நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இறைவன்
ஸ்ரீ மயூரநாதர்
அம்பிகை
ஸ்ரீ அஞ்சொலாள்
ஸ்ரீ அபயாம்பிகை
தீர்த்தம்
காவிரி, ரிஷப தீர்த்தம்
தல விருட்சம்
மா, வன்னி
இதன் ஆதி திருப்பெயர் கௌரி மாயூரம்.. காரணம் -
அம்பிகையாகிய பரமேஸ்வரி மயில் வடிவங்கொண்டு சிவ வழிபாடு செய்ததால்..
அம்பிகை மயிலாக தவஞ்செய்து கொண்டிருந்த வேளையில் ஈசன் தானும் மயில் வடிவம் கொண்டு ஆடினன்.. அம்பிகையும் மகிழ்ந்து உடனாடினாள்.. எனவே இத்தலத்தில் மயூர தாண்டவம், கௌரி தாண்டவம் என்று சிறப்பித்து சொல்வது வழக்கம்..
அம்பிகை மயில் வடிவங் கொண்டு சிவ வழிபாடு செய்த திருத்தலங்கள் திருமயிலாடுதுறையும் திருமயிலையும்..
அம்மையப்பன் ஆனந்த நடனம் ஆடிய வேளையில் நந்தியம்பெருமான் தானும் மகிழ்ந்து ஆடினார்..
திருக்கோயிலின் தென்புறமாக ரிஷப தீர்த்தம்.. குளத்தினுள் ரிஷப மூர்த்தி.. இதேபோல் காவிரி துலா கட்டத்தில் ஆற்றின் நடுவிலும் ரிஷப மூர்த்தி..
கங்கை வடக்கிலிருந்து ஒடி வந்து காவிரியுடன் கலந்து அம்மையப்பனைத் தரிசித்து புண்ணியம் சேர்த்துக் கொண்ட பெருமையை உடையது மயிலாடுதுறை..
துலா மாதமாகிய ஐப்பசியில் தான் காவிரியுடன் கங்கை கலந்திருக்கின்றாள்.. எனவே
ஐப்பசி முப்பது நாளும் சிறப்பு தான் இத்தலத்தில்..
ஸ்ரீ நான்முகப் பிரம்ம தேவனும் சரஸ்வதியும்
ஸ்ரீ மஹாவிஷ்ணுவும்
மஹாலக்ஷ்மியும்
சப்த கன்னியரும் அகத்திய மாமுனிவரும் வணங்கிய திருத்தலம்..
ஐப்பசி திருவிழாவின் போது மயூரநாதர் கோவிலில் இருந்து மயூரநாதர் - அபயாம்பிகையும், ஐயாறப்பர் கோவிலில் இருந்து ஐயாறப்பர் - அறம் வளர்த்த நாயகியும், காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து காசி விஸ்வநாதர் - விசாலாட்சியும் வள்ளலார் கோவிலில் இருந்து வதாரண்யேஸ்வரர் - ஞானாம்பிகையும் திருவீதி உலா எழுந்தருள, காவிரி துலா கட்டத்தில் ஏககாலத்தில் தீர்த்த வாரி, தீப ஆராதனை நிகழும்..
ஐப்பசி முப்பது நாட்களில் தீர்த்தமாட இயலாதவருக்காக கார்த்திகை முதல் நாள் கடை முழுக்கு.. இது ஊனமுற்ற ஒருவரது வேண்டுதலின் பேரில் இறைவன் நல்கிய வரம்
என்றுரைப்பர்..
குதம்பைச் சித்தர் ஜோதியானதும் இத்தலத்தில் தான்..
ஞானசம்பந்தர் திருப்பதிகங்கள் இரண்டும் திருநாவுக்கரசர் திருப்பதிகம் ஒன்றும் விளங்குகின்றன..
தற்போது திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது..
இங்கு மயூரநாதர் திருக்கோயிலை மட்டுமே தரிசித்துள்ளேன்.. ஏனைய திருக்கோயில்களையும் தரிசிக்கும் பேற்றினை ஈசன் எம்பெருமானும் அம்பிகையும் நல்குவர் என்ற பிரார்த்தனைகளுடன் இன்றைய பதிவு..
