நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூலை 06, 2024

துவர்ப்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 22  
சனிக்கிழமை



பணைத்தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்து ஆர உண்டு  கிடந்த இப் பிள்ளை
இணைக்காலில்  வெள்ளித் தளை நின்று இலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே.. 25
-: பெரியாழ்வார் :-
**
உணவுத் திருவிழா 5


துவர்ப்பு..

அதிக விருப்பு, வெறுப்புக்கு ஆட்படாத சுவை. 

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. 

உடலில் உப்பைச் சமன் செய்கின்றது. 
வயிற்றுப் போக்கினை சரி செய்ய வல்லது.
இரத்தப் போக்கினைத் தடுக்கின்றது . 

வாழை மட்டையின் சாறு - 
நாக விஷத்தின் வீரியத்தைக் குறைக்க வல்லது.. நான் நேரில் கண்டிருக்கின்றேன்..

வாழைப்பூ, வாழைக் காய், மாதுளை, நாவல், மாவடு, மஞ்சள், பாக்கு, அவரை, அத்திக்காய் போன்றவற்றில் துவர்ப்பு நிறைந்துள்ளது..

இன்று
வாழைக்காய்
பொரியல்..
 

 தேவையானவை :

முற்றிய மொந்தன்
வாழைக்காய் 2
தேங்காய் ஒருமூடி
பொட்டுக் கடலை 50 gr
மிளகு ஒரு tsp
சீரகம் ஒரு tsp
கசகசா ஒரு tsp
உளுத்தம் பருப்பு ஒரு tsp
கடலெண்ணெய் 100 ml
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

தேங்காயைத் துருவி
 மிளகு சீரகம் பொட்டுக் கடலை கசகசா ஆ‌கியவ‌ற்றுடன் அரை‌‌க்கவு‌ம். 

வாழைக்காயின் தோலைக் கவனமாக சீவி விட்டு,  சீரான துண்டுகளாக நறுக்கவும். 

பா‌த்‌திர‌ம் ஒன்றில் வாழை‌‌க்கா‌ய்த் து‌ண்டுகளை‌ப் போ‌ட்டு அ‌தி‌ல் அரை‌த்தெடுத்த ‌விழுதையு‌ம், உப்பையு‌ம் சேர்த்து  பிசறி வைக்கவும்..


பின்னர் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு கறிவேப்பிலை தாளித்து வாழைக்காய் துண்டுகளைப் போட்டுப் புரட்டி  வேகவிட்டு எடுக்கவும்.

கசகசாவிற்குப் பதிலாக ஓமம் சேர்த்துக் கொள்ளலாம்.. 

அளவான மிளகாய்த் தூளில் புரட்டிக் கொள்வதும் ஏற்புடையது.. அவரவர் விருப்பம்..


கடுமையான மசாலா வகைகள் ஏதுமில்லாமல் - 
தயிர் சாதத்துடன் இதனை சாப்பிடுவது நல்லது... ஆரோக்கியம்..

இணையத்தில் பெறப்பட்ட படங்கள்.. எனவே ஆங்காங்கே மிளகாய்ப் பொடியும் 
மிளகாய்த் துணுக்குகளும் தென்படுகின்றன..

உண்மையில் அவற்றுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.. நான் மிளகாயைத் துறந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன...

வளம் தரும்
வாழைக்காய் வறுவல்..

உணவில் துவர்ப்பு சேர்த்துக் கொள்வது நல்லது.. முயற்சிக்கவும்..

(ஒளிப்படங்கள் : நன்றி இணையம்)

(இங்கே, உணவின்
 படங்களுக்கும் பக்குவத்திற்கும் சம்பந்தம் இல்லை..  ஆனாலும் நன்றி..)


பாயும் நீர் அரங்கந் தன்னுள்  பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்வும்  மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும்  துவரிதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும்  அடியரோர்க்கு அகலல் ஆமே.. 891
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-
**

பால் திரட்டு

தேவையானவை :

பசும்பால்  1 ltr
பசு நெய் தேவைக்கு
பழுப்பு வெல்லம் 200 gr
ஏலக்காய் தூள் சிறிதளவு
வறுத்த முந்திரி  7

செய்முறை 
பால் கறந்ததாக இருப்பது நல்லது.. பதப்படுத்தப்பட்ட பாலைத் தவிர்க்கவும்..

கனமான வெங்கல உருளி ஒன்றில் சிறிது நெய் விட்டு பாலை ஊற்றி மிதமான சூட்டில் காய்ச்சவும்..

பால் நன்றாகக் கொதிக்கின்ற நிலையில் சுத்தமான    பழுப்பு வெல்லத்தைச் சேர்த்து - தொடர்ந்து  கிளறிக் கொண்டே இருக்கவும்.

கைவிடாமல் கிளறிக் கொண்டு இருக்கும் நிலையில் பால் வற்றி வெல்லத்துடன் சேர்ந்து திரண்டு வரும்.. 

இந்நிலையில் மேலும் சிறிது நெய்யுடன் உடைத்த முந்திரியைச் சேர்த்துக் கிளறவும்..  

பக்குவமாக இறக்கி  க்ருஷ்ணனுக்கு நிவேத்யம் செய்யவும்..

ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணம்
ஃஃ

நமது நலம்
நமது கையில்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

9 கருத்துகள்:

  1. துவர்ப்போடு இனிப்பும்!

    துவர்ப்புச் சுவை மிக நல்லது பிடிக்கவும் செய்யும். வீட்டில் வாழைக்காய் தண்டு பூ என்று எல்லாமும் சேர்க்கப்படும்.

    பொரியல் செய்முறை மிக நன்றாக இருக்கிறது. நான் கசக்சாவுக்குப் பதிலாக விதைகளைப் பொடி செய்து போடுவதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      கசகசாவை விட்டு விடலாம்..

      கருத்திற்கு மகிழ்ச்சி
      நன்றி சகோ..

      நீக்கு
  2. தகவல்கள் சிறப்பு ஜி
    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  3. வாழைக்காய் பொரியல் எங்கள் வீட்டில் இடையிடையே உண்டு.

    பால் திரட்டு நெய்வேத்தியம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு
      மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  4. வாழைக்காய் பொரியல் செய்முறை நன்றாக இருக்கிறது.
    பால் திரட்டு செய்முறை அருமை.
    இறைவனுக்கு நெய்வேத்தியம் செய்து இறைவனை வணங்கி உண்டால் சுவை அதிகரிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. துவர்ப்பும் இனிப்பும்.... நன்று. தொடரட்டும் உணவுத் திருவிழா.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..