நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 27, 2023

வெண்டைக்காய்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 15
புதன் கிழமை

இணையத்தில் இருந்து
செய்தித் தொகுப்பு
படங்களுக்கு நன்றி: விக்கி..


வெண்டை..

நல்ல பச்சை நிறமான  இளஞ்செடி..
 முழுவதும் சொரசொரப்பான பூஞ்சுனைகள் உடையது..

எத்தியோப்பியாவின் மேட்டுப் பகுதியே இதன் தாயகம் 
என்று அறியப்படுகின்றது..

ஆனாலும் நமது நாட்டிற்கு பழகி விட்ட ஒன்றாக இருக்கின்றது வெண்டை..

ஆடிப் பட்டத்தில் விதைக்கப்பட்ட வெண்டை இருபத்தைந்து நாட்களில் பூத்து விடுகின்றது..
அடுத்த இருபது நாட்களில் காய் பறிக்கலாம்.. 

வருடம் முழுதும் விளையக் கூடியது என்றாலும் விளைச்சலைப் பொறுத்தே சந்தைக்கு வருகின்றது..

பொதுவாக
கூம்பிய வடிவத்தில்  ஐந்து பட்டைகளை உடையது வெண்டைக்காய்.. அதிகபட்சமாக ஐந்து அங்குல நீளம் உடையது..  எட்டு பட்டைகளுடன் கூடிய வெண்டை இனங்களும் இருக்கின்றன..



வெண்டைக்காயை குறுக்காக நறுக்கினால் 
ஐங்கோணத்துடன் வெள்ளை நிற விதை முத்துக்களைப் பார்க்கலாம்.. ஐங்கோணம் பஞ்சாட்சரம்..  ஞானத்தின் அடையாளம்.. அறு கோணமும் அப்படியே..

பிரம்ம லோகத்தில் நான் முகனுடன் வீற்றிருக்கும் 
ஸ்ரீ சரஸ்வதியை அவளது பீஜ மந்திரங்கள் இந்த வடிவத்தில் தான் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்பது ஆன்றோர் வாக்கு..


நமது நாட்டில்  வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்கிற  நம்பிக்கை இதன் அடிப்படையில் தான்..

வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்கிற  நம்பிக்கை  உண்மை தான் என்பதை இப்போது ஏற்றுக் கொள்கின்றார்கள்..

பிஞ்சு வெண்டைக் காய்களை அப்படியே சாப்பிடுவது தனி சுகம்.. வெண்டையை பலவிதமாக சமைத்தும் சாப்பிடலாம்.. 

நமது உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.  தினமும்  சில வகையான காய்களை  உணவில் சேர்த்துக் கொள்வதால் நன்மைகள் அதிகம். அப்படி அவசியமானவற்றுள்  வெண்டைக்காயும் ஒன்று..

மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உறுதுணை வெண்டைக்காய்..

குழந்தைகள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால்  மூளையின் செயல் திறன் அதிகரித்து ஞாபக சக்தி பெருகுகின்றது.

ஞாபக சக்தி பெருகுவதால் கல்வியில் சிறப்பிடம் தானே!..


வெண்டைக்காயினால்  ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு உயராது. நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் வெண்டைக்காய் சாப்பிடுவதால்  ரத்தத்தில் சர்க்கரையின் அளவு   குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர்.


எனவே வாரத்திற்கு  இரண்டு  மூன்று முறை வெண்டைக்காய் உண்பதை வழக்கமாகக் கொள்வது நல்லது

உடலில் தீமையான செல்களை அழித்து, ஆரோக்கியமான செல்களை  வளர்ச்சி பெற செய்யும் ஆற்றல் வெண்டைக்காய்க்கு உள்ளது.. 

வெண்டைக்காயில் உள்ள  சத்துக்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

ரத்த சோகை, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண் - என சகல நோய்களுக்கும் வெண்டைக்காய் சிறந்த நிவாரணி..

வெண்டைக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், கேட்டராக்ட் மற்றும் பார்வைக் குறைபாடுகளைத் தவிர்க்கக் கூடியது


வெண்டைக்காயில், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ்,பொட்டாசியம், சோடியம், வைட்டமின் B1, வைட்டமின் B2, வைட்டமின் B6, வைட்டமின் B9, 
வைட்டமின் C - என ஏராளமான சத்துகள் உள்ளன என்கின்றது விக்கி..


வெண்டைக்காயின் சிறப்பு அதன் வழவழப்புத் தன்மை
(Mucilage - Gelatinous substance) ..
இந்த வழவழப்புத் தன்மையில் தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன.

