நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 26, 2024

ஆடி வெள்ளி 2

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆடி 10   
இரண்டாம் வெள்ளி


கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்

சலியாத மனமும்அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அரிதுயிலு மாயனது தங்கையே
ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!..


மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார் சடைமேல்
பனி தரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!.. 4


தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!.. 69
-: அபிராமி பட்டர் :-

தரிசனம்
ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில்,
கீழவாசல் - தஞ்சாவூர்..










 நன்றி
தஞ்சையின் பெருமை.


ஸ்ரீ வடபத்ரகாளி
ஸ்ரீ பூமாலை வைத்ய நாதர் திருக்கோயில்,
கீழவாசல் - தஞ்சாவூர்..

ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. அம்மா... உனைச் சரணடைகிறோம். காப்பாய் அனைவரையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. ஆடிவெள்ளி அம்மன் தரிசனம் அருமை.
    பாடல்களை பாடி அம்மனை வேண்டிக் கொண்டேன்.
    படங்கள் எல்லாம் மிக அருமை. ஸ்ரீ வடபத்ரகாளி அலங்காரம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  3. ஆடி வெள்ளி - அம்பாள் தரிசனம் நன்று. அனைவருக்கும் பூரண அருளை அம்பாள் அளிக்க எனது பிரார்த்தனைகளும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..

      நீக்கு
  4. அம்மன் பாடல்கள் பாடி வணங்கினோம்.

    திரெளபதி அம்மன் அலங்காரங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  5. அம்மன் பாடல்கள் பாடி வணங்கினோம்.

    திரெளபதி அம்மன் அலங்காரங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..