நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 21, 2022

திரு மணிக்குன்றம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திருத்தலம் - தஞ்சபுரி

தஞ்சை
மாமணிக் கோயில்

ஸ்ரீதேவி பூதேவி
ஸமேத
ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள் திருக்கோயில்
மஹாஸம்ப்ரோக்ஷண
வைபவம்..




சனிக்கிழமை மாலை - முதற் கால யாக வேள்விகள் தொடர்ந்து நடைபெற்றன..




முதற்கட்டமாக மகா குண்டத்திற்கான அக்னி அரணிக் கட்டையில் இருந்து கடைந்தெடுக்கப்பட்டது..



அந்த அக்னியுடன் திருக்கோயிலை பட்டாச்சாரியர்கள் வலம் செய்தனர்..





வேத மந்திர பாராயணத்துடன் யாக குண்டத்தில் அக்னியை ஆவாகனம் செய்த பின் முதல் கால பூஜைகள் தொடர்ந்து நடந்தன..




யாகத்தில் இருந்த கலசத்தில் ஸ்வாமியை ஆவாகனம் செய்த பின் திருக்கோயிலை வலம் வந்த போது கடத்தினைத் தாங்கி வந்த பட்டாச்சார்யார் மீது அருள் இறங்கிய போது அங்கிருந்த சாந்நித்யம்
பொலிந்து விளங்கியது.







முதற்கால பூஜையின் நிறைவாக பூர்ணாஹூதியும் மங்கல ஆரத்தியும்  அதனைத் தொடர்ந்து ப்ரசாத விநியோகமும் நிகழ்ந்தன..



காணொளிகளை ஏற்றம் செய்ய முடியவில்லை..
காட்சிகளை மட்டும் பகிர்ந்துள்ளேன்...


நாரணி நற்கரம் ஏந்தினன் போற்றி
பூரணி பூமகள் பொருந்தினன் போற்றி
ஆறணி சங்கரன் பங்கினன் போற்றி
மாமணிக் குன்றனின் மலரடி போற்றி!.. 

ஓம் ஹரி ஓம்
***

11 கருத்துகள்:

  1. சிறு காணொளி ஒன்று இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.  படங்கள் யாவும் சிறப்பு.  தரிசனம் செய்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..
      காணொளி பதிவேற்றம் செய்வதில் ஏதோ பிழை இருக்கின்றது.. 0.20 நொடி காணொளி கூட பிரச்னை ஆகின்றது..

      முயற்சிப்போம்..
      வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. நானும் தரிசனம் கண்டேன் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான தரிசனம். அனைத்துப் படங்களும் அருமை. காணொளி விரைவில் பிரச்னைகள் இல்லாமல் போடும்படி பெருமாள் அருள் புரிவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      பெருமாளின் நல்லருளால் துன்பங்கள் தொலையட்டும்..
      நன்றியக்கா..

      நீக்கு
  4. கோயிலின் வெளி விளக்கு அலங்காரங்கள் அழகு. நல்ல தரிசனம். நன்றி துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  5. சிறப்பான அலங்காரங்கள். படங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட் ..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. படங்கள் அனைத்தும் அருமை நேரில் கலந்து கொண்ட நிறைவு.
    வண்ணவிளக்குகள் படம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..