நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 06, 2023

மாசி மகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மாசி மகம்
மாசி 22
திங்கட்கிழமை

இன்றைய தரிசனம்
குடந்தை மாநகர்
(கும்பகோணம்)


பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்து தங்கிய
அமுத கலசத்தை வேடுவராக வந்த இறைவன் அம்பினால் உடைத்து அதனுள் தாமே எழுந்தருளிய
திருத்தலம்.. 

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியில் நிற்க, சந்திரன் கும்ப ராசியில் இருக்கும் (மாசிமக)
பௌர்ணமி நாளில் மகாமகம் நடைபெறுகின்ற தலம். 

கங்கை, சரயு, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி - ஆகிய நவ நதிக் கன்னியரும் நீராடிய நாள் தான் மகாமகம்..

குடந்தையுள் திருப்பதிகம் பெற்ற தலங்கள் மூன்று..

திருக்குடமூக்கு,  
திருக்குடந்தைக் கீழ்க் கோட்டம், 
திருக்குடந்தைக் காரோணம் - என்பன.


திருக்குடமூக்கு
(ஸ்ரீ கும்பேசுவரன் கோயில்)
பிரளயத்தில் மிதந்த்
அமிர்த கலசம் 
தங்கிய இடம்..


இறைவன்
ஸ்ரீ கும்பேஸ்வர ஸ்வாமி


அம்பிகை
ஸ்ரீ மங்களாம்பிகை
தலவிருட்சம் வில்வம் வன்னி
தீர்த்தம் மகாமக தீர்த்தம்

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருப்பதிகம் அருளியுள்ளனர்.


நங்கையாள் உமையாள் உறைநாதனார்
அங்கையாள்  அறுபதந் தாழ்சடைக்
கங்கையாள் அவள் கன்னி எனப்படும்
கொங்கையாள் உறையும் குட மூக்கிலே.. (5/22/3)
-: திருநாவுக்கரசர் :-


குடந்தைக் கீழ்க்கோட்டம் 
( ஸ்ரீ நாகேஸ்வரன் கோயில்)
நாகராஜன் வழிபட்ட தலம்.

இறைவன்
ஸ்ரீ நாகேஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ பிரஹந்நாயகி
தலவிருட்சம் வில்வம்
தீர்த்தம் மகாமக தீர்த்தம்

சித்திரை 11,12,13 தேதிகளில் காலை வேளையில் சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத் திருமேனி மீது படர்கின்றன..

 திருநாவுக்கரசர் திருப்பதிகம் அருளியுள்ளார்.

பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூர் உள்ளார்
புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு
மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்
மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல
தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து
திருஆனைக் காவில் ஓர் சிலந்திக் கந்நாள்
கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.. (6/75/8)
-: திருநாவுக்கரசர் :-
 

குடந்தைக் காரோணம்
(ஸ்ரீ விஸ்வநாதர் கோயில்)
நதிக்கன்னியர் வழிபட்ட தலம்..

இக்கோயிலில் தான்
நதிக்கன்னியர்
விளங்குகின்றனர்..

இறைவன்
ஸ்ரீ காசி விஸ்வநாதர்
அம்பிகை
ஸ்ரீ விசாலாட்சி
தலவிருட்சம் வேம்பு
தீர்த்தம் மகாமக தீர்த்தம்

ஸ்ரீ காவிரி




வாரார்கொங்கை மாதோர்பாக மாக வார்சடை
நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றி யொற்றைக்கண்
கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன் குடமூக்கில்
காரார்கண்டத்து எண்தோள் எந்தை காரோ ணத்தாரே..(1/72/1)
-: திருஞானசம்பந்தர் :-
  
ஸ்ரீ வியாழசோமேசர் கோயில்
குடந்தைக் காரோணம் என்பது -
பொற்றாமரைக் குளத்தின் மேல் கரையிலுள்ள
ஸ்ரீ தேனார்மொழியாள் உடனுறை ஸ்ரீ சோமேஸ்வரர் கோயில் 
வியாழ சோமேசர் கோயில் -  என்று கொள்ளப்படுகின்றது..

