நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 04, 2023

ஆர் துணை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மாசி 20 
சனிக்கிழமை

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் 
அருளிச் செய்த திருப்பதிகம்..

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
இத்திருப்பதிகம் முழுதும்
எனக்கார் துணை நீயலதே..  - என்று 
உருகி வேண்டிகின்றார்..

அவ்வழியே செவ்வழி என, 
நாமும் கொள்வோம்..
**

ஏழாம் திருமுறை
திருப்பதிக எண் 28

தலம் 
திருக்கடவூர் வீரட்டம்


இறைவன்
ஸ்ரீ அமிர்தகடேசர்

அம்பிகை
ஸ்ரீ அபிராமவல்லி


பொடியார் மேனியனே புரி
நூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வளர்
அங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கட
வூர்தனுள் வீரட்டத்து எம்
அடிகேள் என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 1

பிறையா ருஞ்சடையாய் பிர
மன்தலை யிற்பலிகொள்
மறையார் வானவனே மறை
யின்பொருள் ஆனவனே
கறையா ரும்மிடற்றாய் கட
வூர்தனுள் வீரட்டத்து எம்
இறைவா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 2

அன்றாலின் நிழற்கீழ் அறம்
நால்வர்க்கு அருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்
தாய்மறை யோனுக்கு மான்
கன்றா ருங்கரவா கட
வூர்த்திரு வீரட்டத்துள்
என் தாதைபெருமான் எனக்
கார்துணை நீயலதே.. 3


போரா ருங்கரியின் உரி
போர்த்துப்பொன் மேனியின்மேல்
வாராரும் முலையாள் ஒரு
பாக மகிழ்ந்தவனே
காராரும் மிடற்றாய் கட
வூர்தனுள் வீரட்டானத்து
ஆரா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 4

மையார் கண்டத்தினாய் மத
மாவுரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருட் புகுந்
தாய் இன்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கட
வூர்தனுள் வீரட்டத்து எம்
ஐயா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 5

மண்ணீர் தீவெளிகால் வரு
பூதங்கள்  ஆகிமற்றும்
பெண்ணோ டாணலியாய்ப் 
பிறவா உரு ஆனவனே
கண்ணார் உண்மணியே கட
வூர்தனுள் வீரட்டத்து எம்
அண்ணா என்னமுதே
எனக் கார்துணை நீயலதே.. 6

எரியார் புன்சடைமேல் இள
நாகம் அணிந்தவனே
நரியா ருஞ்சுடலை நகு
வெண்டலை கொண்டவனே
கரியார்  ஈருரியாய் கட
வூர்தனுள் வீரட்டத்து எம்
அரியாய் என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 7

வேறா உன்னடியேன் விளங்
குங்குழைக் காதுடையாய்
தேறேன் உன்னையல்லாற் 
சிவனேஎன் செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா கட
வூர்த்திரு வீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய் எனக்
கார்துணை நீயலதே.. 8

அயனோ டன்றரியும் அடி
யும்முடி காண்பரிய
பயனே எம்பரனே பர
மாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கட
வூர்த்திரு வீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 9


காரா ரும்பொழில்சூழ் கட
வூர்த்திரு வீரட்டத்துள்
ஏராரும் இறையைத் துணை
யாஎழில் நாவலர்கோன்
ஆரூரன் அடியான் அடித்
தொண்டன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பர
லோகத் திருப்பாரே.. 10
திருச்சிற்றம்பலம்

சுந்தரர் திருவடிகள் 
போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

15 கருத்துகள்:

  1. சிவம் நம்மை காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் நம சிவாய..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. திருப்பதிகம் பாடி தரிசனம் செய்து கொண்டேன். படங்கள் எல்லாம் அருமை.
    சுந்தரர் திருவடிகள் போற்றி போற்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. தரிசனம் நன்று
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வளமுடன்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. திருக்கடவூர் அமிர்தகடேசர் அபிராமவல்லியை வணங்குகிறோம்.அனைவரையும் காக்கட்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அனைவரையும் காக்கட்டும் .

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சிறந்த சிவ பக்தர் சுந்தரர் எழுதிய பாக்கள் அருமை. அம்மையும் அப்பனும் உலக மக்களை காக்க வேண்டும். ஸ்ரீ சுந்தர மூர்த்தி நாயனாரின் பாதம் போற்றி வணங்குவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மையும் அப்பனும் உலக மக்களை காக்க வேண்டும்.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. திருக்கடவூர் அமிர்தகடேசர், அபிராமவல்லி அழகு.

    நல்லதே நடக்கட்டும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதே நடக்கட்டும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. அன்னை அபிராமியும், அமிர்த கடேசரும் அனைவருக்கும் அருள் மழை பொழியட்டும். திருக்கடவூர்/திருக்கடையூர் இரண்டும் ஒண்ணு தானே?

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..