நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 03, 2024

கார்ப்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 19
புதன்கிழமை

உணவுத் திருவிழா 3


கார்ப்பு..

இது காரம் எனப்படும்..
காரத்தன்மையைக் கொண்டது..

இந்தியர்களில் - இப்போது தமிழ் நாட்டவர்கள் அதிக காரம் நிறைந்த உணவை உண்கின்றனர்..

அதிகப்படியான காரம், 
உடலில் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகமாக்கும்..
குடல் எரிச்சலை உண்டாக்கும். குடலில் புண்கள் தோன்றக் கூடும்..

மிளகு, மிளகாய், இஞ்சி, பூண்டு, கடுகு வெங்காயம்
ஆகியவற்றில் அதிகப் படியான காரச்சுவை நிறைந்துள்ளது..
(நன்றி விக்கி)


பூண்டு வெங்காயக் குழம்பு 

தேவையானவை :

பூண்டு 25 பல்
சின்ன வெங்காயம் 25 
மணத்தக்காளி வற்றல் கையளவு
புளி தேவையான அளவு
(உள்ளங்கை உருண்டை)
தக்காளி ஒன்று
வறமிளகாய் 2
மஞ்சள் தூள் ½  tsp 
மிளகுத் தூள் 2 tsp
மல்லித் தூள் 4 tsp
காஷ்மீரி மிளகாய்த் தூள் 1 tsp
கல் உப்பு தேவைக்கு
நல்லெண்ணெய் 150 ml
பழுப்பு வெல்லம் சிறிதளவு

தாளிப்பதற்கு :

கடுகு சிறிது
உளுந்தம்பருப்பு சிறிது
கறிவேப்பிலை ஒரு இணுக்கு


செய்முறை :

விதை எடுக்கப்பட்ட புளியை 300  மிலி வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்து மூன்று தடவையாக பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்..

300  மிலிக்கு அதிகம் கூடாது..

இந்த புளிச்சாறை மிதமான சூட்டில் வைத்து கொதித்ததும் நல்லெண்ணெய் விட்டு இறக்கிக் கொள்ளவும்..

மணத்தக்காளி வற்றலை சற்று நேரம் ஊறவைத்து வடிகட்டிக் கொள்ளவும்..

வேறு ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் போட்டு 

தோல் நீக்கிய வெங்காயம் பூண்டு தக்காளி, மணத் தக்காளி வற்றல் சேர்த்து வதக்கவும். உப்பு போடவும். .

சுட வைத்திருக்கும் புளிச் சாற்றை ஊற்றி மஞ்சள் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், 
மிளகாய்த் தூள் பழுப்பு வெல்லம் இவற்றையும் சேர்க்கவும்.

வேறொரு வாணலியில்
நல்லெண்ணெய் காய்ந்ததும் - கடுகு வெந்தயம் மிளகாய் கிள்ளிப் போட்டு கறிவேப்பிலை தாளித்து பூண்டு குழம்பில் ஊற்றவும். 

சில வினாடிகளில் கொதித்ததும் கிளறி விட்டு இறக்கவும்..

குழம்பு இறுகலாக இருந்தால் ஒரு குவளை சுடுநீர் விட்டுக் கலக்கி குழம்பைத் தளர்த்தி உப்பு சரிபார்த்துக்  கொள்ளவும்..


குழம்பு சற்று தளர்வாக இருப்பதும் நல்லெண்ணெய் தாராளமாக இருப்பதுமே முக்கியம்.

எக்காரணம் கொண்டும் அலுமினிய, பித்தளைப் பாத்திரங்களில் இக்குழம்பு வைப்பதும் குழம்பை வைத்திருப்பதும் கூடாது..

காரக் குழம்பு வைப்பதற்கு
மண் சட்டி, இருப்புச் சட்டிகளே சிறந்தவை..

(இங்கே, உணவின் படங்களுக்கும் பக்குவத்திற்கும் சம்பந்தம் இல்லை..  ஆனாலும் நன்றி..)

பச்சை மிளகாயோ சிவப்பு மிளகாயோ  உணவில் மிளகாய் சேர்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.. முயற்சிக்கவும்..
(ஒளிப்படங்கள் : நன்றி இணையம்)

 நமது நலம்
நமது கையில்

சிவாய நம ஓம்
***

11 கருத்துகள்:

  1. நல்ல காரம் சாப்பிடுபவன் நான். இப்போது குறைத்துக் கொண்டே வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. படம் ஈர்க்கிறது.  அதைப்போலவே வர செய்து பார்க்க ஆவல்.  நாங்கள் பூண்டு வெங்காயக்குழம்பு வேறு வகையில், தக்காளி, மிளகு, சீரகம் முதலானவை இல்லாமல் செய்வோம்.  இப்படி ஒருமுறை முயற்சித்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா ஸ்ரீராம் தக்காளி மிளகு ஜீரகம் இல்லாமல் செய்வதுதான் இங்கும்.

      கீதா

      நீக்கு
  3. காரம் நிறைய சேர்ப்பதால் வாய் வெந்துபோய் வாய்ப்புண்ணும் வரும்.  வயிற்றுப்புண்ணும் வரும்.

    பதிலளிநீக்கு
  4. நம் வீட்டில் மிளகாய் சேர்ப்பு குறைவுதான்.

    குழம்பு செய்முறை ஆஹா! கல்சட்டி அல்லது மண்சட்டியில் செய்வது வழக்கம் நம் வீட்டில்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. காரம் - ஒரு காலத்தில் நிறையவே சேர்த்ததுண்டு - தற்போது சேர்ப்பதில்லை.

    சுவையான குறிப்பு. இப்படிச் செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. பூண்டு வெங்காயம் குழம்பு சூப்பர்.
    காரம் ஓரளவு சாப்பிடுவோம். எண்ணை குழம்புகள் குறைவு.

    பதிலளிநீக்கு
  7. பூண்டு வெங்காயம் குழம்பு சூப்பர்.
    காரம் ஓரளவு சாப்பிடுவோம். எண்ணை குழம்புகள் குறைவு.

    பதிலளிநீக்கு
  8. வெள்ளைப் பூண்டு போட்ட குழம்பு சுவைக்கத் தோன்றுகிறது.

    அறுசுவை உணவில் எல்லாமே அளவோடு இருந்தால் உடலுக்கு நலமே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  9. காரம் பற்றி சொன்னது நன்று.
    குழம்பு பக்குவம் அருமை.
    கல்சட்டியில் இந்த குழம்பு செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    காரம் குறித்த சுவையான பதிவு. பூண்டு குழம்பின் சுவையும், மணமும் நன்றாக இருக்கும். செய்முறையும், படங்களும் மனதை கவர்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..