நலம் தரும் வெண்டையை  வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உணவில் சேர்த்து உடல் நலனை  மேம்படுத்திக் கொள்வோம்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***

20 கருத்துகள்:

  1. இப்போதெல்லாம் வெண்டையை சமைக்கிறேன் என்று எண்ணெய் விட்டு அதை கருக்கவிட்டு மொறுமொறுவென சமைத்துத் தருகின்றனர்.  குழந்தைகளுக்கும் அப்படிதான் பிடிக்கிறது.  என் அம்மா இதை எண்ணெய் விடாமல் அரை வதக்கலாக வதக்கித் தருவார்.  பசுமை மாறாமல் இருக்கும்.  தாளிக்க மட்டும் அரை ஸ்பூன் எண்ணெய்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // என் அம்மா இதை எண்ணெய் விடாமல் அரை வதக்கலாக வதக்கித் தருவார். பசுமை மாறாமல் இருக்கும். தாளிக்க மட்டும் அரை ஸ்பூன் எண்ணெய்!..//

      இது தான் பக்குவம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
    2. ஸ்ரீராம், அதேதான்...

      கீதா

      நீக்கு
  2. எனக்கு வெண்டைக்காய் பிடித்தமான உணவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. வெண்டையில் பொட்டாசியச் சத்து அதிகமென்பதால் கிட்னி பிரச்சனை இருப்பவர்கள் இதனை உபயோகிக்கமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தச் செய்தியும் கவனத்தில் கொள்ளத் தக்கது

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி நெல்லை..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. வெண்டைக்காய் படங்களும், செய்திகளும் அருமை.

    வெண்டைக்காய் பிஞ்சாய் வாங்கும் போது எல்லாம் பச்சையாக என் கணவர் எடுத்து சாப்பிடுவார்கள், என் குழந்தைகளும் அப்படியே சமைக்காமல் சாப்பிடுவார்கள்.
    ஸ்ரீராம் சொல்வது போல நிறம் மாறாமல் அம்மா பச்சையாக சமைப்பார்கள் அடுப்பை நிதானமாக எரியவிட்டு கருகாமல் வதக்கி செய்வார்கள். வெங்காயம், மற்றும் தேங்காய் சேர்த்தும் செய்வார்கள்.
    சாம்பாரில் போடுவது பிடிக்கும் வீட்டில் எல்லோருக்கும்.
    மோர் குழம்பில் மட்டும் எண்ணெயில் வறுத்து போடுவார்கள்.
    கணக்கு நல்ல வரவேண்டுமா வெண்டைகாய் சாப்பிடு என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாம்பாரில் போடுவதும் மோர் குழம்பில் போடுவதும்
      எங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் பிடிக்கும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
    2. அதே அதே கோமதிக்கா,,,

      கீதா

      நீக்கு
  5. மிகவும் பிடிக்கும்... தகவல்கள் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. வெண்டை பற்றிய தகவல்கள் நன்று. பயனுள்ள பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. நம் வீட்டில் வெண்டைக்காய் ரொம்பப் பிடிக்கும். ஆனால் எண்ணை விட்டு வதக்கோ வதக்குன்னு வதக்கி நிறம் மாறி செய்வதில்லை. தாளிக்க மட்டும் சொட்டு எண்ணை. அதன் கொழ கொழப்பும் கொஞ்சம் இருக்க வேண்டும் அதுதான் நலல்து என்பதால் இப்படித்தான் சமைப்பது.

    தகவல்கள் அனைத்தும் அருமை, துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வெண்டைக்காயின்
      கொழ கொழப்பும் கொஞ்சம் இருக்க வேண்டும் அதுதான் நல்லது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. சாம்பார், மோர்க்குழம்பில் போட்டால் செமையா இருக்கும். அது போல வெங்காயம் போட்டும். பிஞ்சென்றால் அப்படியே சாப்பிடுவதுண்டு. வெண்டை தயிர்பச்சடியும் நல்லா இருக்கும் ஆனால் அதிகம் வதக்காமல் செய்வது. பிஞ்சுனா அதுவும் இல்லாமல் தயிரில் கலந்து...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. // வெண்டை தயிர் பச்சடியும் நல்லா இருக்கும்.. //

      ஆகா..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  9. வெண்டைக்காய் இங்கே எல்லோருக்கும் பிடித்தமானது. பிஞ்சு வெண்டைக்காயைப் பொறுக்கி ஒரே மாதிரியாக எடுத்துக்கொண்டு மேல் காம்பைக் கொஞ்சம் போல் அகற்றிவிட்டு, அடியில் லேசாகக் கீறிக்கொண்டு உள்ளே மி.பொ.ம.பொ. உப்பு, பெருங்காயம், ஜீரகப்பொடி போன்றவற்றைக் கலந்து அடைத்து சிறு தீயில் முழுசாக வதக்குவோம். சப்பாத்திக்குத் தொட்டுக்கலாம்/ நம்ம ஊர் முறைப்படியும் பண்ணலாம். ஆனால் எனக்கு என்னவோ வெண்டைக்காய் ஒத்துக்கறதில்லை. ஆகவே சும்மா பேருக்குப் போட்டுப்பேன். கடலை மாவை பஜ்ஜி மாவு போல் கரைத்துக் கொண்டு முழுசாகச் சின்ன வெண்டைக்காய்களை அதில் முக்கி எடுத்து பஜ்ஜி போலவும் போடுவது உண்டு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..