நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று பங்குனி மாதத்தின் முதல் நாள்..
சுக்ல பட்ச திரயோதசி
செவ்வாய்க்கிழமை..
ப்ரதோஷ புண்ய காலம்
திருத்தலம்
திரு புள்ளிருக்குவேளூர்
( வைத்தீஸ்வரன் கோயில்)
இறைவன்
ஸ்ரீ வைத்தியநாதர்
அம்பிகை
ஸ்ரீ தையல்நாயகி
தீர்த்தம்
சித்தாமிர்த தீர்த்தம்
தல விருட்சம் - வேம்பு
எண்ணிறந்த சிறப்புகளை உடைய இத் திருத்தலத்தின்
சித்தாமிர்த திருக்குளக்
காட்சிகள்
தனிப் பதிவாக
சென்ற வாரத்தில் வெளியிடப் பெற்றது..
இன்று ஆலய தரிசனம்..
திறங்கொண்ட அடியார்மேற்
தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம்
உரைத்த பிரான் அமருமிடம்
மறங்கொண்டங்கு இராவணன் தன்
வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான்
புள்ளிருக்கு வேளூரே..2.043. 6
-: திருஞானசம்பந்தர் :-
பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப்
படர்சடைமேற் புனல்கரந்த படிறன் தன்னை
நண்ணியனை என்னாக்கித் தன்னா னானை
நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் திங்கட்
கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்
காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.6.054.9
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
திருத்தலப் படங்கள் சிறப்பு. பிரதோஷ புண்ய காலத்தில் நமச்சிவாய என்றே சரணடைவோம்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
மகிழ்ச்சி..நன்றி..
அருமையான படங்கள். பார்த்து ரசித்த இடங்களையும் மீண்டும் பார்க்கக் கிடைத்தது. கும்பாபிஷேஹத்திற்குப் பின்னால் போகலை. நாங்க போனப்போத் திருக்குளத்துக் கூரை இப்போவோ/அப்போவோ என்னும் நிலைமையில் இருந்தது. பயந்து கொண்டே தான் போனோம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குதிருக்குளத்து பிரகாரம் , முன் மண்டபம் எல்லாமும் நன்றாக எடுத்துக் கட்டப்பட்டு விட்டன...
கோயில் எப்போதும் போல அழகு..
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..
தரிசனம் நன்று வாழ்க வையகம்.
பதிலளிநீக்குவைத்திய நாதன் கோவில் பாடங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குகோபுர தரிசனம் செய்தேன். மிக அருமையான பயணம்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குவைத்தீஸ்வரன் கோயில் கோயில் என்றாலே நெஞ்சில் பரவசம்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
வைத்தீஸ்வரன் கோயில் சென்றதுண்டு. படங்கள் அருமை. மிகவும் பழைமை வாய்ந்த கோயில் என்று தெரிந்தது. நாங்கள் சென்றிருந்த போது இத்தனை பளிச்சென்று இல்லை. இப்போது புதிப்பித்திருக்கிறார்கள் போலும். நாங்கள் பக்கவாட்டு வழியாக உள்ளே சென்று முன்பக்கம் வழி வெளியில் வந்து பார்த்துவிட்டு மீண்டும் உள்வழி சென்றோம். அப்போது கடைகள் இருந்தாலும் இந்த அளவிற்கு பார்த்த நினைவில்லை.
பதிலளிநீக்குஎனக்கு மிகவும் பிடித்த கோயில்.
கீதா
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. மிகப் பழமையான கோயில் தான்.. திருப்பணி நடந்த பிறகு நன்றாக இருக்கின்றது..
நீக்குமுன் மண்டபத்துக் கடைகள் எல்லாம் இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளன..
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
திருவிழா சமயமோ? தோரணம் எல்லாம் அழகாக இருக்கின்றன. நாங்கள் சென்ற சமயத்தில் இப்படி இல்லை. பல இடங்கள் ரொம்பவும் இருட்டாக சன்னதி எல்லாம் மூடியே இருந்தன. விளக்கு கூட ஏற்றியிருக்கவில்லை.
பதிலளிநீக்குகீதா
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
பதிலளிநீக்குகோயிலில் எப்போதும் பதாகைகளும் தோரணங்களும் ஆடிக்கொண்டிருக்கும்..
அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில்..
வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
சிறப்பான தகவல்களும் படங்களும். உங்கள் வழி நாங்களும் தரிசனம் கண்டோம்.
பதிலளிநீக்கு