கரவின்றி நன்மா மலர் கொண்டு
இரவும் பகலுந் தொழுவார்கள்
சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
வரமா மயிலா டுதுறையே.. 1.038.1
-: திருஞானசம்பந்தர் :-
நிலைமை சொல்லுநெஞ்சே தவம் என்செய்தாய்
கலைகள் ஆயவல்லான் கயிலாய நன்
மலையன் மாமயிலாடு துறையன் நம்
தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே.. 5.039.6
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
ஏனைய திருக்கோவில்களையும் தரிசிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்க நானும் பிரார்த்திக்கிறேன். நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
தங்களது பிரார்த்தனை பலிக்கட்டும்...
ஆயுள், ஆரோக்ய, ஐஸ்வர்ய மங்கலங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
மகிழ்ச்சி.. நன்றி..
அன்பின் ஜி..
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.
வாழ்க வளமுடன்...
மயூரநாதரையும், அபயாம்பிகைஅம்மனையும் தரிசனம் செய்து வந்தது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குகோயில் படங்கள் மனதை மகிழ்ச்சி படுத்துகிறது.
சார் அந்த கோயிலில் திருவிளையாடல் புராணம் சொன்னார்கள்.
திருவாசகம் முற்றோதல் சமயம் பாடல்களுக்கு விளக்கம் சொல்வார்கள்.
மாயவரத்தில் உள்ள அனைத்து கொயில்களும் பார்க்கும் வாய்ப்பு விரைவில் அருள்வாள் அன்னை.
வெள்ளிக்கிழமை அன்னையின் தரிசனம் கிடைத்தது.
நன்றி வாழ்த்துக்கள்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குஇந்தப் பதிவின் படங்களைக் கண்டு தங்கள் மனம் நெகிழ்ந்து விடும் என்பது எனக்குத் தெரியும்...
ஸ்ரீ மயூரநாதர் கோயிலில் இருந்த போது தங்களையும் நினைத்துக் கொண்டேன்..
வழக்கம் போல இறைவன் ஒவ்வொருவரது வாழ்விலும் திருவிளையாடல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றான்..
தங்களது வருகையும் கருத்தும் வாழ்த்தும் நெகிழ்ச்சி.. நன்றி..
புராண விவரங்களை வாசித்து வரும் போது மயிலாகத் தவம் செய்த பகுதி வாசித்ததும் அட நம்ம திருமையிலைக்கும் சொல்லப்படுமே என்று பார்த்தால் நீங்கள் அதைச் சொல்லியதும் மயூரநாதர் பற்றியும் தெரிந்து கொண்டேன் துரை அண்ணா.
பதிலளிநீக்குகீதா
அன்பின் சகோ..
நீக்குமயிலாடுதுறையும் மயிலாப்பூரும் அம்பிகை வழிபட்ட தலங்கள்..
தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
இந்தக் கோயிலுக்கு நாங்களும் போயிருக்கோம். நல்ல அழகான/அமைதியான கோயில். அவயாம்பாள் சந்நிதியில் அம்பிகையின் திருவுருவம் மனதைக் கொள்ளை கொள்ளும். மற்றக் கோயில்களுக்கு எங்களாலும் போக முடியலை. பகிர்வுக்கும் நல்ல அரிய தகவல்களுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குஅழகான அமைதியான சூழல்.. திருப்பணி ஆரம்பிக்கப் பட்டுள்ளது..
வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா.
இக்கோயில் மயூரநாதரை பலவருடங்களுக்கு முன்பு தரிசித்ததுண்டு. அம்மை இப்போதும் மனதில். அதன் பின் தற்போது உங்கள் பதிவின் வழி. மிக்க நன்றி சார்.
பதிலளிநீக்குதுளசிதரன்
அன்பின் துளசிதரன்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
அம்மை இப்போதும் மனதில்..
அபயாம்பிகை என்றென்றும் அருள்வாள்..
மகிழ்ச்சி.. நன்றி..
வாழ்க நலம்..
அற்புத தரிசனம் .....
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
பதிலளிநீக்குநலமே வாழ்க..
அருமையான படங்கள்! சிறப்பான தகவல்கள்!
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குதகவல்களும் படங்களும் சிறப்பு. அனைத்து கோவில்களிலும் தரிசனம் கிடைக்க எம்பெருமான் அருள் புரியட்டும்.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..