நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று (மாசி 17) செவ்வாய்க் கிழமை யன்று ஸ்ரீ மஹா சிவராத்திரி புண்ய காலத்தின் முதல் கால அபிஷேக தரிசனம் தஞ்சை வெண்ணாற்றின் வடகரையில் விளங்கும் ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை உடனுறை
ஸ்ரீ தளிகேஸ்வரஸ்வாமி திருக்கோயில்..
முதல் காலம் ஆனதால் சற்றே நெரிசல்.. இருப்பினும் தயக்கமும் கூட... இரண்டு படங்கள் மட்டுமே அங்கே..
இந்தக் கோயிலைப் பற்றிய விவரங்களை விரைவில் தருகின்றேன்..
இரண்டாம் கால அபிஷேக தரிசனம் தஞ்சை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை உடனாகிய ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்..
மூன்றாம் கால அபிஷேக தரிசனம் தஞ்சை பூக்குளம் ஸ்ரீ தேனார் மொழியாள் உடனுறை ஸ்ரீ சிதானந்தேஸ்வரர் திருக்கோயில்..
தஞ்சை பூக்குளம் ஸ்ரீ பாவா ஸ்வாமி அதிஷ்டான தரிசனம்..
இன்று பகல் பொழுதில் ஸ்வாமிகளுக்கு குருபூஜை வழிபாடு..
நான்காம் கால அபிஷேக தரிசனம் தஞ்சை பூக்குளம் ஸ்ரீ வேதவல்லி அம்பிகை உடனாகிய
ஸ்ரீ நாகநாகேஸ்வரர் ஸ்வாமி திருக்கோயில்..
தஞ்சை ஸ்ரீ பிரஹதீஸ்வரர் திருக்கோயிலில் நேற்று மாலை ஆறு மணியில் இருந்து காலை ஆறு மணி வரை நாட்டியாஞ்சலி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது..
திருக்கோயிலின் உள்ளேயும் வெளியேயும் ஆயிரக் கணக்கான அன்பர்கள்..
இங்கிருந்து சென்ற அன்பர்களால் சந்நிதானத்தை நெருங்க முடியாத படிக்கு நெரிசல்.. திரும்பி வந்து அவர்கள் சொன்னபடியால் கரந்தையிலேயே நான்கு கால வழிபாடுகளும் நிறைவாகின..
*
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே.. 4/11
-: திருநாவுக்கரசர் :-
அனைவரது குறைகளும் நீங்கி நலங்கொண்டு வாழ்வதற்கு பிரார்த்தனைகள்..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
முறைப்படி நான்கு கோவில்களுக்கு சென்று நான்கு கால வழிபாடுகளில் கலந்து கொண்டு தரிசனம் செய்தது சிறப்பு.
பதிலளிநீக்குஓம் நமச்சிவாய.
அன்பின் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குதங்களுக்கு நல்வரவு..
பதிவினை வெளியிட்டது கூட கோயிலில் இருந்து தான்..
தரிசனம் முடிந்து இப்போது தான் வீட்டுக்கு வந்தோம்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
முறையாக ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு கோயிலுக்குச் சென்று வழிபாடுகளைப் பார்த்துள்ளீர்கள். இறை அருள். எல்லாத் தரிசனங்களுக்கும் மிக்க நன்றி. தஞ்சைத் தளிக்குளத்தார் தான் தளிகேஸ்வரராக அருள் பாலிக்கிறாரோ? தஞ்சைத் தளிக்குளத்தார் கோயில் இருப்பிடம் பற்றிப் பல்வேறு விதங்களில் கேள்விப் பட்டிருக்கேன். இப்போதுள்ள ப்ரஹதீஸ்வரர் கோயிலுக்கு அருகே/அல்லது அந்த இடத்தில் தான் தளிக்குளத்தார் கோயில் இருந்ததாகச் சிலர் சொல்கின்றனர்.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குதஞ்சை சிவகங்கைக் குளத்தின் திட்டில் இருக்கும் சிறு கோயிலை தஞ்சைத் தளிக்குளம் என்று சொல்வதைப் பற்றி ஒரு பதிவில் சொல்ல வேண்டி வெகு நாட்களாக ஆசை.. இது மிகவும் விரிவான பதிவாக இருக்கும்..
விரைவில் பதில் கூறுவதற்கு முயற்சிக்கின்றேன்..
ஆனால் ஸ்ரீ தளிகேஸ்வரர் தலம் மிகப் பழமையானது.. கோயில் பிரதாப சிம்ம மன்னர் கட்டியது.. வெகு காலமாக கவனிப்பார் இன்றி இருந்து தற்போது திருப்பணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன..
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..
உங்கள் பதிவு மூலமாக சிவராத்திரி தரிசனம் கண்டேன். நெகிழ்ந்தேன். பாவா ஸ்வாமி கோயிலைப் பற்றி நான் விக்கிப்பீடியாவில் பதியவில்லை. மற்ற நான்கு கோயில்களைப் பற்றியும் எழுதியுள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போது எழுதுவேன்.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
மகா சிவராத்திரி தரிசனம் மிக அருமை.
பதிலளிநீக்குஒவ்வொரு கோவில் படங்களும் பதிவில் இடம்பெற்றதால் நாங்களும் கண்டு தரிசனம் செய்தோம்.
பொன்னியின் செல்வன் கதையில் தளிக்குளத்தார் கோயில் இடம் பெறும். நிறைய கோயில் தஞ்சையில் பார்த்து இருக்கிறேன். தளிக்குளத்தார் கோயில் பார்த்து இருக்கிறேனா என்று நினைவு இல்லை.
கோவிலில் இருந்து பதிவு போட்டது மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குதஞ்சை தளிக்குளம் என்பதைப் பற்றி விரைவில் பதிவு ஒன்றினைத் தருகின்றேன்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
தரிசனம் நன்று ஜி வாழ்க வையகம்.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
அண்ணா அருமை. நாலு கால பூஜைக்கும் சென்று தரிசனம் அதுவும் ஒவ்வொரு கோயிலில் ஒவ்வொரு பூஜை தரிசனம் கண்டு எங்களுக்கும் இங்கு பகிர்ந்திருக்கீங்க. எங்களுக்கும் கிடைத்தது.
பதிலளிநீக்குதோஸ்ட் பிள்ளையாரும், முருகனும் அழகோ அழகு! அலங்காரம் ஈர்க்கிறது!
கீதா
சகோ.. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநேற்று மிகவும் மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான நாள்..
ஸ்ரீ சிவாநந்தீஸ்வரர் கோயிலில் விநாயகர் முருகனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் மிகவும் அழகு..
தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நானும் நேற்று மூன்று கால பூஜை காண முடிந்தது.
பதிலளிநீக்குஇன்று உங்கள் வழி நாலுகால பூஜை கோயில்கள் படங்கள் என்று நல்ல தரிசனம் கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி
துளசிதரன்
அன்பின் துளசிதரன்..
நீக்குதங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குஓம் சிவாய நம..
நீக்குவாய்ப்பிருப்பின் சிவகங்கைக்குளத்தில் அமைந்துள்ள சிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில் என்ற தலைப்பில் என் வலைப்பூவில் எழுதியுள்ள கட்டுரையைக் காண அழைக்கிறேன். அக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்ற மறுநாள் அங்கு சென்றோம். தகவலுக்காக.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
தாங்கள் குறித்திருக்கும் பதிவினை அவசியம் பார்க்கின்றேன்..
தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
மனம் நிறையும் தரிசனம் ...
பதிலளிநீக்குஓம் நமசிவாய
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஓம் சிவாய நம..
நான்கு கால பூஜைகள்.... நான்கு கோவில்கள்.... சிறப்பு ஐயா. நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குநல்லதே நடக்கட்டும்..
தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..