நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 24
திங்கட்கிழமை
ஃபலூடா (Floodah)
அறு சுவைகளுடன் நடத்தப்பட்ட உணவுத் திரு விழாவின் நிறைவாக இன்றொரு இனிய பதிவு..
இதில் நிறமி சேர்ந்துள்ளதால் Rose Syrup தேர்வு செய்யும் போது அவரவரும் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம்..
ஃபலூடா ஆதியில் பாரசீகத்தின் பக்குவம்... மொகலாய அரச உணவு..
அப்படியும் இப்படியுமாக இன்றைக்கு உருமாறி விட்டது..
குவைத்தில் இருந்த போது வேறு விதமாகத் தயாரித்து நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்..
தேவையானவை :
தரமான Rose Syrup
தரமான Condensed Milk
சேமியா அல்லது சின்ன ஜவ்வரிசி
சப்ஜா விதைகள்
பாதாம் பிசின்
Crushed Ice Cubes
Rosted Cashews & Almonds
செய்முறை :
சப்ஜா விதைகளையும் பாதாம் பிசினையும் தனித்தனியே தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
சேமியாவை சிவக்க வறுத்து நொறுக்கிக் கொள்ளவும்..
குழைய வேகவைத்து வடிகட்டி தனியாக வைக்கவும்..
(ஜவ்வரிசியை வேக
வைத்தும் செய்யலாம்.)
வேறொரு கிண்ணத்தில் தரமான Rose Syrup இரண்டு tsp
தரமான Condensed Milk இரண்டு tsp சேர்த்து கலக்கிக் கொள்ளவும்..
(tsp - teaspoon)
அகலமும் உயரமும் உள்ள கண்ணாடிக் குவளையில்,
ஒரு Tbsp - Rose Syrup + Condensed Milk சேர்க்கவும்.
(Tbsp - Table spoon)
இத்துடன்,
வேக வைத்த சேமியா ஒரு tsp
சப்ஜா விதை ஒரு tsp
பாதாம் பிசின் ஒரு tsp
முந்திரி பாதாம் துகள்கள் ஒரு tsp
மில்க் மெய்ட் ஒரு tsp
மற்றும் ஐஸ் தூள் (Crushed Ice Cubes) ஒரு tsp
இவற்றை ஒவ்வொன்றாக சேர்க்கவும்..
மீண்டும் - Rose Syrup + Condensed Milk , சேமியா, சப்ஜா விதை பாதாம் பிசின், முந்திரித் துகள்கள் உடைக்கப்பட்ட ஐஸ் க்யூப் என்று ஒரு அடுக்கு சேர்க்கவும்.
சிவக்க வறுத்துத் தூளாக்கிய
முந்திரி, பாதாம் பருப்புகளை இதன் மீது தூவிக் கொள்ளலாம்...
பப்பாளிப் பழம் இனிப்பு மாம்பழம் - என, ஒன்றிரண்டு துண்டுகளைச்
சேர்க்கலாம்..
கர்ப்பிணிப் பெண்கள் வீட்டில் இருந்தால் பப்பாளியைத் தவிர்க்கவும்... உஷ்ண சரீரிகள் எவரும் வீட்டில்
இருந்தால் மாம்பழத்தைத் தவிர்க்கவும்...
வாழைப்பழம் வேண்டவே வேண்டாம்...
Condensed Milk ல் பலவித ரசாயனங்கள் இருப்பதால் சற்று கவனம்..
இதற்கும் மேலே விரும்பினால் சிவப்பு நிற செர்ரி பழங்களால் அலங்கரிக்கலாம்... அதிலும் நிறம் ஊட்டப்பட்டிருப்பதால் கவனம் தேவை..
இது முழுக்க முழுக்க மதுரச் சுவையுடன் கூடியது.. எனவே புளிப்பான பழங்களுக்கு இடம் இல்லை..
இந்தச் செய்முறைக்கு சர்க்கரை வேண்டாம். ஏனெனில் Rose Syrup மற்றும் Condensed Milk ல் உள்ள இனிப்புச் சுவையே போதுமானது...
ஃபலூடாவிற்கு தரமான ரோஜா Syrup பயன்படுத்துவது நல்லது..
பலரும் பல விதங்களில் இதனைச் செய்து கொண்டு -
இது தான்.. இதே தான்!.. - என்கின்றனர்..
இந்தக் குறிப்பில் ஐஸ்க்ரீம் சேர்க்கப்படவில்லை என்பதை கவனிக்கவும்...
அப்புறம் எதுக்குடா இப்படி படங்கள போட்டுருக்றே ?.. என்றால் -
சும்மா கிளு கிளுப்புக்குத் தான்.!..
என்னது!?..
சும்மா குளு குளுப்புக்குத் தான்!...
ஃஃஃ
நமது நலம்
நமது கையில்..
***
குளுகுளு கிளுகிளு! ஹா.. ஹா.. ஹா...
பதிலளிநீக்குஆகா...
நீக்குதங்களுக்கு நல்வரவு..
மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நான் பலூடா சாப்பிடுவதில்லை. ஒருமுறை சாப்பிட்டு விட்டு அன்று முழுவதும் வேறு எதுவும் சாப்பிட முடியாமல் போனது!
பதிலளிநீக்குநானே செய்து சாப்பிட்டு இருக்கின்றேன்... எவ்வித பிரச்னையும் இருந்ததில்லை..
நீக்குஏதோ காலக் கோளாறு..
தில்லியில் ஃபலூடா நிறையவே கிடைக்கிறது - இதற்கெனவே சில கடைகளும் உண்டு. ஆனாலும் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. எப்போதேனும் சாப்பிடுவது உண்டு.
பதிலளிநீக்குஉங்கள் குறிப்புகள் நன்று.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்..
பலூடா படங்கள் குறிப்பு நன்று.
பதிலளிநீக்குஎனக்கும் எப்போதாவது வீட்டில் தயாரித்த பலூடாதான். கடைகளில் இனிப்பும், கலர், எசென்ஸ் வகைகள் கூடவாக தோன்றும் சாப்பிடமாட்டேன்.
நிறம் சேர்க்கப்பட்ட பொருள்களை நானும் உண்பதில்லை,..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி..
ஃபலூடா எனக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமானது. அதிலும் ஸ்பெஷல் ஃபலூடா இருக்கிறதா (அங்கு இருப்பதிலேயே விலை அதிகமானதை) என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவேன் (எடை அதிகரிக்கும் என்பது வேறு விஷயம்). ஜிகர்தண்டாவில் ரொம்பவே இனிப்பை அதிகரித்துவிடுகிறார்கள் என்பதால் அதன் மீதான ஆர்வம் குறைந்துவருகிறது
பதிலளிநீக்குஜிகர்தண்டா எனக்கும் பிடிக்காது..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி நெல்லை..
பலூடா ஒருமுறை சாப்பிட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குபிறகு விருப்பம் இல்லை.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. பலூடா செய்முறைகள், படங்கள் யாவையும் நன்றாக உள்ளது. இதுவரை நான் இந்த பானத்தை பருகியதில்லை. வீட்டிலும் செய்ததில்லை. செய்முறை எளிதாக இருப்பதால் செய்து பார்க்கலாம் என நினைக்கிறேன். இனி எங்கேயாவது போகும் சந்தர்ப்பத்தில் கிடைத்தால் வாங்கி சாப்பிட்டு பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
பலூடா செய்முறையும் படங்களும் அருமை.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
நலம் வாழ்க..