வியாழனும் சந்திரனும் 
வணங்கிய தலம்..
**

கும்பகோணம் 
திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் 
திகழ்கின்றது..


திருக்குடந்தை
ஸ்ரீ சார்ங்கபாணி கோயில்


ஸ்ரீ சார்ங்கபாணி
ஸ்ரீ ஆரா அமுதன்
ஸ்ரீ கோமளவல்லி

தலவிருட்சம் புன்னை
பொற்றாமரை தீர்த்தம்

வைதீக விமானம்
கிழக்கு நோக்கிய சயனத் திருக்கோலம்..

மங்களாசாசனம்
பெரியாழ்வார், ஆண்டாள்,  திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார்..

கருவறைக்கு உத்தராயணம் 
தட்சிணாயணம் என - இரண்டு திரு வாசல்கள்..


சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்கம் மங்க அன்று சென்று  அடர்த்து எறிந்த ஆழியான்
கொங்கு தங்கு வார்குழல் மடந்தைமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே!.. (808)
-: திருமழிசையாழ்வார் :-

கும்பகோணம் நகருக்குள்  ஆலயங்கள் அநேகம்.. 

அவற்றுள் சிவாலயங்கள்:
ஸ்ரீ அபிமுகேசர் திருக்கோயில்,
ஸ்ரீ வியாழ சோமேசர் திருக்கோயில்,
ஸ்ரீ பாணபுரீசர் திருக்கோயில்,
ஸ்ரீ ஏகாம்பரேசர் திருக்கோயில்,
ஸ்ரீ கம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயில்,

பெருமாள் கோயில்கள்:
ஸ்ரீ சக்ரபாணி கோயில்,
ஸ்ரீ வராகப்பெருமாள் கோயில்,
ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில்,
ஸ்ரீ ராமஸ்வாமி கோயில்..

கும்பகோணம் நகருக்கு
அருகிலுள்ள தலங்கள்:
திருக்கொட்டையூர் 2 கிமீ 
பழையாறை வடதளி 4 கிமீ 
திருகலயநல்லூர் (சாக்கோட்டை ) 4 கிமீ 
திருஇன்னம்பர் (இன்னம்பூர்) 4 கிமீ 
திருசத்திமுத்தம் 5 கிமீ 
திருபட்டீச்சரம் (பட்டீஸ்வரம்) 5 கிமீ 
திருசிவபுரம் 4 கிமீ 
திருவலஞ்சுழி 5 கிமீ 
திருஏரகம் (சுவாமிமலை) 7கிமீ.

கும்பகோணம் நகருக்கு
அருகிலுள்ள திவ்ய தேசங்கள்: 

திருஆதனூர், திருபுள்ளபூதங்குடி, 
திருவிண்ணகர்,
(ஒப்பிலியப்பன் கோயில்)
 திருச்சேறை, திருநறையூர்
(நாச்சியார் கோயில்)..


மாசி மகத்தன்று
சிவாலயங்களின் தீர்த்தவாரி மகாமகக் குளத்திலும் பெருமாள் கோயில்களின் தீர்த்த வாரி - காவிரியின் சக்கர படித்துறையிலும் நடைபெறும்..

கண்டு தரிசிப்பதற்கு வாய்ப்பையும் வசதியையும் 
எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக..

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

24 கருத்துகள்:

  1. குயில் பாடும் கும்பகோணம் கோவில் கண்டேன்.  கும்பேஸ்வர பெருமானின் வடிவம் கண்டேன்.  அமிர்த குடம் உடைந்ததினால் அமைந்த லிங்கம்..அனைவர்க்கும் அருள் போற்றும் அழகு லிங்கம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      சிவாய நம..

