நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று (வெள்ளிக் கிழமை)
தஞ்சையை அடுத்துள்ள தென்குடித் திட்டை சிவாலய தரிசனம்..
ஸ்ரீ வசிஷ்ட மகரிஷி பிரதிஷ்டை செய்து வணங்கிய தலம்..
தேவகுருவாகிய ஸ்ரீ பிரகஸ்பதி வழிபாடு செய்த தலங்கள் மூன்றனுள் இத்தலமும் ஒன்று..
மற்றையவை - திருச்செந்தூர், திருவலிதாயம் ஆகியன..
இறைவன்
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ மங்களாம்பிகை
தீர்த்தம் சக்கர தீர்த்தம்
தல விருட்சம் வில்வம்
ஞான சம்பந்தப் பெருமானால் பாடல் பெற்ற திருத்தலம்..
ஸ்வாமி அம்பாள் சந்நிதிகளுக்கு நடுவில் தனிச் சந்நிதியில் தெற்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் ராஜ குரு என, விளங்குகின்றார்..
பரம்பொருளின் அம்சமாகிய
ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தியை (தேவகுரு ஆகிய - பிரகஸ்பதி) குரு பகவான் என்று சொல்லி வழிபடுதல் முறையல்ல..
தென்குடித் திட்டையே குரு - ஸ்தலம்..
தேவகுரு பிரகஸ்பதி
கிரக நிலையில் வியாழன் எனப்படுகின்றார்..
திருக்கோயிலின் படங்களை மற்றொரு பதிவில் தருகின்றேன்..
*
தென்குடித் திட்டை தலத்தை அடுத்து பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் திரு மடத்தில் தரிசனம்..
பைரவ உபாசகராகிய ஸ்ரீ ஸ்வாமிகள் பாடகச்சேரி கிராமத்தில் பல காலம் தங்கியிருந்திருக்கின்றார்..
அந்த இடத்தில் தற்போது திருப்பணி வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன..
அந்தக் காலத்தில்
ஸ்ரீ ஸ்வாமிகளைச் சுற்றிலும் நாய்கள் விளங்கியதாகப் படித்திருந்ததை இன்று கண்கூடாக இங்கே கண்டேன்..
*
பாடகச் சேரி மடத்தில் தரிசனம் முடிந்தபின் ஆலங்குடிக்கு சற்று முன்னால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சங்கட ஹர ஸ்ரீ மங்கல மாருதி திருக்கோயிலில் தரிசனம்..
கோயிலுக்குள் போட்டோ/ வீடியோக்கள் எடுக்கக் கூடாது என்றிருப்பதால் வெளியில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்...
தத்புருஷாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ: மாருதி ப்ரசோதயாத்
*
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
தைவெள்ளிக் கிழமைப் பதிவு போடுவீர்களே, காணோமே என்று நேற்றே பார்த்தேன். இன்று தரிசனம் கிடைத்தது.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
தை வெள்ளி அனைத்திலும் பதிவுகள் தந்திருக்கின்றேன்..
இப்போது மாசி மாதம் ஆயிற்றே..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
உங்கள் வழி நாங்களும் தரிசனம் பெற்றோம். அனைவருக்கும் நல்லதே கிடைக்கட்டும்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்..
தரிசனம் நன்று.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குவருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குசிவாய நம ஓம்..
நீக்குநான் சென்ற இடங்கள். உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் செல்லும் வாய்ப்பு. நன்றி.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..
நீக்குதிட்டை. திருச்செந்தூர், திருவலிதாயம் மூன்று கோயில்களுக்கும் போயிருந்தாலும் நீங்கள் கூறியுள்ள சிறப்பை இன்றே அறிந்தேன். நல்லதொரு பதிவுக்கு நன்றி.பலரும் தக்ஷிணாமூர்த்தியையே குருவாக வழிபடுகின்றனர். அதாவது பிரகஸ்பதி என்னும் தேவகுருவாக! :(
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குசிவ வடிவமாகிய
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி - 1970 களில் குருபகவான் என்று அன்றைய ஊடகங்களால் உரு மாற்றம் செய்யப்பட்டார்..
இன்றைக்கும் அது தொடர்கின்றது..
தங்கள் வருகையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
நேற்று வலைப்பக்கம் வரவில்லை என்பதால் பதிவு விட்டிருக்கோ என்று பார்த்தால் இல்லை...
பதிலளிநீக்குஇக்கோயில்கள் பற்றி தெரிந்து கொண்டேன் அண்ணா.
கீதா
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குகுறைந்த பட்சமாக இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவு..
சென்ற வார காற்றினிலே - 5 பற்றிய தங்களது கேள்விக்கு பதில் தர வேண்டி உள்ளது..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி . நன்றி சகோ..
கோயில் படங்களும் தகவல்களும் சிறப்பு.
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி துளசிதரன்..