நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
எங்கள் பிளாக்கில் கடந்த வாரம் வெளியான காற்றினிலே.. குறுந் தொடரின் ஐந்தாம் பகுதியில் சகோதரி கீதா ரங்கன் அவர்கள் கேட்டிருந்த சந்தேகத்திற்காக இன்றைய பதிவு..
***
எனக்கு எழுந்த கேள்விகள்.. துரை அண்ணா விளக்குங்க ப்ளீஸ்..
அவந்திகாவும் மித்ராவும் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்?.. அவர்கள்தான் அந்தக் கயவனை கொன்று வென்றுவிட்டார்கள்..
அப்படியே அந்த நாகரத்தினக் கல் அவர்கள் உக்ரத்துடன் தேடியதால் டக்கென்று கிடைக்க வில்லை..
ஆனால் உயிரை மாய்த்துக் கொள்ளாமல் கொஞ்சம் தேடியிருக்கலாமோ.. அவர்கள் மீண்டும் பிறப்போம் என்றும் சொல்கிறார்கள்.. இந்தப் பகுதி தான் புரிய வில்லை அண்ணா..
கீதா..
***
அன்பின் நன்னெஞ்சினர் அனைவருக்கும் வணக்கம்..
நான் அவந்திகா ஸ்ரீ ஷாந்தினி பேசுகின்றேன்..
தங்களுடன் - கடந்த ஐந்து வாரங்களாக செவ்வாய்க் கிழமை தோறும் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட பொழுதுகள் இனிமையானவை...
காலங்கள் முற்பட்டது.. ஆயினும் உங்கள் அனைவருக்கும் அன்பின் இளைய - இனிய மகளாக நிற்கின்றேன்..
நமது சந்தோஷங்களும் சீற்றங்களும் பிறவிகள் தோறும் தொடர்ந்தே வருகின்றன..
எனவே மனம் இன்னும் ஆறவில்லை..
நாம் புறத்தே இருந்து வீழ்த்தப்பட்டாலும் வெற்றி நம்முடையதாகவே இருக்கின்றது..
ஆயினும் அன்றைக்கு ஏன் இப்படியான விபரீத முடிவு என்ற ஆதங்கத்திற்கும் இரக்கத்திற்கும் நன்றி..
என் தந்தையைக் கொன்ற அந்த மூர்க்கனை வேரறுத்த பின்னர் தனியளாகி விட்டேன்..
அவனை வீழ்த்தி விட்டேன்.. வெற்றி தான்..
ஆனாலும் அதுவே பாதுகாப்பானதா?...
இன்றைக்கு இவன்..
நாளைக்கு எவனோ?..
இப்படியான கேள்வியால் பகல் பொழுதும் இரவாகிப் போனது..
அரண்மனை முழுதும் சோகம் நிறைந்து விட்டது...
மிலேச்சர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நிலைக்கு திலகபுரி சமஸ்தானத்தின் மக்கள் அனைவரும் தள்ளப்பட்டனர்.. பாதுகாப்பின் நிமித்தம்
உஜ்ஜயினிக்கு செல்வது கூட அப்போது ஆபத்தாக இருந்தது.. விஷக் கிருமிகள் காற்றில் பரவியதான சூழ்நிலை..
எதையும் ஆழ்ந்து சிந்திக்க வில்லை.. ஆயினும் நொடிப் பொழுதில் உணர்ந்து மேற்கொள்ளப்பட்டதே உயிர்த் தியாகம்..
அதற்கு மிக முக்கிய காரணம் - மிலேச்சர்களுக்கு இரையாகி விடக்கூடாது என்ற எண்ணமே..
எனக்கு உறுதுணையாய் நின்றவள் எனது ஆருயிர்த் தோழி மித்ரா சுபாஷினி..
" மீண்டும் மீண்டும் பிறந்திருப்போம்!.. " - என்று நானே மித்ராவை அழைத்தேன்..
ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளீஸ்வரியின் அருளால் தான் அன்றைக்கு வென்றேன் என்பதை அடுத்து வந்த பிறவியில் தான் உணர்ந்து கொண்டேன்.. இனிமேலும் அன்னை துணையிருப்பாள் என்பதும் எனக்குத் தெரியும்..
ஒருவன் அல்லன் கொடூரன்..
அன்றைக்கு தேசத்தினுள் புகுந்த
ஒவ்வொருவரும் கொடூரர்களே!..
பொன்னை அடையும் முன் பொருளை அடையும் முன்
பெண்ணை அழித்தவர்களே அதிகம்!...
பாரத தேசத்தின் மண்ணை மிதித்தும் நல்ல புத்தி வரவில்லை எனில் வேறு என்ன தான் செய்வது?..
இம்மண்ணின் கன்னியர் கண்ணீர் சிந்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம்..
அதே சமயம் தம்மைக் காத்துக் கொள்வதில் தாமும் முனைப்பாக இருக்க வேண்டும் இந்நாட்டின் கன்னியர்..
இம்மண்ணின் ஞானியாகிய வள்ளுவப் பெருந்தகை அறிவுறுத்தியபடி - தம்மைக் காத்துக் கொள்வதில் மங்கையர் விழிப்புடன் இருத்தல் வேண்டும்..
நானும் என் தோழியும் பிரிவற்றவர்கள்..
இப்போது கூட நீலு என்னும் அப்பாவிப் பெண்ணைக் காப்பதற்காகவே வந்திருக்கின்றோம்..
நாளை பொழுது விடியும் பொழுதில் அது தங்களுக்குப் புரியும்... கூடுதலாக
மகிழ்ச்சியான நிகழ்வுகளும் தங்களுக்காகக் காத்திருக்கின்றன..
அன்பில் கலந்த தங்கள் அனைவருக்கும் குறிப்பாக எங்களைத் தூரிகையால் தீட்டிய சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வணக்கம்.. நன்றி..
மீண்டும் சந்திப்போம்..
ஓம் சக்தி ஜெய் துர்கா!..
என்றும் அன்பில்,
மித்ரா சுபாஷினியுடன்
அவந்திகா ஸ்ரீ ஷாந்தினி..
***
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
***
விளக்கம் - வித்தியாசமான முறையில்.. சூப்பர்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
வித்தியாசமான முறையில் விளக்கம். இப்போதுள்ள பிறவியில் அவர்களுக்குத் தங்கள் முன் பிறவி குறித்த நினைவுகள் இருந்தனவா? இப்போதைய பிறவிக்குக் காரணம் முன்பிறவிக்கான பழி வாங்கலா?
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குபிரகாம்யம் எனும் சித்தி கைவரப் பெற்றால் அப்போது முந்தைய நினைவுகளும் கூடவே இருக்கும்...
நம் பக்கத்தில் சொல்வார்கள்..
விட்ட குறை.. தொட்ட குறை.. என்று..
எழு பிறப்பும் ஏமாப்புடைத்து.. என்கின்றார் வள்ளுவப் பெருந்தகை.. அதை உள்வாங்கிக் கொண்டால் இதெல்லாம் இலகுவாக விளங்கி விடும்...
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
பாரத தேசத்தின் மண்ணிலேயே பிறந்தும் பெண்களைத் துன்புறுத்தும் கயவர்களை என்ன செய்வது? பெண்களும் அதற்கான முனைப்போடு இருக்காமல் நாகரிகம் என்னும் பெயரில் சிரிப்பாய்ச் சிரிக்கிறார்களே! :(
பதிலளிநீக்கு// பாரதத்தின் மண்ணிலே பிறந்தும் பெண்களைத் துன்புறுத்துகின்றார்களே!..
நீக்குஅவர்களை என்ன செய்வது?..//
சில தினங்களுக்கு முன் நினைத்துக் கொண்டிருந்தேன்..
அண்ணி என்றும் மதிக்காமல் ஒற்றை ஆடையுடன் இருந்த திரௌபதியின் சேலையைப் பற்றி இழுத்த துச்சாதனனின் வலது கரம் பிய்த்து எடுக்கப்பட்டதே..
அது தான் நீதி..
தம்மிடம் பணிப் பெண்ணாக அடைக்கலம் தேடி வந்தவள் என்ற அன்பில்லாமல் சைந்தரி யை (திரௌபதி) அடைய முற்பட்ட கீசகன் அடையாளம் தெரியாதபடிக்கு அழிந்து போனான்..
அது தான் நியாயம்..
நமக்கு அருகிலேயே உதாரணம்..
காவிரிப் பூம்பட்டினத்தில் மணிமேகலையை அடைய முற்பட்ட உதயகுமாரனின் கதி என்ன ஆயிற்று!..
சமயக் கல்வி அதாவது பாரத தேசத்தின் ஆன்மீக நுட்பங்களை அறிந்தாலே மனிதனுக்கு நல்ல கதி..
வள்ளுவப் பெருமான் வலியுறுத்திய நிறை காக்கும் காப்பினை அறியாமல் என்னைப் பார்.. என் அழகைப் பார்.. என்று இன்றைய பெண்கள் தருக்கித் திரிந்தால் கதி அதோ கதி தான்!..
அக்கா அவர்களது கருத்துரையால் விரிவாகச் சொல்ல முடிந்தது.
மகிழ்ச்சி.. நன்றியக்கா..
விளக்கம் அருமை ஜி நாளை பதிவு சுபமான முடிவுக்கு வரும் என்பதில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
நாளைக்கு மகிழ்ச்சி என்பதில் கூடுதல் மகிழ்ச்சி..
மகிழ்ச்சி.. நன்றி..
நல்ல விளக்கம்...
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குஅவந்திகா பேசியது அருமை.
பதிலளிநீக்குகீதா ரெங்கனின் கேள்விக்கு அருமையான விளக்கம்.
வெகு நாட்களுக்குப் பிறகு தங்களுடைய அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி..நன்றி..
நீக்குநலம் வாழ்க என்றென்றும்
வாழ்த்துக்கு நன்றி
நீக்குஓ துரை அண்ணா ஆ!!! என் கேள்விக்கான பதிலா!! பதிவாக....நன்னி நன்னி!!! அண்ணா. இதோ முழுவதும் வாசித்து விட்டு வருகிறேன் அண்ணா...
பதிலளிநீக்குகீதா
காலையில் இருந்து வருவீர்கள் வருவீர்கள் என்று இருந்தேன்..
நீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
அண்ணா அவந்திகாவே பேசியது போன்று எழுதியிருக்கும் பதிவு அருமை. நன்றி நன்றி துரை அண்ணா.
பதிலளிநீக்குவிளக்கம் அருமை. அவளும் மித்ராவும் தனிமையாகிவிட்டனரே என்று தோன்றியதுதான் அன்று. அதனால்தான் மேலும் ஆபத்திலிருந்து தப்பிக்கத்தான் அந்த முடிவு என்று தோன்றினாலும் வீர மங்கைகள் அவர்கள் அந்த முடிவை எடுத்ததால் தோன்றிய சில கேள்விகள்.
மிக்க நன்றி அண்ணா.
ஓ அப்ப நாளை மற்றொரு கதாபாத்திரமா நீலு!! துரை அண்ணாவின் கதைகள் நல்ல முடிவைத்தான் தாங்கிவரும்! நாளை அவந்திகாவையும் மித்ராவையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
மீண்டும் நன்றியுடன்
கீதா
ஆகா.. அருமை..
நீக்குமுதல் அத்தியாயத்தில் வந்த நேபாளத்துப் பெண் தான் நீலு..
விடுதியின் வரவேற்புப் பணி..
அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நல்ல அழகான விளக்கம். எங்கள் ப்ளாகில் நாளைய கதையின் இறுதிப் பகுதியை ஓரளவு யூகிக்க முடிகிறது.
பதிலளிநீக்குதுளசிதரன்
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி துளசிதரன்..
நல்ல்தொரு விளக்கம்.
பதிலளிநீக்கு