நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 05, 2023

அரத்துறை

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 21
  ஞாயிற்றுக்கிழமை

திருவட்டுறை..

திரு நெல்வாயில் அரத்துறை
எனப்பட்ட - தேவாரத் தலத்தின் தற்காலப் பெயர்.. 

திருவட்டுறை கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி  வட்டத்தில் அமைந்துள்ளது..
(படங்கள்: நன்றி விக்கி)


நடு நாட்டில் நிவா நதியின் கரையில் அமைந்துள்ள திருக்கோயில்..

நடு நாட்டுத் திருத்தலங்களுள் இது முதலாவதாகும்..

மஹாவிஷ்ணு, வால்மீகி, சனைச்சரனுடன் அங்காரகன் வழிபட்டதாக ஐதீகம்..

நிவா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது,  நந்தியம்பெருமான் தலையைச் சற்றே திரும்பி வெள்ளத்தைப் பார்க்க, வெள்ளம் வடிந்ததாக தல வரலாறு..



ஞான சம்பந்தப் பெருமானுக்கு முத்துச் சிவிகை, மணிக் குடை, பொற் சின்னம் ஆகியன அருளப் பெற்ற திருத்தலம்.

ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் தரிசனம் செய்து திருப்பதிகம் அருளியுள்ள தலம்..


இறைவன்
அரத்துறைநாதர் 
ஆனந்தீஸ்வரர் 
தீர்த்தபுரீஸ்வரர்


அம்பிகை 
அரத்துறைநாயகி
ஆனந்தநாயகி
திரிபுரசுந்தரி

தீர்த்தம் நிவா நதி, வெள்ளாறு
தலவிருட்சம் ஆலமரம்
(ஸ்வாமி அம்பாள் படங்கள்: நன்றி  அகில்)

சேர சோழ பாண்டிய மன்னர்கள் பெயரில் லிங்க மூர்த்திகள் விளங்குகின்றன. 

அருகில் உள்ள திருத்தலம் : திருத்தூங்கானை மாடம் (பெண்ணாகடம்).

பெண்ணாகடம் ரயில் நிலையத்தில் இருந்து 6 கிமீ. தூரத்தில் உள்ளது திருவட்டுறை..


எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லால் சென்று கைகூடுவ தன்றால்
கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவாமல்கு கரை மேல்
அந்தண் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்தம் அருளே..
-: ஞானசம்பந்தர் :-

புனல்ஒப்பானைப் பொருந்தலர் தம்மையே
மினலொப்பானை விண்ணோரும் அறிகிலார்
அனலொப்பானை அரத்துறை மேவிய
கனலொப்பானைக் கண்டீர்நாம் தொழுவதே..
-: திருநாவுக்கரசர் :-

கல்வாய் அகிலுங் கதிர்மாமணியுங்
கலந்து உந்திவரு நிவாவின் கரைமேல்
நெல்வாயில் அரத்துறை நீடுறையுந்
நிலவெண்மதி சூடிய நின்மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்
சொல்லாய்க் கழிகின்றது அறிந்தடியேன்
தொடர்ந்தேன் உய்யப் போவதோர்சூழல் சொல்லே.. 7/3/1
-: சுந்தரர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

9 கருத்துகள்:

  1. அழகிய கோவில்.  சுவாரஸ்யமான விவரங்கள்.  பள்ளியில் படித்தபோது திட்டகுடியிலிருந்து ஒரு நண்பன் வருவான்.

    பதிலளிநீக்கு
  2. கும்பகோணத்தில் சில மாதங்கள் தங்கினால்தான் ஓரளவாவது எல்லாக் கோயில்களையும் தரிசிக்க முடியும் எனத் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  3. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  4. திருவட்டுறை இறைவா போற்றி போற்றி.

    பதிலளிநீக்கு
  5. கோயில் மிக அழகாக இருக்கிறது...நிவா நதி - பெயரே வித்தியாசமாக இருக்கிறதே!!!

    கோயில் பற்றிய தகவல்கள் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
  6. திருவட்டுறை தேவாரம் பாடி தரிசனம் செய்து கொண்டேன். படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருவட்டுறை கோவில் படங்கள், கோவிலைப் பற்றிய விபரங்கள் முறையே பார்த்து, படித்து தெரிந்து கொண்டேன். கோவில் அழகாக இருக்கிறது. அருள் மிகும் ஐயன் அரத்துறை நாதரும், உலகமெல்லாம் காத்தருளும் அன்னை அரத்துறை நாயகியும் அனைவரையும் நலத்துடன் காக்க வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. இந்தக் கோயில் குறித்தெல்லாம் அறிந்ததில்லை. கடலூருக்குச் சில முறை போயும் இது பற்றி அறிய வாய்ப்பில்லை. இனி போவேனா சந்தேகமே!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..