நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில் ஒளிப் படங்களின் வழியே நீங்கள் காண்பது குறுங்காடு அல்ல.. அது மாதிரி!..
இப்பகுதியில் - பூளை, துத்தி, குன்றிமணி போன்ற மூலிகைகளும் தென்படுகின்றன..
புதிதாக வயல் வெளிகள் புறவழிச் சாலைகளாக உருமாறியுள்ள பகுதிகளில் பார்க்கவே அச்சம் ஊட்டும்படிக்கு சீமைக் கருவையும் இதர புதர்களும் மண்டிக் கிடக்கின்றன..
இந்தப் பகுதியெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன் பொன் விளைந்த பூமியாயிற்றே என்ற எண்ணம் நெஞ்சை அழுத்துகின்றது..
மேலே உள்ள படங்கள் தஞ்சை வெண்ணாற்றின் வடகரையில் எடுக்கப்பட்டவை..
***
வாழ்க நலம்..
நலமே வாழ்க..
***
பூவரசும் ஊமத்தையும் விஷம்தானே? மூலிகையாக பயன்படுகிறதா?
பதிலளிநீக்குபுகைப்படங்கள் நன்று.
பூவரசு இலைகள் தோல் நோய்க்குப் பயன்படுத்துவார்களே! காய்களைக் கூட அம்மியிலோ கல்லுரலிலோ அரைத்துப் பூசிப்பாங்க. ஒரு காலத்தில் கிராமங்களில் இதை எல்லாம் பார்த்திருக்கேன்.
பதிலளிநீக்குஊமத்தையும் இலைகளால் வாந்தி வந்தாலும் வாதத்துக்கு நல்லதெ எனக் கேள்விப் பட்டிருக்கேன்.
பதிலளிநீக்குதேள், பூரான் போன்ற விஷக்கடிகளுக்கும் ஊமத்தை இலையை வாட்டி அரைத்தோ வாட்டமல் அரைத்தோ ஏதோ ஒரு மாவு சேர்த்துப் பத்துப் போடுவாங்க. இதெல்லாம் கேள்வி தான். சின்ன வயசில் பெரியவங்க பேசிக்கிறதையும் பின்னாட்களில் ஆங்கில மருத்துவம் வீடுகளில் அதிகம் ஆனதில் வீட்டுப் பெரியவங்க சொல்லுவதையும் கேட்டது. ஆனால் பூவரசு பயன்படுத்திப் பார்த்திருக்கேன். மாமியார் மாமனாருக்குக் காலில் வந்திருந்த தோல் வியாதிக்குப் பயன்படுத்தி இருக்காங்க.
பதிலளிநீக்குநல்ல அருமையான காடு. இம்மாதிரித் தான் இங்கே ஶ்ரீரங்கத்திலிருந்து கல்லணை வழியாகக் கும்பகோணம் செல்லும் வழியெல்லாம் பார்க்கலாம். இங்கெல்லாம் இன்னமும் பசுமையைக் காப்பாற்றி வரும் மக்களுக்குக் கோடானுகோடி நன்றி. ஆனால் எங்க ஊர் மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பெரிய ஆலமரத்தை வெட்டப் போறாங்கனு கேள்விப் பட்டதிலிருந்து மனசே சரியில்லாமல் போச்சு. :(
பதிலளிநீக்குபடங்கள் அருமை...
பதிலளிநீக்குவெண்ணாற்றுகரையில் எடுக்கப்பட்ட படங்கள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதுரை அண்ணா படங்கள் ஆஹா என்ன பசுமை என்று மனதைக் கவர்கிறது. படங்கள் ரொம்ப அழகு. எத்தனை எத்தனை மூலிகைகள் நாம் சாதாரணமாகப் பார்க்கும் செடிகள்!
பதிலளிநீக்குஆமாம் வயல்வெளிகள் புறவழிச் சாலையாக மாறுவது மனதை அழுத்துகிறதுதான். நம்மால் எதையும் காக்க முடிவதில்லை எனும் போது மற்றவர்கள் நிலங்கள் எலலம் காக்க வேண்டும் என்று நினைப்பது சரியா என்று என் மனதையே நான் கேட்கத்தான் செய்கிறேன் அண்ணா. ஆனால் அழிவது தெரியும் போது வருத்தம் வரத்தான் செய்கிறது.
கீதா
வெண்ணாற்றங்கரை படங்கள் பார்த்தேன் - ரசித்தேன்.
பதிலளிநீக்குநெல் விளைந்த பூமி பலவும் தரிசாக இருப்பது வேதனை.