நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 28, 2023

ஆடி வெள்ளி 2

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 12
வெள்ளிக்கிழமை

ஸ்ரீ பிரஹந்நாயகி தஞ்சை
அபிராமி பட்டர்
அருளிச்செய்த
திருப்பாடல்கள்

ஸ்ரீ வாராஹி - தஞ்சை
சந்திர சடாதரி முகுந்த சோதரி! துங்க சலசு
     லோசன மாதவி சம்ப்ரம பயோதரி சுமங்கலி
     சுலட்சணி சாற்ற ருங் கருணாகரி
அந்தரி வராகி சாம்பவி அமர தோத்ரி அமலை
     செக சால சூத்ரி அகில ஆத்ம காரணி வினோத சய நாரணி
     அகண்ட சின்மய பூரணி
சுந்தரி நிரந்தரி துரந்தரி வரை ராச சுகுமாரி
     கௌமாரி உத் துங்க கல்யாணி புட்ப அத்திராம் புய
     பாணி தொண்டர்கட்கு அருள் சர்வாணி
வந்து அரி மலர்ப் பிரமராதி துதி வேதஒலி வளர்
     திருக் கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி
     சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே.. 2
-: திருப்பதிகம் :-


சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத் தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.. 8

ஸ்ரீ முத்து மாரியம்மன் தஞ்சை
கண்ணியது உன்புகழ் கற்பது உன் நாமம்
கசிந்து பத்தி பண்ணியது உன் இரு பதாம் புயத்தில்
பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து
நான் முன்செய்த புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.. 12
-: அபிராமி அந்தாதி :-
**

 என்கின்றார் பட்டர்.. அம்பிகையின் நாமங்களே கற்பதற்கு உரியவை.. அவைகளே  கரையேற்றுபவை..
அம்பாளின் திருநாமங்களைச் சொல்லுவதே அருந்தவம்..
அதற்கு மேல் வேறொரு வேண்டுதலும் வேண்டுமோ!..
**

நமது அன்புக்குரிய ஓவியர் திரு.மாருதி அவர்கள் (86) நேற்று மாலை இறைவனடி சேர்ந்தார்.. அவரது ஆன்மா 
சாந்தியடைய வேண்டிக் கொள்வோம்..
**

ஓம் சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி
ஓம்
***

19 கருத்துகள்:

  1. அம்பிகையின் திருநாமங்களை அனைவரும் உச்சரிப்போம்.  என்ன இன்று அரைமணி முன்னதாகவே பதிவு?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷெட்யூல் செய்யும் போது இணையம் குதித்துக் கொண்டிருந்தது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. ஓவியர் மாருதி அவர்களுக்கு அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  3. ஆடி வெள்ளி பதிவு சிறப்பு.

    ஓவியர் மாருதியின் மறைவு வருத்தத்துக்குரியது. அவரைப் பற்றி இன்னும் மூன்று பகுதிகள் எபியில் வரும்.

    பதிலளிநீக்கு
  4. பாடல்களை பாடி அம்பிகையை தரிசனம் செய்து கொண்டேன்.
    மாருதி அவர்கள் மறைவுக்கு அஞ்சலிகள். நான் அவரின் பேட்டி பொதிகையில் வந்தது, அதில் வந்த படங்களை படம் எடுத்து போட்டு பதிவு செய்தேன். நல்ல ஓவியர்.
    அவர் வரைந்த அம்பிகை படம் ஒன்றும் பகிர்ந்து இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் அம்பிகை படம் ஒன்றும் பகிர்ந்து இருக்கலாம்.

      அவர் அம்பிகை படம் வரைந்ததாகத் தெரிய வில்லை..

      தங்களது வருகைக்கு நன்றி.. நன்றி..

      நீக்கு
  5. https://mathysblog.blogspot.com/2018/08/blog-post_28.html
    அவர் பிறந்த நாள் அன்று இந்த பதிவு போட்டேன்.

    நம் "எங்கள் ப்ளாக்" ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள் மாருதி அவர்களின் ரசிகர்கள்!
    "புதன் கிழமை புதிர்ப் போட்டி"யில் மாருதி அவர்கள் ஓவியத்தைப் போட்டு யார் என்று கேட்டு இருந்தார்கள்.

    அது போல நீங்கள், நெல்லைத்தமிழன் நான் எல்லோரும் அவரின் ரசிகர்கள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பதிவு
      எனக்கும் நினைவு இருக்கின்றது..

      மேல் விவரங்களுக்கு நன்றி..

      நீக்கு
  6. ஆடி வெள்ளி அம்பிகை தரிசனம் நன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஓவியர் மாருதி அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். அவரது ஓவியத்தை டக்கென்று கண்டு பிடித்துவிடலாம். சிறந்த ஓவியர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்.. மாருதி தலைசிறந்த ஓவியர்..

      வாழ்க அவரது புகழ்..

      நீக்கு
  8. இன்றைய அம்மன் தரிசனப் பகிர்வுகள் பிரமாதம். அனைவரையும் தரிசித்துக் கொண்டேன். இன்னிக்கு ராகுகால விளக்கேற்ற ரொம்பத் தாமதம் ஆகிவிட்டது. ஏதேதோ குழப்பங்கள். குழப்பங்கள் இல்லாத தெளிவான மனநிலையைக் கொடுக்க அம்பிகையைப் பிரார்த்தித்துக் கொண்டேன்.

    ஓவியர் மாருதியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். என்க்குப் பிடித்த ஓவியர்களில் இவரும் ஒருத்தர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் தெளிவான மனநிலையைக் கொடுக்க அம்பிகையைப் பிரார்த்தித்துக் கொள்வோம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு
  9. அம்பிகையை சரணடைவோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..