      நீக்கு
  2. கும்பகோணம் கோயில் நகரம். பல சிவாலயங்களை நான் தரிசித்ததில்ஙை.

    பெரியகடை வீதியில் தசாவதாரக் கோயில், ராஜகோபாலஸ்வாமி, ஆஞ்சநேயர், சாத்தாரப்பன் வீதியிலுள்ள மிருமழிசையாழ்வார் திருவரசு, கொஞ்சம் பக்கத்தில் உள்ள கரைம்பாயிரம் விநாயகர் கோவில் போன்ற பல தலங்களைக் குறிப்பிடவில்லை.

    வைணவத் தலங்களை சிவாலயங்கள் தலைப்பின்கீழ் கொடுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வைணவத் தலங்களை சிவாலயங்கள் தலைப்பின் கீழ்..//

      அது வரிகளுக்கு இடைவெளி அமையாமல் போயிற்று..

      மற்றபடி அங்குள்ள அம்மன் கோயில்கள். பிள்ளையார் கோயில்கள், மடங்கள் இதையெல்லாம் போடுவதென்றால் இன்னொரு பதிவு போட வேண்டும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் ஹரி ஓம்..

      நீக்கு
  3. கும்பகோணம் கோயில்கள் பற்றி நிறைய எழுதலாம். பதிவு நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அருமையான தகவல்கள்...

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. ராஜகோபுர தரிசனம் நன்று
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      வாழ்க வளமுடன்..

      நீக்கு
  6. மாசி மகாமகம் நாளில் கும்பகோணம் கோவில், நவ நதிக்கன்னியர் தரிசனம் என சிறப்பான பகிர்வு.

    அற்புதமான தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  7. பழையாறை எல்லாம் போகலை. ஆனால் பெரும்பாலான கோயில்கள் போயிருக்கோம். திவ்ய தேசங்கள் எல்லாமுமே போயிருக்கோம். தடுக்கி விழுந்தால் கோயில் தானே அங்கு. நாகநாதர் கோயில் ஒரே முறை போனோம். சோமேஸ்வரர் கோயில் போனதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகு நாட்களுக்குப் பிறகு தங்கள் வருகை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. தலங்களும் அவற்றின் சிறப்பும் அருமை. ஓ இன்று மாசி மகமா....துரை அண்ணா அங்கு போயிருக்கார் போல!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வருடமும் செல்வதற்கு இயல வில்லை..

      கடுமையான கூட்டம் என்று செய்திகள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  9. பதிவு அருமை. மாசி மகத்திற்கு ஒரு முறை போய் தரிசனம் செய்து வந்து விட்டோம். கும்பகோணம் கோவில்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கும். பழமையான கோவில்கள்.
    கும்பகோணம் கோவில்களை த்ரிசனம் செய்ய விரும்புபவர்களுக்கு சிறந்த வழி காட்டி இந்த பதிவு.
    படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கும்பகோணம் கோவில்களை தரிசனம் செய்ய விரும்புபவர்களுக்கு சிறந்த வழி காட்டி இந்த பதிவு..//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவு அருமையாக உள்ளது.கோவில் படங்கள் அருமை. கோபுர தரிசனங்கள் பெற்றுக் கொண்டேன். மாசிமகத்திருநாளில் அனேக சிறப்பான கோவில்களை பற்றி குறிப்பிட்டு அருமையான தரிசனம் பெற வைத்து விட்டீர்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. // மாசிமகத் திருநாளில் அனேக சிறப்பான கோவில்களை பற்றி குறிப்பிட்டு அருமையான தரிசனம்//

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    என்னுடைய கருத்துரை காணவில்லையே.. பதிவு இன்றைய நாளுக்கென சிறப்பாக உள்ளதென்று கருத்து தந்திருந்தேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்து விட்டேனே..

      //கும்பகோணம் கோவில்களை தரிசனம் செய்ய விரும்புபவர்களுக்கு சிறந்த வழி காட்டி இந்த பதிவு..//

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..