


முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. முற்றிய வினைகள் தீர முருகனைப் பணிந்து வணங்குவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் நன்றி ஸ்ரீராம்

      முருகா
      முருகா..

      நீக்கு
  2. ஆடிக் கிருத்திகை நாளில் முருக தரிசனம் .

    பாடல் பாடி வணங்கினோம்.

    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் நன்றி

      முருகா
      முருகா..

      நீக்கு
  3. ஆடி கிருத்திகை குறித்த பதிவு நன்று. தேர்ந்தெடுத்து சேர்த்த படங்கள் அனைத்தும் அழகு - குறிப்பாக இரண்டாம் படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் நன்றி வெங்கட்..

      முருகா
      முருகா..

      நீக்கு
  4. முருகன் திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
    ஆடிகிருத்திகைக்கு சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி...

      முருகா
      முருகா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..