நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 28, 2023

கேரட்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 14
செவ்வாய்க்கிழமை

இணையத்தில் இருந்து 
செய்தித் தொகுப்பு..
படங்கள் : விக்கி
 நன்றி


கேரட்..

வேரடிக் கிழங்காக உயிர்ச் சத்துக்களை உள்ளடக்கி வளர்கின்ற தாவரம்..

மத்திய தரைக்கடல் பகுதியில் கண்டறியப்பட்டு நாளடைவில் எங்கும் பரவியது..

இதில் பீட்டா காரோட்டீன்  மிகுந்து உள்ளது.. இதுவே உடலில்  உயிர்ச் சத்து வைட்டமின் A யாக மாற்றப்படுகிறது. இதன் சாறு  உடல் நலத்திற்கு ஏற்றது.. 


கேரட் கண்பார்வையை மேம்படுத்துவதுடன் புற்றுநோய்த் தடுப்புப் பண்புகள் உடையதாகவும் இருக்கின்றது.. 

கேரட்டில்
அதிகப்படியான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. 

தினமும்  கேரட் சாறு அருந்துவதால் சருமம் பொலிவாகின்றது..

ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்படுகின்றது... 


இதிலுள்ள நார்ச்சத்துக்கள்  பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது..


கேரட் சாறு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்கின்றது..  இதிலுள்ள வைட்டமின்களும் மினரல்களும் பல நன்மைகளைச் செய்கின்றன..

கேரட்டில் வைட்டமின் ஏ, சி, கே, பி6, பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. இவை  வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கு உதவுகின்றன.


கேரட் சாறு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை முறைப்படுத்துவதிலும் அதிகப்படியான ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

கேரட் குறைந்த அளவு கலோரியும் குறைவான சர்க்கரை அளவும் கொண்டிருக்கிறது. 

இதனால் நீரிழிவு பிரச்னை குறைவதற்கும் பார்வைத் திறன் மேம்படுவதற்கும் உணவில்  கேரட் சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


கேரட்டில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவுகிறது.

அதோடு தைராய்டு வராமல் தடுக்கிறது.. கொலஸ்டிரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க கேரட் உதவியாக இருக்கிறது. 

அதனால் கேரட்டை அளவறிந்து அவ்வப்போது ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***

18 கருத்துகள்:

  1. அப்படியே சாப்பிடலாம்!  சமைத்துச் சாப்பிடுவதை விட எலுமிச்சம்பழம் பிழிந்து லேசாய் உப்பு போட்டு பிசறி சாப்பிடுவது வழக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்.. எலுமிச்சை சற்று அவஸ்தை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. கேரட்டிலும் பலவகை இருக்கிறது. உந்த சைனா கேரட்டால் (பெரியதாக இருப்பது) மற்றும் ஆஸ்திரேலியாவின் அளவுக் கேரட்டால் உபயோகம் இருப்பதுபோலத்்தெரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சைனீஸ் கேரட்டை விட அமெரிக்காவின் கேரட் நல்லது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி நெல்லை..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. கேரட் படங்கள் அழகு. பதிவும் அருமை.
    கேரட் நன்மைகள் பல , அவைகளை தொகுத்து கொடுத்தது நல்லது.
    கேரட் சாதம், கேரட் பீட்ரூட் தோசை எல்லாம் செய்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டிலும் அடிக்கடி கேரட் சாதம் தான்...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. கேரட் ஜூசைவிட பச்சையாக கடித்து தின்பது பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல் இல்லாதவர்கள் என்ன செய்வது?..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. நம் வீட்டில் பெரும்பாலும் காரட் பச்சையாகவேதான். எலுமிச்சை பிழிந்து கொஞ்சமே கொஞ்சம் உப்பிட்டு சாப்பிடுவதுண்டு. இல்லை என்றால் காரட் வெள்ளரி, பயத்தம் பருப்பு கலந்து பருப்பு ஊறியதும் சாப்பிடுவதுண்டு. கோசுமல்லி...

    இதோடு நிலக்கடலை வேக வைத்ததும் கலந்து சாப்பிடுவதுண்டு. இப்படி ஒவ்வொரு விதமாக...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// காரட் வெள்ளரி, பயத்தம் பருப்பு கலந்து பருப்பு ஊறியதும் சாப்பிடுவதுண்டு.///

      இது நல்லதாயிற்றே...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. வாரம் தவறாமல் எங்கள் வீட்டுக்கு வருவதில் இவரும் அடங்குவார்.

    நல்ல பயனுள்ள பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. பயனுள்ள தகவல்கள். பச்சையாக சாப்பிடுவது பிடித்தமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நலம் வாழ்க.

      நீக்கு
  9. காரட் வாங்குவோம். ஆனால் அதிகம் சமைப்பதில்லை. பச்சையாக சாலட் தான். இதோடு பிஞ்சு வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், மிளகுபொடி, உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பச்சைக்கொத்துமல்லி பொடியாக நறுக்கிக் கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு மேஜையில் வைத்துவிட்டால் போக வர போக வர அள்ளிப் போட்டுக் கொண்டு மதியச் சாப்பாட்டிற்குள் காலி ஆயிடும். வெஜிடபுள் சாதம் பண்ணும்போதும், பூரி, கிழங்கு பண்ணினாலும் ஒரு காரட்டானும் சேர்ப்பேன். முட்டைக்கோஸ் கூட்டு, சௌசௌ கூட்டு போன்றவற்றில் பச்சைப்பட்டாணியுடன் காரட்டும் சேர்த்தால் பார்க்கவும் உண்ணவும் நன்றாக இருக்கும். வடமாநிலத்தில் நல்ல சிவந்த நிறக் காரட்டுகள். பெரிது பெரிதாகக் கிடைக்கும் தித்திப்பு அதிகம். இங்கே ஆரஞ்சு நிறக் காரட்டுகள். நிதானமான அளவில் தான் இருக்கும். காரட் அல்வா வடக்கே கிடைக்கும் காரட்டுகளில் பண்ணினால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. அருமையான செய்திகளுடன் கருத்து..

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றியக்கா..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..