நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 14, 2023

திருப்புகழ்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 29
வெள்ளிக்கிழமை

இன்றைய பதிவில் வழக்கம் போல
திருப்புகழ்

குன்றுதோறாடல்

குமரன் விளையாடும்
குன்றுகளைக் குறித்தது.


தனனந் தனன தந்த ... தனதான
தனனந் தனன தந்த ... தனதான

அதிருங் கழல்ப ணிந்து ... னடியேனுன்
அபயம் புகுவ தென்று ... நிலைகாண

இதயந் தனிலி ருந்து ... க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க ... அருள்வாயே..

எதிரங் கொருவ ரின்றி ... நடமாடும்
இறைவன் தனது பங்கி ... லுமைபாலா

பதியெங் கிலுமி ருந்து ... விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
(நன்றி கௌமாரம்)
 

அதிர்கின்ற கழல்களை 
அணிந்திருப்பவனே 
உனது திருவடிகளை வணங்குகின்ற 
அடிமையாகிய நான் உன்னிடத்தில்
' அபயம் ' என்று புகுந்தேன்..

மெய் நிலையை நான் காணுமாறு - 
நீ எனது இதயத்தில் கருணையுடன் 
வீற்றிருந்து - என் மனதில் இருக்கும்
துன்பங்களும் துயரங்களும் 
கலைந்து ஓடுவதற்கு அருள்வாயாக..

தமக்கு இணையாக எவரும் இல்லாமல்
ஆனந்தத் தாண்டவம் புரிகின்ற
எம்பெருமானுடைய

இடப் பாகத்தில் விளங்கும் 
உமாதேவியின் திருக்குமாரனே,
திருத்தலங்கள் தோறும்
திருவிளையாடல்கள் புரிந்து,
குன்றுகள் பலவற்றிலும்
வீற்றிருக்கும் பெருமாளே..
*
முருகா..
முருகா..
***

17 கருத்துகள்:

  1. முருகன் அருள் நம்மை எல்லாம் காக்கட்டும்.  இன்றைய உங்கள் பிறந்த நாளில் முருகன் உங்களுக்கு எல்லா நலனையும் வழங்கப் பிரார்த்திக்கிறேன்.  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு.. அன்பு வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. பதில்கள்
    1. முருகா சரணம்
      முருகா சரணம்

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ரசித்த பதிவு. ஆனால் கவுண்டமணி ஜோக்கும் நினைவுக்கு வருது.

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. பதில்கள்
    1. முருகா சரணம்
      முருகா சரணம்

      மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  5. திருப்புகழும் பொருளும் சிறப்பு. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் துரை அண்ணா. இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்வை நல்கிடட்டும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்வை அருளட்டும்!..

      அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்
    திருப்புகழ் பாடலை படித்து முருகனை தரிசனம் செய்து கொண்டேன் .
    அனைவர் வாழ்விலும் துன்பங்களை, துயரங்களை மாற்றி மகிழ்ச்சியும், மனநிறைவு கிடைக்க அருள வேண்டும் முருகன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இறைவன் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்வை அருளட்டும்!.

      அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. இன்றைய பிறந்த நாளில் முருகன் அருளால் உங்கள் உடல் நலம் மேம்பட்டு முன் போல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் செயல்பட வாழ்த்துகிறேன். உங்கள் தொல்லைகள் நீங்க மன அமைதியுடனும் வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயன் முருகன் அனைவருக்கும் ஆரோக்கிய வாழ்வினை அருள்வானாக..

      அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முருகன் தரிசனம் பெற்றுக் கொண்டேன்.

    தங்களுக்கு இன்று பிறந்த நாளென எ. பியில் விபரம் அறிந்து கொண்டேன். இன்றைய நாளில் இனிய பிறந்த நாள் காணும் தங்களுக்கு என் மனமுவந்த பிறந்த நாள் வாழ்த்துகள். இறைவனின் நல்லருளால், தாங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு, எவ்வித உடற்பிணிகளின்றி வளமாக வாழ அந்த இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயன் முருகன் அனைவருக்கும் ஆரோக்கிய ஐஸ்வர்யங்களுடன் நல்வாழ்வினை அருள்வானாக..

      தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..