நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூலை 13, 2023

நாகத்தி ஐயன் 1

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 28
  வியாழக்கிழமை

ஆனி மாத பௌர்ணமியன்று நாகத்தி ஸ்ரீ அழகிய வேம்பு ஐயனார் ஸ்வாமி தரிசனம்..

ஐயனிடம் ஈர்ப்பு என்றால் அப்படியொரு ஈர்ப்பு.. 

நல்ல நண்பனைப் போல போல,  மூத்த சகோதரனைப போல அப்படியொரு கனிவு..

அதனை நேரில் அனுபவிக்கத் தான் வேண்டும்..

அவசியம் நாகத்தி - அழகிய வேம்பு ஐயனார் சந்நிதிக்கு வாருங்கள்..

ஐயன் ஐயனைக் கண்ணாரக் கண்டு மகிழுங்கள்..

சென்ற மாதத்தில் புதுத் தண்ணீரின் வரவினால் ஆங்காங்கே சாகுபடிப் பணியை ஆரம்பித்து நாற்றங்கால் பாவியிருந்தார்கள்.
வெயில் சற்று தணிந்து விட்டதால் காற்று ஈரப் பதத்துடன் தவழ்ந்து கொண்டிருந்தது..

ஆனால், காவிரியில் வரத்து குறைந்து விட்டதால் கிளை ஆறுகளில் முழு வீச்சில் தண்ணீர் பாயவில்லை..



































நிலைமை சீராக வேண்டும் -என வேண்டிக் கொள்வோம்..

அடுத்த பதிவிலும் தங்களுக்காக சில படங்கள்..

நன்றி : அகில்

பூர்ணகலா தேவி போற்றி..
அழகிய வேம்பு
ஐயனார் போற்றி..
போற்றி..
***

9 கருத்துகள்:

  1. ஐயனின் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். மனம் மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் சிறப்பு. இயற்கைக்கு காட்சிகள் உள்ளத்தை நிறைத்தன. வயல், நீர்நிலை, முருக்கிக் கொண்டு நிற்கும் மரங்கள், வாழைத்தோப்பு எல்லாம் அழகு. காவிரியில் நீர் பெருகி அதன் கிளை நதிகளும் நிறையவேண்டும் என்று ஐயனை வேண்டிக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  3. இன்றைய தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  4. ஐயனார் படங்கள் அவர் வாகநம் குதிரை எல்லாம் ரொம்ப அழகாக இருக்கின்றன. கூடவே இயற்கைக் காட்சிகள் படங்கள் மனதைக் கவர்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. மரங்களின் வித்தியாசமான வடிவங்கள், கண்மாய், எல்லாம் மனதைக் கவர்கின்றன. வயல் நாற்றங்கால் எல்லாம் பார்க்கவே குளுமை,

    அருமையான பசுமை. ஆற்றில் நீர் குறைவு இப்போது சரியாகிவிடும் என்று தோன்றுகிறது அண்ணா, பருவ மழை இந்தமுறை தாமதம். இப்போது பெய்யத் தொடங்கிவிட்டதே மழை இங்கு கர்நாடகாவின் மலைப்பகுதிகளில் எனவே காவிரி வந்துவிடுவாள் அவளது குழந்தைகளும் பெருகிவிடுவார்கள்! ஆனி ஆடி விதைக்கும் காலம்...எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

    கீதா.

    பதிலளிநீக்கு
  6. படங்களும் ஆற்றின் காட்சிகளும் ஐயனாரின் தரிசனமும் அருமை. நீர் நிலைகள் நிறைய மழை பொழிய வேண்டும். எங்கே! காற்றைப் பார்த்தாலே வலுவில்லாமல் இருப்பது தெரிகிறது! இது எப்போது வேகம் பிடித்து மழை பொழிந்து நீர் நிலைகள் நிரம்புவது?

    பதிலளிநீக்கு
  7. வேம்பு ஐயனார் படம் அருமை. கோவில் இருக்கும் இடம் மிக அழகாய் இருக்கிறது. மரங்களும், காவேரி ஆறும், தென்னை மரங்களும் கரைகளில் உள்ள வாழை தோட்டமும் பார்க்கவே அழகு.
    ஐயனார் போற்றி போற்றி!

    பதிலளிநீக்கு
  8. அழகிய வேம்பு ஐயனார் சந்நிதி. வணங்குகின்றோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..