நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 2
செவ்வாய்க்கிழமை
நாகத்தி கிராமத்திற்கு
மேற்காக ஒரு கிமீ தொலைவில் பிரிகின்றது வெட்டாறு.
இதன் தென்புறக் கிளை வேம்பு ஐயனார்
கோயிலுக்கு அருகிலும் வடபுறக் கிளை நாகத்தி கிராம எல்லையிலுமாகச் செல்கின்றது..
மிகப் பழமையான தலம் நாகத்தி என்கின்றது ஸ்ரீ அகஸ்திய விஜயம்.. பல்லவர்களுக்கு முந்தையது என்றாலும் புராதனமான தலம்..
திருத்தலம்
நாகத்தி
இறைவன்
ஸ்ரீ பக்தவத்சலேஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ சௌந்தரநாயகி
தீர்த்தம் கமல புஷ்கரணி
தலவிருட்சம் கொன்றை
திருப்பாற்கடலில் எழுந்த சந்தன மரம் இங்குதான் நிலை பெற்றது என்கின்றது நூல்..
இங்கே சித்திரை சதய நாளில் ஈசன் சுயம்பு லிங்கமாக எழுந்ததாகவும் இந்த சந்தனச் சாந்தினால காப்பு செய்து அம்பிகை வணங்கியதாகவும் தலபுராணம்..
ஸ்ரீ அகஸ்திய முனிவரும் ஏனைய சித்தர்களும் வணங்கியிருக்கின்றனர்..
மராட்டிய காலத்தின் கோயில் தான் இங்கே
இன்றைக்கு விளங்குகின்றது..
நாங்கள் சென்றது நேரம் அல்லாத நேரத்தில் .. கோயில் தாழிடப்பட்டிருந்தது..
வெளியில் இருந்தபடியே சந்நிதிகளை வணங்கி வலம் செய்தோம்..
முதல் முறை நாகத்திக்கு வந்தபோது இங்கே சிவாலயம் இருப்பது தெரியுமே தவிர அருகில் செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை..
நாகத்தி கோயிலைப் பார்த்திராத அந்தத் தருணத்தில் - என் மனதில் ஒரு குரல் கேட்டது - மேற்கு நோக்கிய திருக்கோயில் என்று!..
இம்முறை சென்ற போது கோயிலைக் கண்டேன்.. மனம் சொன்னதைப் போலவே மேற்கு நோக்கிய திருக்கோயில்..
எனக்குள் ஆனந்த அலைகள்..
என்ன தவம் செய்தோமோ.. -
என்று ஆச்சர்யமும்
ஆனந்தமும் பொங்கின..
ஆனாலும்
ஆலய தரிசனம் மட்டுமே..
தஞ்சை தஞ்சபுரீஸ்வரர் கோயிலைப் போல மேற்கு நோக்கிய ஐயனின் சந்நிதியும் தெற்கு நோக்கிய அம்பிகையின் சந்நிதியும் ஒரே இணைப்பாக கோயில் விளங்குகின்றது..
மறுமுறை தான் சந்நிதி தரிசனம் கிடைக்கும் போல் இருக்கின்றது..
திறந்த வெளியாய் திருச்சுற்று.. இக்கோயிலில் கொடிமரப் பிரதிஷ்டை இல்லை.. சண்டேசர் சந்நிதியும் வெளியில் இல்லை..
ஏக தேசமாக இறைவனும் இறைவியும்
திகழ்கின்றனர்..
வாய்ப்பு கிட்டும் போது
அவசியம் இங்கு வந்து
தரிசனம் செய்யுங்கள்.
நாகத்தீஸ்வரா.. - என்று
சிந்தித்து இருக்க
நல்வாய்ப்பும் வந்து சேரும்..
பக்தவத்சலேஸ்வரரும்
சௌந்தர நாயகி அம்மனும்
வழிகாட்டுதற்குக் காத்திருக்கின்றனர்..
**
ஓம் பக்தவத்ஸலேஸ்வராய போற்றி..
ஓம் சௌந்தராம்பிகாயை போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
விவரங்கள் சுவாரஸ்யம். அடுத்தமுறை சன்னதி திறந்திருந்தது இறைவனை தரிசிக்கும் வாய்ப்பும் கிடைக்க வேண்டும்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குஓம் நம சிவாய..
நீக்குகோயில் படங்கள் மிக அழகு. பழம் பெருமை வாய்ந்த கோயில் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குதகவல்கள் சுவாரசியம். அடுத்த முறை உங்களுக்கு வாய்ப்பு கண்டிப்பாகக் கிடைக்கும் அண்ணா
கீதா
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ..
ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் கோவில் தரிசனம் கிடைத்தது.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
ஸ்ரீ பக்தவத்லேஸ்வரர் கோவிலை தரிசனம் செய்து கொண்டேன்.
பதிலளிநீக்குஉள்ளே இறைவனை தரிசனம் செய்ய நல் வாய்ப்பு கிடைக்கட்டும்.
இறைவனை தரிசனம் செய்ய நல் வாய்ப்பு கிடைக்கட்டும்.
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. புதிதான கோவில் பற்றிய விபரங்களும், படங்களும் மிக அருமையாக உள்ளது. நந்தியம்பெருமாளையும், ஈசனையும் , அன்னையையும் பக்தியுடன் பணிந்து தரிசனம் கண்டு வணங்கிக் கொண்டேன். நல்ல, நல்ல கோவில்களையும், அது அமைந்திருக்கும் விபரங்களையும், அங்கிருந்து மக்களை காக்கும் கடவுளாரைப்பற்றிய தகவல்களுமாக உங்களால் தினமும் கிடைக்கப் பெற்று வருகிறது. அதற்கு உங்களுக்கு என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
/// மக்களை காக்கும் கடவுளரைப் பற்றிய தகவல்களுமாக உங்களால் தினமும் கிடைக்கப் பெற்று வருகிறது.. ///
நீக்குஎன்னால் ஆன எளிய பணி.. இறைவன் கருணை..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..
உள்ளுணர்வு எப்போதுமே பொய்க்காது. அடுத்தமுறை சந்நிதி திறந்து அம்மையப்பன் தரிசனம் கிடைக்கவும் வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குதங்கள் வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் பலிக்கட்டும்.. மகிழ்ச்சியக்கா.
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி..