நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
மயிலாடுதுறை..
தேவாரத்தில் பயின்று வரும் திருப்பெயர்..
பின்னாளில் மாயூரம் என்றானது.. பேச்சு வழக்கில் மாயவரம் என்றால் மக்களுக்கு பரம திருப்தி..
" ஆயிரம் ஆனாலும்
மாயூரம் ஆகுமா!.. " -
என்பது சொல்வழக்கு..
" மாயவரம் ஏரு பூட்டி.." -
என்ற வரிகளை மறக்கத் தான் முடியுமா?.. அந்த அளவுக்கு சிறப்பான கைவினைக் கலைஞர்கள் வாழ்ந்த மண்..
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் மயிலாடுதுறை என்றே ஆனது..
சோழ நாட்டின் சிறப்புகள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ள நகரம் மயிலாடுதுறை..
கடந்த 2020 டிசம்பர் 28 அன்று மாவட்டத் தலைநகர் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டது..
நகருக்குள்ளேயே சிவ ஆலயங்கள் பலவும் திவ்ய தேசக் கோயிலும்..
தவிர, மயிலாடுதுறையைச் சுற்றிலும் கோயில் சிறப்புடைய ஊர்கள்..
எல்லா சிறப்புகளிலும் குறிப்பிடத்தக்க ஒன்று - உண்டு எனில் உண்டு களிக்கும் உணவின் சுவை..
கையில் எடுக்கும் போதே உணவின் மணமும் சுவையும்..
ஆகா!..
தனித்தன்மை மிக்க கைப்பக்குவமுடைய சமையல் முறைகளுக்குப் பெயர் பெற்ற ஊர்களுள் மயிலாடுதுறையும் ஒன்று..
ஆனால், இன்றைய நாட்களில் நினைவுகள் மட்டுமே மிச்சம்..
அன்றைக்கு வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஸ்ரீ மயூரநாதர் திருக் கோயிலுக்குச் சென்றோம்.. அப்போது எடுக்கப்பட்ட படங்களில் ஒன்றிரண்டு இன்றைய பதிவில்..
சந்நிதி திறப்பதற்கு சற்று நேரம் ஆகும் என்றதால் வாசலில் இருந்தே தரிசனம்..
புகழ் பெற்ற பட்டமங்கலத் தெரு..
உள்ளாட்சித் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்ட நாள் அன்று.. தெருக்களில் இயல்பாக நடக்க முடியவில்லை.. படங்களும் எடுக்க இயலவில்லை..
கோயிலுக்குச் செல்லும் வழியில் தெருவோர காய்கறிச் சந்தையின் படங்கள் வீணாகி விட்டன.. அதில் கொஞ்சம் வருத்தம்..
எனக்கு மிகவும் பிடித்த அமைதியான நகரம்..
வாழ்க.. வளர்க!..
மீண்டும் சந்திப்போம்..
வாழ்க நலம்..
***
படங்கள் அருமை. தகவல்கள் சுவாரஸ்யம். மாயவரம் உனவு நன்றாய் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சென்றதில்லை.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. உண்மையில் மயிலாடுதுறையின் சுவையே அலாதியானது..
வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான, அழகான படங்கள். இங்கே மயூரநாதர் கோயிலுக்குப் போனதில்லை. ஆனால் திருஇந்தளூர் பரிமள ரங்கநாதரைப் பார்த்திருக்கோம். மாயவரத்தில் ஒரு கல்யாணத்திற்காக ஒரு ஓட்டலில் தங்கினோம். குழந்தைகளுக்கு மொட்டை போட வைத்தீஸ்வரன் கோயில் வந்தப்போ எல்லாம் மாயவரத்தில் உறவினர்கள் இருந்ததால் அங்கே தங்கினோம். ஒரே முறை காளியாகுடி(ஒரிஜினல்) ஓட்டலில் சாப்பிட்டோம். பின்னர் காளியாகுடி எனப் பெயர் மட்டும் இடம் பெற்றிருந்த ஓர் ஓட்டலில் காஃபி சாப்பிட்டோம். இங்குள்ள கோயில்களுக்கு அதிகம் போனதில்லை. ஏன் எனக் காரணமும் தெரியலை. மற்றபடி அடிக்கடி நாங்கள் இந்த ஊரைத்தாண்டிச் சென்றிருக்கோம்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. காளியாகுடி ஹோட்டல் என்பது அந்த காலத்தில் தஞ்சை மாவட்டம் முழுதும் பிரசித்தம்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
நானும் மயிலாடுதுறை இதுவரை சென்றதில்லை படங்கள் அருமை ஜி.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குஒருமுறை சென்று சுற்றிப் பார்த்து விட்டு வாருங்கள்..
மகிழ்ச்சி.. நன்றி..
வியாபார பயணத்தில் மயிலாடுதுறை உண்டு... நல்லதொரு ஊர்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
சுவாரஸ்யமான காட்சிகள் ..
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநல்லதொரு ஊர். சில முறை சென்றதுண்டு. ஆனாலும் அங்கே இருக்கும் கோவில்களுக்குச் சென்றதில்லை.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
மயிலாடுதுறையை மீண்டும் பார்க்க கிடைத்தது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குபிரசன்ன மாரியம்மனை தினம் தரிசனம் செய்வார்கள் என் கணவர்.பேருந்தில் கல்லூரிக்கு செல்லும் போது . காரில் போகும் போது அங்கு நிறுத்த முடியாது காரிலிருந்தே வணங்கி விட்டு செல்வார்கள். நாங்கள் கடைத்தெரு செல்லும் போதேல்லாம் அந்த கோயிலுக்கு போய் வருவோம். குருக்கள் எப்போதும் மலர்கள் கொடுப்பார் குங்குமத்துடன்.
படங்கள் எல்லாம் அருமை. மணிகூண்டு அருகில் காய்கறிகள் மாலை நன்றாக கிடைக்கும்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. மயிலாடுதுறைக்குச் செல்லும் போதெல்லாம் ஸ்ரீ பிரசன்ன மாரியம்மன் கோயில் செல்வதற்குத் தவறுவதில்லை.
நீக்குஇன்னும் எடுத்திருக்கலாம்.. வழிநெடுக தேர்தல் பணி..
வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..