நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 21
வியாழக்கிழமை
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு..
- என்பது அப்போது..
காலம் மாறி விட்டதால் -
எந்தன் கண்ணுக்குள்ளே என்னைப் பாரு..
- என்பது இப்போது..
கடந்த 27/6 அன்று வாட்ஸாப்பில் வந்த செய்தி..
தேடிச் சென்று தினமலருக்குள் புகுந்ததில் கிடைத்த விவரங்கள் - இதோ..
கண்களை 'ஸ்கேன்' செய்தால்போதும். இதயத்தில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதைத் துல்லியமாக சொல்லிவிடலாம்.
இது தான்,
Artificial intelligence (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவின் சிறப்பு.
இதயத்தில் பிரச்னை, ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா என்று உறுதி செய்வதற்கு,
'சி.டி., ஸ்கேன், எக்ஸ் - ரே, எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' எதுவும் தேவையில்லை. கூகுள் ஏ.ஐ., கண்களை ஸ்கேன் செய்து சொல்லி விடும்.
இதன் இன்னொரு சிறப்பு உடம்பிற்குள் என்ன நடக்கிறது என்பதை சுலபமாக கண்டறிந்து சொல்வது தான்..
சில மாதங்களுக்கு முன், இன்னொரு விஷயத்தையும் வெளியிட்டேன். கூகுள் ஏ.ஐ., உதவியுடன் கண்களின் விழித்திரையை - ரெடினோ ஸ்கேன் செய்தால் போதும். ஒருவரின் வயது, பாலினம், அவர் குடிப்பழக்கம் உள்ளவரா, சிகரெட் பிடிப்பாரா, மாட்டாரா என்று அனைத்து விபரங்களையும் கூகுள் ஏ.ஐ., உதவியுடன் சுலபமாக கண்டறிய முடியும். இன்னும் ஒரு படி மேலே சென்று, அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா என்று கூட சொல்லி விடும்..
தற்போது நான்கு ஆண்டுகளாக உழைத்து, கண்களில் ஸ்கேன் எடுப்பதன் வாயிலாக இதய ரத்த நாளங்கள், இதயத்தில் உள்ள பிரச்னைகளை சுலபமாக கண்டறியும் கூகுள் செயற்கை நுண்ணறிவை உருவாக்கி உள்ளோம்..
- சுந்தர் பிச்சை.,
தலைமை செயல் அதிகாரி, கூகுள் நிறுவனம்.
***
எனக்கும் வந்தது. நான் பாசிட்டிவ் செய்திகளில் பகிர எடுத்த வைத்த நினைவு.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய இந்த தகவல் சிறப்பு. ஒருவரின் மனோபாவங்களை அவர்களது கண்களே காட்டி விடும் எனச் சொல்வார்கள். அந்த ரீதியில் இப்படியான கண்டுபிடிப்பும் நல்லதே...! எப்போதுமே நல்லது நடந்தால் சரிதான்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உந்தன் கண்ணுக்குள்ளே என்னைப்பாரு ! என்ற பழைய பாடல் நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குநல்ல தகவல் பகிர்வு.
நன்றி.
மிக நல்ல விஷயம். இது நானும் பார்த்தேன். இதைப்பற்றிய தகவல்களும் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குஇதைத்தான் நம்மூர்ல "அகத்தின் அழகு முகத்தில் - கண்களின் வழியே தெரியும்னு " சொல்றது நினைவுக்கு வருகிறது
கீதா
சிறப்பான விஷயம். நல்லதற்கு இது போன்றவை பயன்பட்டால் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குசுந்தர் பிச்சை இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் சாதனையாளர் வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குசிறப்பான தகவல்...
பதிலளிநீக்குசிறப்பான செய்தி. இங்கே தினசரிகளில் பார்க்க நேரவில்லை. மனித குலத்துக்குப் பயன்படும் இத்தகைய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறப் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்கு